கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

By Siva
|

உலகின் நம்பர் ஒன் தேடுதள ஜாம்பவான் கூகுள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பல வசதிகளில் ஒன்று கூகுள் டிரைவ். இந்த வசதி சமீபத்தில் க்ளீனர் மற்றும் கார்ட்ஸ் ஸ்டைல் லுக் மூலம் மேம்படுத்தப்பட்டது.

கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

இந்நிலையில் தற்போது கூகுள் டிரைவில் மேலும் ஒரு புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வசதி மூலம் பயனாளிகள் தங்களது முக்கிய டாக்குமெண்ட்களை OCR (Optical Character Recognition) என்ற டெக்னாலஜி மூலம் நேரடியாக ஸ்கேன் செய்து நமது டிவைசில் பாதுகாத்து வைத்து கொள்ளலாம்

இந்த புதிய OCR டெக்னாலஜி மூலம் பயனாளிகள் டெக்ஸ்ட்களை மிக எளிதாக இமேஜ் மற்றும் பிடிஎப் டாக்குமெண்ட் ஆக மாற்றி அந்த டாக்குமெண்ட்களை எடிட் அல்லது சேவ் செய்து வைத்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் அப்டேட் : என்னென்ன புது அம்சங்கள் வெளியாகும்.?!

இதனால் பயனாளிகளுக்கும் மேலும் ஒரு கூடுதல் வசதி கிடைத்துள்ளது. அவர்களுடைய முக்கிய டாக்குமெண்ட்கள் மிக எளிதாக் சேவ் செய்து வைக்கப்படுவதோடு பாதுகாப்பாகவும் இருக்கும்

இனி தற்போது ஆண்ட்ராய்டு கூகுள் டிரைவ் ஆப் மூலம் எவ்வாறு ஸ்கேன் செய்வது என்பது குறித்து பார்ப்போம்

கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் டிரைவ் செயலியை ஓப்பன் செய்யுங்கள்
கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

ஸ்டெப் 2: வலது ஓரத்தில் நீல நிறத்தில் இருக்கும் + பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

ஸ்டெப் 3: அதில் இருக்கும் பல்வேறு ஆப்சன்களில் ஸ்கேன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்
கூகுள் டிரைவ் மூலம் டாக்குமெண்ட்டுகளை பாதுகாப்பது எப்படி?

ஸ்டெப் 4: நீங்கள் அனுமதி கொடுத்தவுடன் ஸ்கேன் செய்ய வேண்டிய டாக்குமெண்ட் போன் கேமிரா மூலம் ஸ்கேன் ஆகும்

ஸ்டெப் 5: ஸ்கேன் செய்து இமேஜ் தோன்றியவுடன் அதில் தேவையில்லாத ஒருசில பகுதிகளை க்ராப் செய்து நீக்கிவிடலாம். இதன்பின்னர் மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்ய விரும்பினால் ஸ்கேன் செய்து கொள்ளலாம்

ஸ்டெப் 6: மீண்டும் ஸ்கேன் செய்தவுடன் உங்களது டாக்குமெண்ட் மிகவும் பாதுகாப்பாக கூகுள் டிரைவில் பிடிஎப் வடிவத்தில் சேவ் ஆகிவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
A few years back, the search engine giant Google has updated its Drive with a cleaner, cards-style look and much more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X