பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி.!? (எளிய வழிமுறைகள்)

|

கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி மொபைல் கட்டணம் பயன்பாட்டான பீம் (பாரத் இன்டர்பேஸ் பார் மணி) என்ற ஆப்பை நாட்டிற்கு அறிமுகம் செய்தார். இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் (NPCI) மூலம் உருவாக்கப்பட்ட இந்த பீம் ஆப் ஆனது வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து யு.பி.ஐ சார்ந்த சேவைகளின் ஒரு தொகுப்பு ஆகும்.

ஏர்டெல் : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

யு.பி.ஐ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு இடைமுகம் (யூனிபைட் பேமண்ட் இன்டர்பேஸ்) என்பது ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எந்த இரண்டு வங்கி கணக்குகளுக்கும் இடையே பண பரிமாற்ற நிகழ்த்த அனுமதிக்கும் அமைப்பாகும். யு.பி.ஐ ஆனது வாடிக்கையாளரை நேரடியாக ஒரு வங்கி கணக்கில் இருந்து கடன் அட்டை விவரங்கள், குறியீடு, அல்லது நெட் பேங்கிங் / பணப்பை கடவுச்சொற்கள் என்ற எந்த தொந்தரவும் இல்லாமல் வெவ்வேறு வியாபாரிகளுக்கு வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியான பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றிய படிப்படியான வழிமுறைகள் இதோ.!

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் 'பீம்' (BHIM) என்று டைப் செய்து ப்ளே ஸ்டோரில் தேடுவதின் மூலம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் ஆனது இன்னும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

சரிபார்ப்பு பணி

சரிபார்ப்பு பணி

இப்போது பயன்பாட்டை நிறுவி மற்றும் உங்கள் மொழி தேர்வை நிகழ்த்தவும். பயன்பாடு ஒரு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணை சரிபார்க்க கேட்கும். கிளிக் செய்து சரிபார்ப்பு பணி நிறைவாகும் வரை காத்திருக்கவும். சரிபார்ப்பு முடிந்ததும், உங்களின் நான்கு இலக்க கடவுக்குறியீட்டை உள்ளீடவும்.

வங்கி தேர்வு

வங்கி தேர்வு

பாஸ்கோட் அமைக்கப்பட்ட பின்னர், ஆப் ஆனது உங்கள் வங்கி தேர்வு செய்ய கேட்கும். வங்கி தேர்வு முறை நிகழ்த்தியதும்ஆப் ஆனது தானாக உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களை எடுத்துக்கொள்ளும். பின்னர் உங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் முதன்மை வங்கி கணக்கு தேர்ந்தெடுக்கவும்.

மூன்று ஆப்ஷன்

மூன்று ஆப்ஷன்

இந்த ஆப் ஆனது மூன்று ஆப்ஷன்களை உங்களுக்கு காட்டும் : சென்ட், ரெக்குவஸ்ட், ஸ்கேன்/ பே. பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு இடையே மட்டுமே சாத்தியம்.

சென்ட்

சென்ட்

யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமென்றால் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் பணத்தின் அளவு ஆகியவைகளை பதிவிடவும். பின்னர் ஆப் உங்களின் எம்பின் (MPIN) கேட்கும், அதாவது ஒரு மொபைல் பரிவர்த்தனை அங்கீகரிக்கும் ஒரு நான்கு அல்லது ஆறு ஐக்கிய குறீயீடு கேட்கும்.

ரெக்குவஸ்ட்

ரெக்குவஸ்ட்

அதேபோல், நீங்கள் யாரிடமாவது பணம் தேவை என்ற கோரிக்கையை கூட உங்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கோரலாம்.

ஸ்கேன்/ பே

ஸ்கேன்/ பே

மூன்றாவதுவிருப்பமான ஸ்கேன் மற்றும் பே மூலம் பயனர்கள் ஒரு க்யூஆர் (QR) குறியீடு (அதாவது ஒரு ஸ்மார்ட்போன் அல்லது ஒரு டாப்ளெட் மூலம் குறியாக்க நீக்கம் செய்யக்கூடிய ஒரு இரு பரிமாண கருப்பு மற்றும் வெள்ளை பார்கோடு) பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. ஒவ்வொரு தொலைபேசி எண்ணிற்கும் ஹோம் திரையில் சுயவிவரத்தின் கீழ் அணுக முடியும் வண்ணம் ஒரு க்யூஆர் குறியீடு ஒதுக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உடனடியாக பேடிஎம் க்யூஆர் குறியீடு உருவாக்குவது எப்படி.?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
How to use BHIM app. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X