வாட்ஸ்ஆப் அப்டேட் : என்னென்ன புது அம்சங்கள் வெளியாகும்.?!

|

வாட்ஸ்ஆப் மீண்டும் தலைப்பு செய்தியாக வலம் வரவுள்ளது. ஏனெனில், அது இப்போது மற்றும் பின்னர் என அதன் ஒவ்வொரு மேம்படுத்தல்களையும் வெளியிட காத்திருக்கிறது. பயனர்களை மேலும் கவரும் வண்ணம், வாட்ஸ்ஆப்பை மக்கள் மேலும் அதிகமாக பயன்படுத்த வேண்டுமென்றும் குறிப்பாக மிகவும் பிரபலமான பழைய ஸ்டேட்டஸ் அம்சம் காணாமலடிக்கப்பட்ட பின்னர் பயனர்கள் வாட்ஸ்ஆப் மீது அதே கவனம் கொள்ளவைக்கும் முனைப்பில் புதிய வாட்ஸ்ஆப் மேம்படுத்தல்கள் காத்திருக்கிறது.

பயனர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை வேறுவகையில் கொண்டு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் என்னென்ன செயல் திட்டத்தை வாட்ஸ்ஆப் நிகழ்த்தவுள்ளது என்று பார்த்தால்..

அனுமதிக்கும் அம்சம்

அனுமதிக்கும் அம்சம்

தற்போதுள்ள வாட்ஸ்ஆப் பதிப்பானது பயனர் ஒரே நேரத்தில் ஒரே ஒரு தொடர்புக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. இந்த அம்சம் விரைவில் மேம்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் தங்கள் நண்பர்களுடன் பல தொடர்புகளுக்கு செய்தியை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் அம்சம் சார்ந்த பணி நடக்கிறது.

செயல்படுத்தி பார்க்க

செயல்படுத்தி பார்க்க

இந்த கட்டமைக்கப்பட்ட அம்சம் ஆனது ஏற்கனவே வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் உருட்டப்பட்டுளளது. எனவே இதை முன்னரே செயல்படுத்தி பார்க்க கூகுள் ப்ளே சென்று சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு

வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு

வெளியான சில அறிக்கைகள் இந்த அம்சமானது 2.17.122 அல்லது 2.17.123 இடையே ஆகிய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்புகளில் காணப்படுவதாக தெரிவிக்கின்றன.

ஒரே நேரத்தில் பல தொடர்புகளுக்கு

ஒரே நேரத்தில் பல தொடர்புகளுக்கு

இந்த புதிய அம்சம் ஆனது ஒரே நேரத்தில் பல தொடர்புகளுக்கு செய்தியை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பது மட்டுமின்றி ஒரே நேரத்தில் எத்தனை தொடர்புகளுடன் அதிகபட்சமாக பகிர்ந்து கொள்ள முடியும் என்ற தகவல் ஏதுமில்லை.

தனிப்பட்ட மற்றும் குழு அரட்டை

தனிப்பட்ட மற்றும் குழு அரட்டை

ஒருவர் உடனடியாக அவரது 100க்கும் மேற்ப்பட்ட நண்பர்களுக்கு செய்தியை அனுப்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டை ஆகிய இரண்டிலுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு தொடர்புகளையும் கூட

முழு தொடர்புகளையும் கூட

ஒருவர் பெறுநரின் பெட்டியில் இடம்பெறும் நண்பர்களை தேர்வு செய்யலாம் அல்லது முழு தொடர்புகளையும் கூட தேர்ந்தெடுத்துப் பின்னர் அவரது பட்டியலில் சேர்க்க முடியும். கேட்கவே மிக எளிமையாக உள்ளது அல்லவா.?!

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ் அப்-இல் உள்ள ஜங்க் இமேஜ்களை ஒரே பட்டனில் அழிக்க வேண்டுமா.?

Best Mobiles in India

English summary
WhatsApp: Soon you can share Multiple Contacts at once. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X