Home
Mobile

இன்னும் மவுசு குறையல.. திடீர் விலைக்குறைப்பை பெற்ற iQOO-வின் பிரபலமான 5G போன்!

"கொஞ்சம் பழசு தான்.. ஆனா இன்னமும் மவுசு குறையல!" என்று கூறத்தகுதியான ஒரு சில போன்களில் ஐக்யூ இஸட்6 5ஜி (iQOO Z6 5G) ஸ்மார்ட்போனும் ஒன்றாகும். தற்போது இதன் மவுசு இன்னும் அதிகரிக்கும் என்பது போல் தெரிகிறது; ஏனென்றால் ஐக்யூ நிறுவனம் இந்த போனின் மீது விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இந்த விலைக்குறைப்பு ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்கு பின் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஐக்யூ இஸட்6 5ஜி எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றுள்ளது? இதன் பழைய விலை என்ன, புதிய விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

திடீர் விலைக்குறைப்பை பெற்ற iQOO-வின் பிரபலமான 5G போன்!

நினைவூட்டும் வண்ணம், ஐக்யூ இஸட்6 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த மார்ச் 2022 இல் இந்தியாவில் அறிமுகமானது. இது 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.15,499, ரூ.16,999 மற்றும் ரூ.17,999 க்கு வெளியானது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பிற்கு பின்னர் ஐக்யூ இஸட்6 5ஜி-யின் 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்களானது முறையே ரூ.14,499, ரூ.15,999 மற்றும் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பசிபிக் நைட் மற்றும் நார்வே ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்6 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் நானோ-சிம் கார்ட்டிற்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் இது 1080 x 2408 பிக்சல் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.58-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் (Octa-core Snapdragon 695 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 12 (Funtouch OS 12) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

அதில் 50எம்பி சாம்சங் ISOCELL JN1 சென்சார் மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி பொக்கே கேமரா உள்ளது (பொக்கே கேமரா 6ஜிபி மற்றும் 8ஜிபி மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது; பேஸிக் 4ஜிபி மாடலில் கிடைக்காது). முன்பக்கத்தை பொறுத்தவரை இதில் 16-மெகாபிக்சல் சாம்சங் 3P9 செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.1 மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
After iQOO Z7 5G Launched iQOO Z6 5G gets Rs 1000 Price Cut in India Check New Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X