சிறிய எழுத்துக்களை படிக்க முடியவில்லையா? ஆப்பிள் ஐபோனில் அதற்கும் புதிய வசதி

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் iOS 10 மாடல் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவ்வப்போது புதிய வசதிகளை பெற்று வரும் நிலையில் லேட்டஸ்ட்டாக பெற்றுள்ள வசதி மேக்னிஃபை (Magnify) என்று கூறப்படும் எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் வசதி.

சிறிய எழுத்துக்களை படிக்க முடியவில்லையா? ஆப்பிள் ஐபோனில் அதற்கும் புதி

ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைலுக்கு பத்து ரூபாய் ரீசார்ஜ் செய்யும் அட்டையை வாங்கியிருப்பீர்கள். அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களை படிக்க வேண்டும் என்றால் கழுகுக்கண் இருந்தால் கூட முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறிய எழுத்துக்கள் இருக்கும்.

ஆனால் இந்த மேக்னிஃபை உங்களுக்கு சிறிய எழுத்துக்களை பெரிதுபடுத்தி காட்டும். உடனே உங்கள் போனில் உள்ள கேமிரா மூலம் ஜூம் செய்து பார்க்கும் வசதி உங்களுக்கு ஞாபகம் வரும். ஆனால் இது அதுவல்ல. முற்றிலும் புதிய டெக்னாலஜி

மொபைல் சிதைந்து போனாலும் கூட புகைப்படங்களை மீட்கலாம்.! எப்படி.?

மிகச்சிறிய எழுத்துக்கள் அல்லது பொருளை நீங்கள் படித்தோ அல்லது பார்த்தோ தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மேக்னிஃபையை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெற விரும்பினால் உங்கள் ஐபோனில் ஒருசில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். அதன் பின்னர் எவ்வளவு சிறிய எழுத்துக்களாக இருந்தாலும் நீங்கள் மிக எளிதில் படிக்க முடியும். அந்த எளிய வழிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

இதனால் என்னென்ன பயன்கள் என்று பார்ப்போம்

இதனால் என்னென்ன பயன்கள் என்று பார்ப்போம்

பொதுவாக நாம் வாங்கும் பல பொருட்களில் சில முக்கிய குறிப்புகள் சிறிய எழுத்துகளில் பிரிண்ட் செய்திருப்பார்கள். அந்த குறிப்புகள் என்ன என்பதை அறிய பலர் அந்த சிறிய எழுத்துக்களை படிக்க முயற்சி செய்வார்கள்.

ஆனால் ஒருசிலர் மட்டுமே கஷ்டப்பட்டு அந்த எழுத்துக்களை படித்து புரிந்து கொள்வார்கள். பலர் முயற்சி செய்து பின்னர் முடியாமல் விட்டுவிடுவர். அப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்படாலம் தடுப்பதே இந்த மேக்னிஃபை பணி.

அதேபோல் மருந்து மற்றும் மாத்திரைகளில் உள்ள விலை உள்பட ஒருசில விஷயங்களும் இதேபோல் தான் சிறிய எழுத்துக்களில் இருக்கும். அதேபோல் மோட்டார் சைக்கிளில் உள்ள கார்பரேட்டரில் அதை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்த எழுத்துகளும் நம்முடைய கண்களுக்கு ஒத்துழைக்காது. ஆனால் இனி மேக்னிஃபை மூலம் அந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் விடை கொடுத்து விடலாம்.

நம்முடைய ஸ்மார்ட்போன் நமக்கு உற்ற தோழனாக பலவிதங்களில் உதவி செய்வதை போல இந்த விஷயத்திலும் நமக்கு உதவி செய்கிறது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதன் மூலம் நமது நேரம் மிச்சம் ஆவதுடன் நம்முடைய உரிமையையும் நாம் இழக்காமல் பெற்றுக் கொள்கிறோம்.

மேக்னிஃபை வசதியை பெறுவது எப்படி?

மேக்னிஃபை வசதியை பெறுவது எப்படி?

ஆப்பிள் ஐபோன் ஐஒஎஸ்10 மாடலில் உள்ள இந்த மேக்னிஃபை வசதியை பெற வேண்டும் என்றால் இந்த வசதியை நீங்கள் முதலில் எனேபிள் செய்ய வேண்டும். அதற்கு நான் எளிய ஸ்டெப்ஸ் உள்ளது. அவை என்னென்ன என்று பார்ப்போம்

முதலில் நீங்கள் ஜெனரல் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் அதில் ஒருசில கூடுதல் ஆப்சன்கள் கிடைக்கும். அதை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்தீர்கள் என்றால் அதில் Accessibility என்ற ஆப்சன் வரும். அந்த ஆப்சன் வந்தவுடன் நிறுத்தி கொள்ளவும்.

பின்னர் அதை க்ளிக் செய்தல் அதில் மேக்னிஃபையர் என்ற புதிய ஆப்சன் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆப்சன் டீஃபால்ட்டாக எனேபிள் செய்யப்பட்டிருக்காது. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் தான் எனேபிள் செய்ய வேண்டும்

இந்த மேக்னிஃபை ஆப்சனை கண்டுபிடித்துவிட்டால் பின்னர் அதை எனேபிள் செய்தா போதும். உங்கள் வேலை முடிந்தது. மேக்னிஃபையர் ஆப்சனுக்கு கீழே அது எவ்வாறு வேலை செய்யும் என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உங்களுக்கு தேவை என்றால் அதையும் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்புக்களை மூன்று முறை ஹோம் பட்டனை அழுத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.

மேக்னிஃபை ஆப்சனை எப்படி பயன்படுத்த வேண்டும்?

மேக்னிஃபை ஆப்சனை எப்படி பயன்படுத்த வேண்டும்?

மேக்னிஃபை வசதியை எனேபிள் செய்த பின்னர் ஓரிரண்டு முறை நீங்கள் சோதித்து பார்க்கலாம். சிறிய எழுத்துக்களையோ அல்லது உங்கள் உள்ளங்கையையோ பார்த்தீர்கள் என்றால் அது பெரியதாக தெரிவதை பார்க்கலாம். அப்புறம் என்ன உங்களுக்கு இந்த வசதி எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் நீங்கள் பயன்படுத்தி அசத்துங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Enabling your iPhone's Magnifier feature will allow you to read those fine prints and more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X