ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை பாதுகாக்க 10 சிறந்த வழிகள்:

Written By: Super Admin
  X

  ஒரு ஸ்மார்ட்போனை ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ கொடுத்து வாங்கினாலும், அதில் பேட்டரியின் சார்ஜ் அதிக நேரம் நிற்கவில்லை என்றால் பயனில்லை.

  ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை பாதுகாக்க 10 சிறந்த வழிகள்:

  தற்போது விரைவாக சார்ஜ் செய்யும் வசதியும், வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதியும் வந்துவிட்டாலும், சில சமயம் நாம் முக்கிய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சார்ஜ் இல்லாமல் நம்மை எரிச்சல் அடைய செய்யும்.

  ஜியோவில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா..? சரி செய்ய தீர்வுகள்..!

  எனவே நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் சார்ஜை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பத்ற்கான வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.

  சிறந்த பேட்டரி ஆயுள் ஸ்மார்ட்போன்கள்!!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கூலாக இருக்க வேண்டும்

  ஸ்மார்ட்போன் எப்போதும் ஹீட்டாக இல்லாமல் கூலாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி கூடுமானவரை ஸ்மார்ட்போனை உங்கள் பாக்கெட்டில் வைக்காமல் வெளியே வைத்துவிடுங்கள். அதிகமாக சார்ஜ் ஏற்றியதால் அதிகமாக ஹீட்டாக இருப்பதாக சிலர் தவறாக நினைத்து கொள்வார்கள். அதில் உண்மையில்லை. எனவே நீங்கள் எப்போதும் கூலாக இருப்பது போல் உங்கள் போனையும் கூலாக வைத்து கொள்ளுங்கள்.

  3000 mAh திறன் கொண்ட பேட்டரி ஸ்மார்ட்போன்கள் இங்கே கிளிக் செய்யவும்

  உங்கள் போனின் சார்ஜை சாப்பிடும் ஆப்ஸ்

  ஒருசில இலவச ஆப்ஸ்களில் பாப்-அப் விளம்பரங்கள் தோன்றி உங்களை சார்ஜை உங்களுக்கு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இதுபோன்ற ஆப்ஸ்களை கூடுமானவரை தவிர்த்தால் போதும். உங்கள் போனின் சார்ஜை காப்பாற்றி கொள்ளலாம்.

  4000 mAh திறன் கொண்ட பேட்டரி ஸ்மார்ட்போன்கள் இங்கே கிளிக் செய்யவும்

  பவர் சேவிங் ஆப்ஸ்-ஆல் பயன் உண்டா?

  அனைத்து வகை பவர் சேவிங் ஆப்ஸ்களும் உங்களுக்கு பயனை தவிர தருவதில்லை. இவை பெயருக்கு பவர் சேவிங். ஆனால் ஒருசில பவர் சேவிங் ஆப்ஸ்கள் உங்கள் போனின் பவரை விழுங்கும் ஆபத்தும் உண்டு. எனவே பவர் சேவிங் ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் முன் யோசியுங்கள்

  இதுவும் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம்

  மெயில் அல்லது மெசேஜ் வந்தால் நோட்டிபிகேஷன் தரும் புஷ்ஷி ஆப்ஸ்களும் சார்ஜ் இழப்பதற்கு காரணமாக இருக்கும். எனவே முக்கியமான நோட்டிபிகேஷனை வழங்குவதற்கு மட்டும் அனுமதியுங்கள்.

  5000 mAh திறன் கொண்ட பேட்டரி ஸ்மார்ட்போன்கள் இங்கே கிளிக் செய்யவும்

  பிரைட்னெஸ்-ஐ எப்படி வைக்க வேண்டும்?

  ஆட்டோ பிரைட்னெஸ் ஆப்சனை தேர்வு செய்தால் சார்ஜ் பாதுகாப்பாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் தேவைக்கேற்ப, சுற்றுப்புறத்தில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னெஸை தேர்வு செய்து உங்கள் போனின் சார்ஜை காப்பாற்றி கொள்ளுங்கள்.

  6000 mAh திறன் கொண்ட பேட்டரி ஸ்மார்ட்போன்கள் இங்கே கிளிக் செய்யவும்

  வைப்ரேஷனால் சார்ஜ் போகுமா?

  கண்டிப்பாக போகும். சைலண்ட் மோட்-இல் வைத்திருக்கும் பெரும்பாலானோர் வைப்ரேஷனை ஆன் செய்திருப்பார்கள். மெசேஜ் அல்லது அழைப்பு வரும்போது இயங்கும் வைப்ரேஷனால் கண்டிப்பாக சார்ஜ் பெருமளவு இழப்பு ஏற்படும். எனவே இந்த ஆப்சனை கண்டிப்பாக தெவை என்றால் மட்டும் பயன்படுத்துங்கள்

  செல்ப் கண்ட்ரோல் வேண்டும் பாஸ்:

  இதுதான் ரொம்ப முக்கியமான பாயிண்ட். நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அளவுக்கு என ஒரு வரையறை வேண்டும். கேம்ஸ் விளையாடினாலோ, சமூக வலைத்தளங்களில் கடலை போட்டாலோ, அல்லது பேசினாலோ எதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு மீறி பேசினால் அமிர்தம் மட்டும் நஞ்சல்லா, சார்ஜருக்கும் பேஜார்தான்

  சேவ் மோட்-ஐ பயன்படுத்துங்கள்

  தற்போது வெளிவரும் அனைத்து ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் சேவ் மோட் வசதி உள்ளது. இதை நீங்கள் Enable செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜ் பெருமளவு காப்பாற்றப்படும்

  மாற்று ஏற்பாடு அவசியமா?

  அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரியை வைத்து கொள்வது நலம். ஒரு பேட்டரியில் சார்ஜ் இறங்கிவிட்டால் உடனே மாற்று பேட்டரியை போட்டு நமது வேலையை தொடரலாம்.

  தேவையில்லாத ஆப்ஸ்களை அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்

  உங்களுக்கு அதிகமாக தேவைப்படாத ஆப்ஸ்களை யோசிக்காமல் அன் - இன்ஸ்டால் செய்யுங்கள். அது உங்கள் சார்ஜை பெருமளவு காக்கும். அவ்வப்போது தேவைப்படும் ஆப்ஸ்களை மட்டும் பயன்படுத்தி அனாவசிய ஆப்ஸ்களை நீக்கினால் உங்களுக்கு தேவையான சார்ஜ் எப்போதும் உங்கள் மொபைலில் இருந்து கொண்டே இருக்கும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Smartphone battery life and the myths related to it are talked by everyone. There are many useful tips to extend the battery life. Here, we have detailed some smartphone battery hacks, tips and myths that you need to know. Read more...

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more