வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி ஆப்ஸ்களை ஷேர் மற்றும் இன்ஸ்டால் செய்வது எப்படி?
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாகுமெண்ட்டுகள் ஆகியவற்றை மட்டுமே நமது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளும் வகையில் இருந்தது.
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாகுமெண்ட்டுகள் ஆகியவற்றை மட்டுமே நமது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளும் வகையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு படி முன்னேறி வாட்ஸ் அப் மூலம் ஆப்ஸ்களையும் நமது நண்பர்களுக்கு ஷேர் செய்யும் வழிமுறை தொடங்கப்பட்டுள்ளது
ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் விற்பனையாகும் 5 சிறந்த செல்பி ஸ்மார்ட்போன்கள்
மெதுவான இண்டர்நெட் கனெக்சன் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நமக்கு தேவையான ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வாட்ஸ் அப் மூலம் ஆப்ஸ்களை ஷேர் செய்தும் இன்ஸ்டால் செய்தும் பயன் அடையலாம். தற்போது இதன் வழிமுறைகளை பார்ப்போம்

நண்பரிடம் APK லிங்க்கை கேட்டு வாங்குங்கள்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் விரும்பிய ஆப்-ஐ டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்படும்போது மிக எளிதாக வாட்ஸ் அப் மூலம் அதே ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் நண்பரிடம் நீங்கள் விரும்பும் APK லிங்க்கை கேட்டு வாங்குங்கள். இந்த லிங்கை அனுப்ப உங்கள் நண்பர் செய்ய வேண்டியது இதுதான்: File Manager>Find the Apk File of the app>Replace the .apk extension with .text or .doc>long press the app and select share via WhatsApp>Chose contact to share its with>Click on send

நண்பரிடம் இருந்து வந்த மெசேஜை க்ளிக் செய்யுங்கள்
உங்கள் நண்பரிடம் இருந்து உங்களுக்கு தேவையான ஆப்-இன் APK லிங்க் வந்தவுடன் அந்த மெசேஜை க்ளிக் செய்யுங்கள்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபைல் மேனேஜருக்கு சென்று வாட்ஸ் அப் போல்டரை கண்டுபிடிக்கவும்
நீங்கள் செய்தவுடன் அந்த ஃபைல் டவுன்லோடு ஆக ஆரம்பித்துவிடும். டவுன்லோடு முடிந்தவுடன் உங்கள் மொபைலில் உள்ள ஃபைல் மேனேஜருக்கு சென்று அதில் உள்ள வட்ஸ் அப் போல்டரை ஓப்பன் செய்து அதில் அந்த APK லிங்க் உள்ளதா என்று சரிபாருங்கள்

பிறகென்ன உங்களுக்கு தேவையான ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யுங்கள்
ஃபைல் மேனேஜரில் வாட்ஸ் அப் போல்டரில் உங்களுக்கு தேவையான ஃபைல் கண்டிப்பாக தற்போது இருக்கும். தற்போது நீங்கள் அந்த லிங்க்கை க்ளிக் செய்து உங்களுடைய ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications