மொபைல் சிதைந்து போனாலும் கூட புகைப்படங்களை மீட்கலாம்.! எப்படி.?

புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோக்கள், தொடர்புகள், செய்திகள் முதலியனவனகளையும் மீட்க முடியும்.!

|

ஸ்மார்ட்போன் பயனர்களாகிய நாம் அனைவருமே இந்த மோசமான நிகழ்வை ஒருமுறையேனும் கடந்து வந்திருப்போம் - அதுதான் மொபைலில் உள்ள குறிப்பிட்ட அல்லது அனைத்து படங்களும் தற்செயலாக அழிக்கப்பட்டுவிட்டன என்ற நிகழ்வு. அம்மாதிரியான ஒரு பீதியான தருணத்தில் அனைவரும் யோசிக்கும் ஒரே வழி - ரீஸ்டோர் தான், ரீஸ்டோர் செய்து புகைப்படங்களின் அசல் இடத்தில் இருந்து இழந்த தரவுகளை மீட்க முயற்சிப்போம்.

ரீஸ்டோர் செய்வதை விட எளிமையான மற்றும் அதே சமயம் இழந்த அனைத்து புகைப்படங்களையும் மீட்க ஒரு உறுதியான வழி ஏதேனும் உள்ளதா என்று கேட்டால் - இருக்கிறது என்பது தான் எங்களின் பதில்.!

புகைப்படங்கள் மட்டுமின்றி

புகைப்படங்கள் மட்டுமின்றி

நீங்கள் இழந்த அனைத்து புகைப்படங்களையும் ஒரு மிக எளிமையான ஆண்ட்ராய்டு ஆப் கொண்டு மீட்க முடியும். அந்த ஆப்பின் பெயர் - டாக்டர் போன் (Dr.FONE) என்பதாகும். இந்த ஆப் மூலமாக வெறும் புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோக்கள், தொடர்புகள், செய்திகள் முதலியனவனகளையும் மீட்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். டாக்டர் போன் ஆப் மூலம் தொலைக்கப்பட்ட உங்களின் புகைப்படங்கள், செய்திகள் மற்றும் தொடர்புகலை மீட்க பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

முதல் படியாக, உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் மற்றும் உங்கள் டெஸ்க்டாப்பில் டாக்டர் போன் பயன்பாட்டை நிறுவ வேண்டும். பின்னர் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

இன்ஸ்டால் செய்த பின்னர் உங்கள் கணினியில் ஆண்ட்ராய்டு ரிக்வரி மென்பொருளை ரன் செய்து மைக்ரோ யூஎஸ்பி கேபிள் வழியாக உங்கள் கணினியுடன் உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியை இணைக்கவும். உங்கள் சாதனத்தில் யூஎஸ்பி டீபக்கிங் மோட் (USB debugging mode) செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

ஒருமுறை ஆண்ட்ராய்டு சாதனம் இணைக்கப்பட்ட பின்னர் நீங்கள் அனைத்து வகையான கோப்பு வகைகளையும் அணுகுவீர்கள் அதில் மீட்க வேண்டும் கோப்பு வகைகளை தேர்ந்தெடுக்கவும். மீட்பு பணியை தொடங்க புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள், ஆடியோ, முதலியன வகைகளில் தேர்வை நிகழ்த்தவும். பின்னர் கிளிக் செய்து தொடரவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

அடுத்து, நீங்கள் இழந்த தரவுகளை மீட்க உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூட் செய்யகோரிய அனுமதிகள் கேட்கபப்டும். ஒருமுறை மீட்பு செயல்முறை முடிந்ததும், உங்கள் தொலைபேசி அன்ரூட்டட் (unrooted) நிலையை திரும்பப்பெறும். (இந்த ஆப் ஆனது ரூட் மற்றும் அன்ரூட் செயல்முறையானது உங்கள் சாதனத்தின் உத்தரவாதத்தை சீர்குலைக்காது என்பது குறிப்பிடத்தக்கது)

வழிமுறை #05

வழிமுறை #05

தொடர்ந்து "ஸ்டார்ட்" கிளிக் செய்யவும். மென்பொருள் இப்போது இழந்த கோப்புகளை காப்பற்ற துவங்கும். இது நிகழ சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் உங்கள் கோப்புகள் ஒவ்வொன்றாய் கிடைக்கப்பெறுவதை அமர்ந்து வேடிக்கை பாருங்கள்.

வழிமுறை #06

வழிமுறை #06

ஒருமுறை ஸ்கேனிங் செயல்முறை முடிந்ததும். மீட்கப்பெற்ற அனைத்து தரவுகளையும் ஒவ்வொன்றாக முன்னோட்டம் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுத்து, "ரிக்கவர்" கிளிக் செய்ய அவைகள் ரீஸ்டோர் ஆகும்.

ரிசைக்கிள் பின் அம்சம்

ரிசைக்கிள் பின் அம்சம்

இது தவிர, உங்கள் விண்டோஸ் அல்லது மேக் டெஸ்க்டாப் கணினியில் உள்ளது போல இந்த ஆண்ட்ராய்டு ஆப் ஆனது 'ரிசைக்கிள் பின்' அம்சமும் கொண்டுள்ளது. அதன் மூலம் டெலிட் செய்யப்பட்ட போட்டோக்கள் ஆனது தானாகவே இதில் சேமித்து வைக்கப்படும் மற்றும் சிறந்த பகுதியாக, அதை மீட்க உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்ய வேண்டிய அவசியமேயில்லாய் என்பது தான்.

கடவுச்சொல்

கடவுச்சொல்

தவிர நீங்கள் மென்பொருள் ஒரு பதிவு குறியீடு கொண்டிருந்தாள் உங்கள் ஆண்ட்ராய்டின் ஸ்க்ரீன் லாக், பிங்கர் ப்ரிண்ட், பின் (PIN) மற்றும் கடவுச்சொல் ஆகியவைகளை பைபாஸ் செய்ய முடியும். மற்றும் பதிவு குறியீடு கொண்டு சேதமடைந்துள்ளன கருவிகளில் இருந்து உங்களின் பொன்னான தரவுகளை மீட்டெடுக்கவழிவகை செய்கிறது.

சிம் அட்டையை அன்லாக்

சிம் அட்டையை அன்லாக்

அதுமட்டுமினிற் உங்களால் ஒரு சிம் அட்டையை அன்லாக் செய்யவும் முடியும் பின்னர் அதில் உள்ள தரவை அழிக்கவும் முடியும். இதை அனைத்தையுமே டாக்டர் போன் டெஸ்க்டாப் க்ளைன்ட் உதவியுடன் நிகழ்த்தலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் மொபைல் பேட்டரி கொண்டு நெருப்பை உண்டாக்குவது எப்படி.?

Best Mobiles in India

English summary
How to recover lost photos on your android smartphone with Dr. Fone application. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X