ஜியோ ரெடி.! ஏர்டெல் ரெடியா.?? இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவை.!

டெலிகாம் துறையில் புயலை கிளப்பிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவையை தொடங்கும் முனைப்பில் உள்ளது.

|

இன்னும் இரண்டே மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்தையில் களம் காணும். மறுபக்கம் ஏற்கனவே இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் முன்னணி இந்திய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிற போட்டியாளர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறது.

மொபைல் சந்தைமீது கிட்டத்தட்ட தனது முன்னணியை நிகழ்த்திய பிறகு, ரிலையன்ஸ் இப்போது டிஜிட்டல் டிவி சந்தை இடத்தை அடைய திட்டமிட்டுள்ளது. ஆம், அதன் புதிய முயற்சியான ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான டிடிஎச் சேவை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதமான வாய்ப்பு

அற்புதமான வாய்ப்பு

ரிலையன்ஸ் ஜியோவினால் பார்தி ஏர்டெல் நிறுவனம் பல அற்புதமான வாய்ப்புகளை தனது ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு, டிடிஎச் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது எனினும்,ஜியோ மாதிரி இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவையை ஒரு நல்ல வேகத்தில் வழங்கினால் ஏர்டெல் நிறுவனம் பலமான போட்டி ஒன்றை சந்திக்கததயாராக வேண்டியது தான்.

"சிறந்த" டிடிஎச் சேவை

இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது என்றாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் "சிறந்த" டிடிஎச் சேவையை வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என்பது உறுதி. மொபைல் நெட்வொர்க் வழங்குநர்கள் மத்தியில் ஒரு புரட்சியை உண்டாக்கிய ஜியோ இப்போது பிராட்பேண்ட் உலகை கலக்க திட்டமிட்டுள்ளது.

கடும் டிடிஎச் சேவை போட்டி

கடும் டிடிஎச் சேவை போட்டி

யூகங்கள் படி, பிராட்பேண்ட் வழங்குநர்கள் ஆன ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, டாடா ஸ்கை, வீடியோகான் டி2எச் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் டிடிஎச் சேவை போட்டியை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மலிவான சேவை

மலிவான சேவை

சந்தையில் பல டிடிஎச் சேவை வழங்குநர் உள்ளன மற்றும் எதிர்பார்பின்படி ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சந்தையில் தனது புதிய நுழைவை வழங்கி அதன் பயனர்களுக்கு மலிவான சேவையை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. மலிவான சேவை என்ற மந்திர வார்த்தையை கொண்டு ஜியோ முன்னோக்கி செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை.

உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

ஆதாரங்கள் படி, ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச்-ன் மாதாந்திர திட்டமானது ரூ.185/-யை விடகுறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற அனைத்து சேவைகளை விட குறைவான விலையாகும்.எனினும் இது ரிலையன்ஸ் ஜியோவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அற்புதமான சலுகை

அற்புதமான சலுகை

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல நுழைவு நிலை திட்டங்களை வழங்குகிறது மற்றும் அதன் டிடிஎச் பயனர்களுக்கு பல்வேறு அற்புதமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, சமீபத்தில் 100எம்பிபிஎஸ் வேகம் வரை வழங்கும் வி-இழை பிராட்பேண்ட்டை அறிமுகம் செய்தது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச 5ஜிபி தரவு.!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio to Launch India's Cheapest DTH Service: Will it Give a Tough Competition to Airtel.? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X