ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.!

|

ரஷ்யா தொடர்ந்து அதிநவீன ஆயுந்தங்களை தயார் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக அந்நாடு தயாரித்த எஸ்400 ரக அதிநவீன ஏவுகனை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 400கி.மீட்டர்
வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள், மற்றும் ஆளில்லதா குட்டி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை இந்த எஸ்400 ரக ஏவுகனை.

வான்வழி பாதுகாப்பு எஸ்400 ரக ஏவுகனை

வான்வழி பாதுகாப்பு எஸ்400 ரக ஏவுகனை

மேலும் இந்த அதிநவீன வான்வழி பாதுகாப்பு எஸ்400 ரக ஏவுகனையை இந்தியா தனது விமானப்படைக்கு கொள்முதல் செய்கிறது. குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ் 40 ரக ஏவகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவாரத்தை நடைபெற்றது.

இருநாடுகள் இடையே கையெழுத்தானது

இருநாடுகள் இடையே கையெழுத்தானது

பின்பு ஏவுகணையை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதும் கடந்த ஆக்டோபரில் இருதரப்பு இடையே கையெழுத்து ஆனது, ஆனால் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளதார தடை என அமெரிக்கா மிரட்டியது. இருப்பினும் ரூ.40ஆயிரம் கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்துஏவகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கையெழுத்தானது.

டிரம்ப் நிர்வாகம்

டிரம்ப் நிர்வாகம்

ஆனால் இப்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டதில் இந்தியா முன்நோக்கி நகர்ந்தால்இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தற்சமயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் இனி சத்தம் போடாமல் இருக்கும்

பாகிஸ்தான் இனி சத்தம் போடாமல் இருக்கும்

இந்த எஸ்-400 ஆயுத அமைப்பானது, பாகிஸ்தானின் குறுகிய-தூர அணுசக்தி ஏவுகணையான நாசர் (Hatf-IX) போன்ற ஏவுகணைகளை தவடுபொடியாக்க முடியும். ஆக நாசர் ஏவுகணைகளை மையப்படுத்தியே பெரும்பாலான அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்த அண்டை நாடான பாகிஸ்தான் இனி சத்தம் போடாமல் இருக்கும் என்பதே இந்த ரூ.40,000 கோடி ஒப்பந்தத்தின் கருவாகும்.

ரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.!ரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.!

 ரஷ்ய பாதுகாப்பு படை

ரஷ்ய பாதுகாப்பு படை

முன்பு ரஷ்ய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமே கிடைத்த எஸ்-300 இன் மேம்பட்ட பதிப்பான எஸ்-400 ஆனது பல்வேறு ஏவுகணை அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வல்லமை கொண்டது. மற்றும் பல்வேறு வகையான சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகளையும் கொண்டுள்ளது

டிரம்ப் உடன் சத்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு மரண தண்டனை: ஹிட்லரை மிஞ்சும் கிம்.!டிரம்ப் உடன் சத்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு மரண தண்டனை: ஹிட்லரை மிஞ்சும் கிம்.!

 மின்னணு போர் விமானங்கள்

மின்னணு போர் விமானங்கள்

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எந்தவொரு விமானத்தை விடவும் வேகமான இந்த ஏவுகணை அமைப்பானது - மூலோபாய குண்டுவீச்சுகள், மின்னணு போர் விமானங்கள், உளவு விமானம், ஆரம்ப எச்சரிக்கை ரேடார் விமானங்கள், போர் விமானங்கள், மூலோபாய க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவைகளை கூட இலக்காகக் கொள்ளும் திறன் வாய்ந்ததாகும்.

கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!

Best Mobiles in India

English summary
Russian S-400 Missile Deal May Impact Indo-US Defence Ties: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X