ரூ.1,199-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.! டூயல்-சிம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் அனைத்திற்கும் இந்தியா முழுவதும் அதிக வரவேறப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் மலிவு விலையில் நோக்கியா 105 என்ற பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த பீச்சர் போன் மாடல் பல்வேறு சிறந்த வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 105 பீச்சர் போன் டிஸ்பிளே
இந்த நோக்கியா 105 பீச்சர் போன் மாடல் பொதுவாக 1.77-இன்ச் QQVGA கலர் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த போனின் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிறிய கேம் அம்சங்கள்
புதிய நோக்கியா 105 மாடல் 4எம்பி மெமரி மற்றும் 4எம்பி ரேம் வசதிகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்திற்கு தகுந்தபடி சிறிய சிறிய கேம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஸ்னேக் கேம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கீ பேட்
மேலும் நோக்கியா 105 பீச்சர் சாதனத்தில் எப்எம் வசதி, டார்ச் லைட், சிறந்த கீ பேட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த சாதனத்தில் டூயல் சிம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு.

18நாட்கள் வரைக் கூட தாங்கும்
நோக்கியா 105 பீச்சர் போன் மாடலில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 18நாட்கள் வரைக் கூட தாங்கும் பேட்டரி வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மினி-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
இந்த சாதனத்தில் மினி-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு பிங்க், நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆன்லைன் தளங்களில் ரூ.1,199-விலையில் இந்த பீச்சர்போன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








