Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

|

சமீபத்தில் எஸ்பிஐ வங்கியானது, பல வகையான யுபிஐ பேமெண்ட் ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கான ஒரு "பொதுவான" செக்யூரிட்டி வார்னிங்-ஐ வெளியிட்டு இருந்தது. அதில் Google Pay, Paytm, PhonePe போன்றவைகளும் அடங்கும்.

அதன் வழியாக, மக்களின் அறியாமையை சில திருட்டு கும்பல்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்? மேலோட்டமான புரிதலால் மக்கள் எப்படி பலிகிடா ஆக்கப்படுகிறார்கள் என்பது குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அலெர்ட் அனைவருக்கும் அல்ல; Google Pay யூசர்களுக்கு மட்டும்!

இந்த அலெர்ட் அனைவருக்கும் அல்ல; Google Pay யூசர்களுக்கு மட்டும்!

எஸ்பிஐ வெளியிட்ட வார்னிங்-ஐ போலவே தற்போது மீண்டும் ஒரு 'சேஃப்டி அலெர்ட்' (Safety Alert) விடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது SBI வழியாகவும் வரவில்லை, மேலும் இது அனைத்து UPI பேமண்ட் ஆப்களை பயன்படுத்தும் யூசர்களுக்கான "பொதுவான" எச்சரிக்கையும் அல்ல. இது முழுக்க முழுக்க Google Pay யூசர்களுக்கானது!

அதென்ன எச்சரிக்கை? கொஞ்சம் சூதானமாக இருந்தால் நீங்கள் என்னென்ன ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்? 24/7 அலெர்ட் ஆக இருப்பது எப்படி? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

அதிகரித்துக்கொண்டே போகும் ஆன்லைன் பேமண்ட் மோசடிகள்!

அதிகரித்துக்கொண்டே போகும் ஆன்லைன் பேமண்ட் மோசடிகள்!

சமீப காலமாகவே, டீக்கடையாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மால் ஆக இருந்தாலும் சரி, பர்சில் இருந்து பணத்தை எடுத்தாலே "மேலயும் கீழயும்" பார்க்கிறார்கள்!

ஏனெனில் நூற்றில் 98 பேர் ஆன்லைன் வழியாகவே பணம் செலுத்துகின்றனர்; கையில் 'கேஷ்' வைத்திருப்பதே இல்லை. ரூ.10 தேநீருக்கு ரூ.20 கொடுத்தால், "சில்லறை இல்லை, வேணும்னா கூகுள் பே பண்ணிடுங்க!" என்று கூறும் கடைக்காரர்களையே இங்கே அதிகம் பார்க்க முடிகிறது.

அந்த அளவிற்கு டிஜிட்டல் வழியிலான பணப்பரிவர்த்தனை நாடு முழுவதும் "படுபயங்கரமாக" வளர்ந்துள்ளது.

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

அதீத வளர்ச்சியுடன் சேர்ந்து வளரும் புதுப்புது சிக்கல்கள்!

அதீத வளர்ச்சியுடன் சேர்ந்து வளரும் புதுப்புது சிக்கல்கள்!

ஆன்லைன் வழியிலான பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் மறுகையில், ஆன்லைன் பேமண்ட் தொடர்பான மோசடிகளும் - நாளுக்கு நாள் - அதிகரித்துக் கொண்டே போகிறது; குறிப்பாக கூகுள் பே ஆப்பில்!

UPI டொமைனின் கீழ், கூகுள் பே ஒரு முக்கியமான "சேவை வழங்குநராக" இருப்பதால் கூகுள் நிறுவனம் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்ய பல சேஃப்டி மற்றும் செக்யூரிட்டி டூல்களை இன்-பில்ட் ஆகவே வைத்துள்ளது.

ஆனால் எல்லா நேரமும், கூகுளின் பாதுகாப்பு வளையத்தால் மட்டுமே உங்களையும், உங்கள் பணத்தையும் காப்பாற்றி விட முடியாது. உங்கள் பங்கிற்கும் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்!

01. கண்மூடித்தனமாக App-களை டவுன்லோட் செய்ய வேண்டாம் !

01. கண்மூடித்தனமாக App-களை டவுன்லோட் செய்ய வேண்டாம் !

Google Play Store-க்கு சென்று நீங்கள் எந்த வகையான ஆப்களை டவுன்லோட் செய்தாலும், அது நம்பகமான செயலியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்; பின்னரே இன்ஸ்டால் செய்யவும்.

ஏனெனில் ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing) போன்ற சில மால்வேர் ஆப்களானது, உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் நீங்கள் டைப் செய்யும் எதையுமே திருட வல்லது!

அது உங்களின் UPI PIN-ஐ அணுகலாம், அல்லது உங்களின் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கூட "பதிவு" செய்யலாம்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

02. மறந்தும் கூட Notifications-ஐ ஆஃப் செய்யாதீர்கள்!

02. மறந்தும் கூட Notifications-ஐ ஆஃப் செய்யாதீர்கள்!

உங்கள் ஸ்மார்ட்போனில் பல வகையான ஆப்கள் இருக்கலாம். எனவே நீங்கள் "பொத்தாம் பொதுவாக" அனைத்து வகையான Notifications-களையும் ஆஃப் செய்து வைத்திருக்கலாம். அந்த பட்டியலில் கூகுள் பே ஆப் இருந்தால் உடனே அதற்கான Notifications-ஐ ஆன் செய்யவும்.

ஏனெனில் நோட்டிஃபிகேஷன்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் வழியாகவே உங்கள் Google Pay-யின் "வரவு மற்றும் செலவு கணக்குகளை" நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

அவைகளை நீங்கள் முடக்கி பட்சத்தில், நீங்கள் ஏதேனும் ஒரு பேமண்ட் தொடர்பான மோசடியில் சிக்கி இருந்தாலும் கூட, அது உங்கள் கவனத்திற்கு வராது.

03. 'ஹெல்ப்' வேண்டும் என்றால்.. சரியான இடத்திற்கு செல்லவும்!

03. 'ஹெல்ப்' வேண்டும் என்றால்.. சரியான இடத்திற்கு செல்லவும்!

கூகுள் பே ஆப்பில் ஏதேனும் சிக்கல் என்றால், பணபரிமாற்றத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால்,
புத்திசாலித்தனமாக ஏதாவது செய்யலாம் என்கிற பெயரில் Google Search-இல் அணுக கிடைக்கும் ஹெல்ப்லைன் நம்பர்கள் அல்லது வெப்சைட்களை முயற்சி செய்ய வேண்டாம்.

எப்போதும் கூகுள் பே ஆப்பில் உள்ள Help / Support செக்ஷனை மட்டுமே அணுகவும். இன்டர்நெட்டில் கிடைக்கும் நம்பகமற்ற எண்களுக்கு தெரியாமல் கூட டயல் செய்து விட வேண்டாம்.

யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

04. பணம் அனுப்ப தான் UPI PIN.. பணம் பெற அல்ல!

04. பணம் அனுப்ப தான் UPI PIN.. பணம் பெற அல்ல!

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும், உங்கள் யுபிஐ பின் ஆனது பணம் அனுப்பவும், பேலன்ஸ்-ஐ செக் செய்ய மட்டுமே தேவைப்படும்.

யாரேனும் பணத்தை அனுப்புவதற்காக உங்கள் யுபிஐ பின்-ஐ உள்ளிடுமாறு கேட்டால்.. அலெர்ட் ஆகிக்கொள்ளவும். இப்படி செய்வதால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

05. சின்ன தப்பு.. ஆனால் பெரிய அமௌன்ட் காலி ஆகிடும்!

05. சின்ன தப்பு.. ஆனால் பெரிய அமௌன்ட் காலி ஆகிடும்!

கூகுள் பே-வை பொறுத்தவரை சிறியது பெரியது என்று எதுவும் இல்லை. சிலருக்கு ரூ.10,000 தான் பெரிய அமௌன்ட் ஆக இருக்கும். சிலருக்கு ரூ.100 கூட பெரிய அமௌன்ட் தான். எனவே முடிந்த வரை கீழ்வரும் தவறுகளை புறக்கணிக்கவும்:

- டென்ஷன் ஆக இருக்கும் போது அல்லது போன் பேசிக்கொண்டே எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் செய்யாதீர்கள். கவனக்குறைவாக நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்ப நேரிடலாம்.

- உங்கள் Google Pay அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய வழிவகுக்கும் OTP-ஐ ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம்.

- முக்கியமாக, நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யும் போது ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை மறந்தும் பயன்படுத்த வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Safety and Security Tips You Should Not Miss While Using Google Pay App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X