ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சரி செய்ய சூப்பர் டிப்ஸ்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் போதுமான மெமரி மற்றும் சீரான இணைய வசதி இருந்தும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தான்.

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் போதுமான மெமரி மற்றும் சீரான இணைய வசதி இருந்தும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை அப்டேட் செய்ய முடியாமல் போவதற்கான காரணங்களும் அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சர

முதலில் கவனிக்க வேண்டியவை:
பிரச்சனைகளை ஆய்வு செய்ய துவங்கும் முன் ஸ்மார்ட்போனில் சீரான இணைய வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் இணைய வசதியில்லாததும், கூகுள் பிளே ஸ்டோர் இயங்காமல் போவதற்கு காரணமாக இருக்கலாம்.

மற்றொரு முக்கிய விஷயம் அதிக மெமரி கொண்ட செயலிகள் வைபை கனெக்டிவிட்டியில் டவுன்லோடு ஆக காத்திருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் Download Over WiFi ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அவ்வாறு இருப்பின் அதனை ஆஃப் செய்ய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்த பின்பும், செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முடியவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சர

கேச்சி
பிளே ஸ்டோரின் கேச்சி டேட்டாவை சரி செய்து அவற்றை அழிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிரச்சனை சரியாக வாய்ப்பு இருக்கிறது.

1 - ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 - இனி அப்ளிகேஷன்ஸ் அல்லது ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

3 - கூகுள் பிளே ஸ்டோர் செயலியை தேர்வு செய்ய வேண்டும்

4 - ஸ்டோரேஜ் ஆப்ஷனில் க்ளியர் கேச்சி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

5 - இனி க்ளியர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

6 - இவ்வாறு செய்ததும், பிளே ஸ்டோர் சென்று செயலிகளை டவுன்லோடு செய்ய முயற்சிக்கலாம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சர

இவைதவிர மேலும் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சிலசமயங்களில், பயனர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை செட்டப் செய்தவுடன் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முற்படுவர். இதுபோன்ற சூழ்நிலைகளில் கூகுள் அக்கவுண்ட் சின்க் மோடில் இருந்தாலோ அல்லது அக்கவுண்ட்டுடன் தொடர்பு கொண்டிருக்கும் செயலிகள் டவுன்லோடு ஆகும் போது பிளே ஸ்டோரில் காத்திருப்பதை உணர்த்தும் ஐகான் தோன்றலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் டவுன்லோடு அல்லது சின்க் நிறைவுறும் வரை காத்திருந்து செயலியை டவுன்லோடு செய்ய முயற்சிக்க வேண்டும்.
Best Mobiles in India

English summary
unable-to-download-apps-on-your-android-smartphone-heres-how-to-fix-it : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X