Home
How to

அள்ளி வீசும் அம்பானி! இந்தா Jio eSIM வச்சிக்கோ.. ID வேண்டாம்! உங்க நம்பரில் இருந்து இந்த SMS அனுப்பினா போதும்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் 5ஜி சேவைகள் (5G Service) ஆனது, கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள எல்லா இடங்களிலும் அணுக கிடைக்கிறது. உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம் - ஜியோ சேவையின் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகள் (Jio 4G and 5G SIM Cards) ஒரே மாதிரியானவை என்று; அதாவது இரண்டிற்குமே எந்த வித்தியாசமும் இல்லை!

ஆனால் ஒரு பிஸிக்கல் சிம் கார்டில் (Physical SIM Card) இருந்து ஒரு இ-சிம் (eSIM) முற்றிலும் வேறுபட்டது ஆகும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் தனது இ-சிம் கார்டுகளை வழங்குகிறது. ஆனால் இ-சிம்கள் எல்லா ஸ்மார்ட்போனிலும் ஆதரிக்கப்படுவதில்லை; இருப்பினும் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் (eSIM Supported Smartphones) இதை ஆதரிக்கின்றன.

Jio eSIM பெறுவது எப்படி? என்ன விலை? என்ன செயல்முறை?

இ-சிம் கார்ட்டின் சிறந்த விஷயம் என்னவென்றால், பயனர்கள் இதற்காக தங்கள் ஐடியை (ID) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. போதாக்குறைக்கு இ-சிம் மூலம் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ப்ரையாரிட்டி ஆக்டிவேஷன் (Priority activiation) நன்மையை வழங்குகிறது. இதன் பொருள் உங்கள் இ-சிம் எந்த நேரத்திலும் ஆக்டிவ் ஆக இருக்கும்.

இன்னொரு வசதி என்னவென்றால் - உங்கள் பிஸிக்கல் சிம் கார்டை கூட நீங்கள் இ-சிம் ஆக மாற்றலாம். இந்த வசதி / இ-சிம் கார்டு ஆனது ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் (Prepaid and Postpaid Mobile) வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. ஜியோ இ-சிம் ஆனது ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet) மற்றும் ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) ஆகியவற்றில் வேலை செய்யும்.

ஜியோ இ-சிம் என்ன விலை? வாங்குவது எப்படி (Jio eSIM Cost and How to Get)? முதல் மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால் - ஜியோவிலிருந்து வரும் இ-சிம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்; இதற்காக நீங்கள் எந்த கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே சிம் மாற்றம் தொடர்பான எந்த கூடுதல் கட்டணங்கலை குறித்தும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

மிகவும் எளிய செயல்முறை மூலம் உங்கள் ஜியோ சிம் கார்ட்டை இ-சிம் ஆக அப்கிரேட் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் "GETESIM" என்கிற ஒரு மெசேஜை டைப் செய்து 199 என்கிற எண்ணிற்கு அனுப்பவும். பின்னர் உங்கள் ஒப்புதலை வழங்க, "1" என்று டைப் செய்து 199 க்கு அனுப்பவும்.

Jio eSIM பெறுவது எப்படி? என்ன விலை? என்ன செயல்முறை?

இதை செய்த 10 நிமிடங்களுக்குள், ஜியோ நிறுவனம் ஆனது உங்கள் ஜியோ மொபைல் நம்பருக்கு +91-2235072222 என்கிற எண்ணின் மூலம் ஐவிஆர் (IVR) அழைப்பை விடுக்கும். பின்னர் உங்கள் இறுதி ஒப்புதலை வழங்க அழைப்பில் இருந்தபடியே "1" என்கிற எண்ணை அழுத்தவும். அதன் பிறகு 2 மணி நேரத்தில், உங்கள் சிம் கார்டு ஒரு இ-சிம் ஆக மாற்றப்படும்.

இந்த செயல்முறைக்காக நீங்கள் ஜியோ ஸ்டோருக்கு சென்று எந்த ஆவணங்களையும் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது வேலை செய்ய உங்களுடைய இமெயில் ஐடி ஆனது உங்கள் ஜியோ அக்கவுண்ட்டில் அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்தியை பொறுத்தவரை, இந்நிறுவனம் ஜூலை - ஆகஸ்ட் 2025 என்கிற காலகட்டத்தில் மீண்டும் அதன் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தலாம் என்று டெலிகாம் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஜியோ நிறுவனத்துடன் சேர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களின் விலைகளை உயர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Jio eSIM How to Get What is The Cost SMS Activation Process All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X