சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

By Siva
|

சீனா, இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளில் ஸ்மார்ட்போன் சந்தையின் கிங்-ஆக விளங்கி வரும் சியாமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பவர்பேங்க், ஹெட்போன்ச், உடைகள் மற்றும் ஏர் ஃபியூரிஃபையர் போன்ற பல சாதனங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

ஏர் ஃபியூரிஃபையரை பொறுத்தவரை சியாமி நிறுவனம் தற்போதைய தலைமுறையினர்களுக்கு ஏற்ற வகையில் தரமான உற்பத்தியை செய்து கொண்டு வருகிறது. வரும் நவம்பர் 11ஆம் தேதி சீனாவில் புதிய வகை ஏர் ஃபியூரிஃபையர் மாடல் ஒன்றை சுமார் ரூ.14,770க்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டாப் 5 வாட்ஸ்ஆப் மோசடிகள் : சிக்கி கொள்ளாதீர்கள்..!

சீனாவை அடுத்து இந்தியாவிலும் மக்கள் தொகை அதிகம் என்பதால் ஏர் ஃபியூரிஃபையர் என்பது எதிர்காலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. இவ்வருட இறுதியில் இந்தியாவில் தனது ஏர் ஃபியூரிஃபையர் புரோ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்யவுளடு. இந்த மாடல் குறித்த ஐந்து முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

காற்றில் மாசு எவ்வளவு என்பதை டிஸ்ப்ளேவில் அறியலாம்

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலில் உள்ள OLED டிஸ்ப்ளே மூலம் நம்மை சுற்றியுள்ள காற்றில் எந்த அளவுக்கு மாசு உள்ளது என்பதை தெளிவாக அறியும் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த டிஸ்ப்ளேவில் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜியோ ரெடி.! ஏர்டெல் ரெடியா.?? இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவை.!

மேலும் இதில் உள்ள இண்டிகேட்டர் காற்றில் மாசு அதிகம் இருந்தால் சிகப்பு லைட்டும், குறைவாக இருந்தால் பச்சை லைட்டும் எரிவதால் நம்முடைய சுற்றுப்புற சூழ்நிலையை நாம் தெளிவாக அறிந்து கொள்ள உதவியாக உள்ளது.

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

ஏர் ஃபியூரிஃபையர் புரோ எவ்வளவு ஏரியாவை கவரேஜ் செய்யும்?

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ 735x200x260mm

அளவிற்கு டைமன்ஷன் உள்ளது. இதன் காரணமாக இண்டோர் ஏரியாவில் இந்த டிவைஸ் சுமார் 60 சதுர மீட்டர் அளவிற்கு காற்றை சுத்தப்படுத்திவிடும். இதற்கு முன்னர் வெளிவந்த டிவைஸ்கள் வெறும் 37 சதுர மீட்டர் அளவு மட்டுமே சுத்தப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 9.7 கிலோ எடை உள்ள இந்த டிவைஸ் பழைய மாடல் டிவைஸை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக பரப்பளவில் உள்ள காற்றை சுத்தப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

வேறு என்ன விசேஷம் இதில்?

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலில் மூன்று விதமான லேயர் பில்டர் உள்ளது. PET பில்டர், EPA பில்டர் மற்றும் கார்பன் பில்டர் ஆகிய மூன்று பில்டர்கள் இருப்பதால் இதிலிருந்து வெளிவரும் காற்றின் சுத்தம் நம்பகத்தன்மையை கொண்டது.

மேலும் இதில் நம்முடைய சுற்றுப்புறத்தில் உள்ள தட்பவெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றின் குவாலிட்டி சென்சார் ஆகியவைகளை காட்டும் சென்சார்கள் உள்ளதால் காற்றில் 0.3μm அளவுக்க் மாசு இருந்தாலும் கண்டுபிடிக்கப்படும். மேலும் இந்த டிவை?ஸ் மணிக்கு 500 கியூபிக் மீட்டர் அளவுள்ள காற்றை சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலின் முக்கிய அம்சங்கள்

கண்ட்ரோல் செய்ய உதவும் ஆப்:

சியாமி நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர் புரோ மாடலை கண்ட்ரோல் செய்ய மி ஹோம் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் செயல்படும் வகையில் இந்த ஆப்பை வைபையிலும் பயன்படுத்தலாம். இந்த ஆப்பின் உதவியால் ஏர் ஃபியூரிஃபையர் டிவைஸை ஆன் செய்ய, ஆஃப செய்ய மற்றும் நைட் மோட், உள்பட பல வசதிகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Air Purifier Pro comes with an OLED display and can be controlled over Wi-Fi.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X