Home
Mobile

1 வருஷம் பழசாகிடுச்சுனு.. இவ்ளோ பெரிய விலைக்குறைப்பா? iQOO-க்கு பெரிய மனசு.. மிச்சமானது நம்ம காசு!

ஐக்யூ (iQOO) நிறுவனம் மேலுமொரு ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாக ஐக்யூ இஸட்7 5ஜி (iQOO Z7 5G) அறிமுகமான வேகத்தில் பழைய ஐக்யூ இஸட்6 5ஜி (iQOO Z6 5G) மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஐக்யூ 9 எஸ்இ (iQOO 9 SE) ஸ்மார்ட்போனின் மீதும் கடுமையான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான பிளாக்ஷிப் ஐக்யூ 9 சீரீஸின் கீழ் வெளியான ஒரு மாடலாகும். இது ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோவுடன் அறிமுகமானது.

இந்தியாவில் iQOO 9 SE ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு!

ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகமானது: 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ். இருப்பினும் பேஸிக் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் மீது மட்டுமே விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ 9 எஸ்இ (8ஜிபி + 128ஜிபி) புதிய விலை: இந்தியாவில், ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ 33,990 க்கு அறிமுகமானது. தற்போது இது ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஐக்யூ 9 எஸ்இ மாடலின் ஆரம்ப விலை ரூ.30,990 க்கு இறங்கி வந்துள்ளது. இது ஸ்பேஸ் ஃப்யூஷன் மற்றும் சன்செட் சியரா என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஐக்யூ 9 எஸ்இ அம்சங்கள்: இது 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.62-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 9 எஸ்இ, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஃபன்டச் ஓஎஸ் 12 (FunTouch OS 12) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 48எம்பி மெயின் கேமரா + 13எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2MP மோனோக்ரோம் சென்சார் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஐக்யூ 9 எஸ்இ மாடலானது 66W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. சற்றே பழைய போனாக இருந்தாலும் கூட இது ஸ்மூத் ஆன பெர்ஃபார்மென்ஸ், திறமையான கேமராக்கள், நல்ல பேட்டரி லைஃப் மற்றும் விலையை மீறிய ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளதால் இதை இப்போதும் நம்பி வாங்கலாம்!

முன்னரே குறிப்பிட்டபடி, சமீபத்தில் தான் இந்நிறுவனம் ஐக்யூ இஸட்7 5ஜி என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1 Year Old iQOO Smartphone Received Rs 3000 Price Cut in India Check iQOO 9 SE New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X