இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி? முழு விபரமும் தெரிஞ்சுக்கோங்க!

|

ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் காலர் டியூன் சேவைக்கு மாதம் ரூ.30 அல்லது மாதம் ரூ.15 என்று வசூலிக்கிறது.

இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி? முழு விபரம்!

ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் இலவசமாகக் காலர் டியூன் சேவையைத் தனது பயனர்களுக்கு வழங்கிவருகிறது.

4 லட்சம் பாடல்

4 லட்சம் பாடல்

ஜியோ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது போல், ஜியோ காலர் டியூன் டேட்டா பேஸ்ஸில் உள்ள 4 லட்சம் பாடல்களில் உங்களுக்கு பிடித்தமான பாடலை தேர்வு செய்து இலவசமாக அதை உங்களின் காலர் டியூனாக செட் செய்துகொள்ளலாம்.

மூன்று முறைகளில் காலர் டியூனை செட் செய்யலாம்

மூன்று முறைகளில் காலர் டியூனை செட் செய்யலாம்

இதற்கென ஜியோ மூன்று முறைகளை அறிமுகம் செய்துள்ளது, JioSaavn செயலி மூலம், SMS மூலம் அல்லது (*) to Copy என்ற மூன்று முறைகளில் எது உங்களுக்கு சுலபமான முறை என்று தேர்வு செய்து, அந்த முறையை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான காலர் டியூனை செட் செய்து கொள்ளுங்கள்.

<strong>போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!</strong>போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!

JioSaavn பயன்படுத்தி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

JioSaavn பயன்படுத்தி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

  • கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து JioSaavn செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
  • உங்களுக்கு பிடித்தமான பாடலை சர்ச் டேப் இல் சென்று தேடுங்கள்.
  • பிடித்த பாடலை கிளிக் செய்து set Caller Tune கிளிக் செய்யுங்கள்.
  • காலர் டியூன் செட் செய்வதற்கு முன்னால் preview கொடுக்கப்படும், Ok கிளிக் செய்தால் உங்கள் காலர் டியூன் செட் ஆகிவிடும்.
    • காலர் டியூன் செட் செய்யப்பட்டதை உறுதிப்படுத்த உங்கள் எண்ணிற்கு ஒரு SMS அனுப்பப்படும்.
    • SMS பயன்படுத்தி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

      SMS பயன்படுத்தி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

      • SMS JT என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.
      • SMS அனுப்பியதும் உங்கள் எண்ணிற்கு இந்த ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். "1 " for Bollywood ,"2" for Regional , 3 for International Songs.
      • உங்களுக்கு பிடித்தமான தேர்வைத் தேர்வு செய்து பாடலை செலக்ட் செய்துகொள்ளலாம்.
      • சுலபமான முறை

        சுலபமான முறை

        • அல்லது சுலபமாக நேரடியாகப் படத்தின் பெயரை, பாடலை பாடியவர் விபரங்களை இந்த முறையில் கொடுத்து பாடலை செலக்ட் செய்யலாம்.
        • SMS MOVIE to 56789
        • SMS ALBUM to 56789
        • SMS SINGER < Singer Name> to 56789
        • செலக்ட் செய்த பாடலை காலர் டியூனாக செட் செய்ய JIOTUNE என்று SMS செய்யுங்கள்.
        • தேர்வை உறுதிப்படுத்த "Y" என்று டைப் செய்து SMS செய்யுங்கள். உங்கள் காலர் டியூன் செட் செய்யப்பட்டிருக்கும்.

        • ஸ்டார் to Copy முறைப்படி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

          ஸ்டார் to Copy முறைப்படி எப்படி ஜியோ காலர் டியூன் செட் செய்வது?

          ஜியோ காலர் டியூன் வைத்துள்ள உங்கள் நண்பரின் எண்ணிற்குக் கால் செய்து '*' என்ற எண்ணை மட்டும் அழுத்தினாள் போதும். அவர் வைத்துள்ள அதே பாடல் உங்கள் எண்ணிற்கும் கிலோன் செய்யப்படும். காலர் டியூனை செட் செய்வதற்கு அனுமதி வழங்க "Y" என்று டைப் செய்து SMS செய்து உறுதிப்படுத்துங்கள். உங்கள் காலர் டியூன் செட் ஆகிவிடும்.

          <strong>நம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள்! ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா?</strong>நம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள்! ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா?

          ஜியோ காலர் டியூன் Deactivate செய்வது எப்படி?

          ஜியோ காலர் டியூன் Deactivate செய்வது எப்படி?

          155223 என்ற எண்ணிற்குக் கால் செய்து உங்கள் ஜியோ காலர் டியூனை Deactivate செய்யலாம் அல்லது SMS STOP என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினால் உங்கள் காலர் டியூன் Deactivate செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Jio Caller Tune How To Activate, Deactivate And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X