Home
How to

மற்றவர்கள் பார்க்காத வகையில் கூகுள் கணக்கை பாதுகாப்பது எப்படி?

பாதுகாப்புடன் கூகுள் கணக்கை மெயிண்டன் செய்ய சில எளிய வழிகள்

By Siva

இன்றைய நவீன டெக்னாலஜி உலகில் இண்டர்நெட் என்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் ஆக இருக்கின்றதோ, அதே அளவுக்கு நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல பாதுகாப்பு வழிகளை நாம் பின்பற்றி வந்தபோதிலும் நம்முடைய பர்சனல் விஷயங்கள் வெளியே போகாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

மற்றவர்கள் பார்க்காத வகையில் கூகுள் கணக்கை பாதுகாப்பது எப்படி?

நம்முடைய பர்சனல் விஷயங்கள் திருடுபோனால் அவை ஹேக்கர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு நம்முடைய வாழ்வே திசை திரும்பிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக சர்ச்சைக்குரிய அந்தரங்க விஷயங்களை ஆன்லைனில் பதிவு செய்வதை தவிர்ப்பதே நல்லது.

கூகுள் நிறுவனத்தின் சேவைகளான ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் பிளஸ் ஆகியவற்றை உபயோகிக்கும் போது நம்முடைய பர்சனல் விஷயங்களை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் உதாரணமாக கூகுள் கணக்கை தொடங்கும்போது பிறந்த தேதி, இடம், தொடர்பு கொள்ளும் முகவரி, பணிபுரியும் இடம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை உண்டு.

வரப்போகுது வாட்ஸ்ஆப் பழைய ஸ்டேட்டஸ் முறை.!

இந்த நிலையில் உங்கள் கூகுள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தும் நிலை வந்தால் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்களது தனிப்பட்ட விபரங்கள் உங்களை தவிர வேறொருவர் பார்க்காத வண்ணம் செட்டிங்ஸ் செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

கூகுள் கணக்கு:

கூகுள் கணக்கு:

உங்கள் கூகுள் அக்கவுண்டை ஓபன் செய்தவுடன் அதில் தோன்றும் நோட்டிபிகேஷன் ஐகானை க்ளிக் செய்தால் அதில் ஒரு டிராப் டவுன் ஆப்சன் வரும். அந்த ஆப்சனில் உள்ள பல ஐகான்களில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஐகான் 'மை அக்கவுண்ட்' என்பதுதான்

தனிப்பட்ட தகவல் மற்றும் பிரைவசி:

தனிப்பட்ட தகவல் மற்றும் பிரைவசி:

'மை அக்கவுண்டிற்கு சென்று உங்களது தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் கூகுள் நிறுவனத்தின் பிரைவசி செக்-அப் முறையை நீங்கள் பயன்படுத்தலம்

உங்களுடைய பர்சனல் விபரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் யாருக்கு நீங்கள் உங்களது விபரங்களை பகிர விரும்புகின்றீர்கள் என்ற ஆப்சன் இருக்கும். அதில் தோன்றும் பிரைவடி, பப்ளிக், உங்களது சர்க்கிள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சர்க்கிள் ஆகியவை ஆப்சன்களில் ஒன்றை செலக்ட் செய்யவும்

நீங்கள் பப்ளிக் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களது விபரங்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பப்ளிக் ஆக இருக்கும். பிரைவெட் ஆப்சனை செலக்ட் செய்தால் உங்களது தனிப்பட்ட விபரங்கள் உங்களை தவிர வேறு யாரும் பார்க்க முடியாத ஆப்சனாக இருக்கும்.

அதேபோல் சர்க்கிள் என்பதை தேர்வு செய்தால் உங்கள் சர்க்கிளில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் உங்களது டேட்டாக்கள் இருக்கும். விரிவுபடுத்தப்பட்ட சர்க்கிளை தேர்வு செய்தால் உங்கள் சர்க்கிளில் உள்ளவர்கள் தவிர வேறு சர்க்கிளில் உள்ளவர்களும் பார்க்கும் வகையில் அமையும்

கடைசியாக கஸ்டம் என்ற ஒரு ஆப்சன் இருக்கும். இதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு குறிப்பிட்ட சர்க்கிள், குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர்களூக்க் மட்டும் உங்களது விபரங்களை பகிர முடியும்

பிரைவைட் செக்-அப்:

பிரைவைட் செக்-அப்:

இப்போது உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மிக முக்கியமான அம்சமாக பாதுகாக்கப்பட வேண்டிய நிலை. பிரைவைட் செக்-அப் ஆப்சனை தேர்வு செய்து நீங்கள் வெற்றிகரமாக உங்களது கணக்கை பயமின்றி தெளிவாக பயன்படுத்தலாம்

கணக்கில் உள்ள விருப்பங்கள்:

கணக்கில் உள்ள விருப்பங்கள்:

கூகுள் கணக்கை நீங்கள் பயன்படுத்தும்போது போது உங்களுக்காக கூடுதல் விருப்பங்களை அதாவது உங்களது கணக்கில் நீங்கள் பயன்படுத்தும் மொழி உள்பட ஒருசில விபரங்களை கூகுள் கேட்கிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த இடத்தில் நீங்கள் உங்கள் மொழியை தேர்வு செய்தால், தேர்வு செய்த மொழிதான் கூகுளின் அனைத்து ஆப்ஸ்களிலும் தோன்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

மேலும் உங்களது கூகுள் கணக்கில் விபரங்களை கூகுள் டிரைவ் ஆப்ஸை பயன்படுத்தும்போதும் தெரிவிக்க வேண்டிய நிலை உண்டு. மேலும் ஒருவேளை உங்களுக்கு கூகுள் கணக்கு தேவையில்லை என்றால் உங்கள் கணக்கை டெலிட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

பாதுகாப்புடன்கூகுள் கணக்கில் நுழைவது

பாதுகாப்புடன்கூகுள் கணக்கில் நுழைவது

உங்களது கூகுள் கணக்கு எங்கெங்கு எப்போது ஓபன் செய்யப்பட்டு பார்க்கப்பட்டது என்பது போன்ற தகவல்களும் இதில் இருக்கின்றது. மேலும் பாதுகாப்பு அம்சங்களுடன் கணக்கில் நுழைவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன.

உங்களது கணக்கு எந்த கம்ப்யூட்டரில் அல்லது எந்த சாதனத்தில் ஓப்பன் செய்யப்பட்டது, யாரால் ஓப்பன் செய்யப்பட்டது, ஓப்பன் செய்யப்பட்ட நேரம் உள்பட அனைத்தையும் நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

பாதுகாப்பு சோதனை:

பாதுகாப்பு சோதனை:

கூகுளில் உங்களது கணக்கை பாதுகாக்க ஒருசில எளிய வழிகள் உண்டு. கூகுள் தரும் குறிப்புகளுடன் நீங்கள் இந்த பாதுகாப்பு சோதனையை பயன்படுத்தி கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are a few simple steps to keep some of your personal information private or restricted to people you want to share it with.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X