'திரும்ப வரப்போகுது' வாட்ஸ்ஆப் பழைய ஸ்டேட்டஸ் முறை.!

வாட்ஸ்ஆப் தனது பயனாளர்களுக்காக தமது வலைத்தளத்தில் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் முறையினை வழங்க உள்ளது.

By Ilamparidi
|

உலகு முழுமைக்கும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக்கொண்டு,உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய வாட்ஸ்ஆப் நிறுவனமானது சமீபத்தில் தமது வலைத்தளத்தில் பயனாளர்களுக்கான ஸ்டேட்டஸ் மேற்கொள்ளும் முறைகளில் மாற்றம் செய்தது.அதாவது,தமது பயனாளர்கள் புகைப்படங்கள் மற்றும் நிகழ்படங்களை தமது ஸ்டேட்டஸ் ஆக வைத்துக்கொள்ளும் முறையினை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக,தற்போது தமது பயனாளர்கள் பழைய ஸ்டேட்டஸ் முறையினையே மீளவும் பயன்படுத்திடக்கூடிய வகையில் செயலினை மேற்கொண்டுள்ளது.

அதுகுறித்த மேலதிக தகவல்கள் கீழே..

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

இன்றைய இணைய உலகினில் உலகு முழுதுமுள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப் படக்கூடிய சமூகவலைத்தளங்களில் முதன்மையானதொன்று இந்த வாட்ஸ்ஆப் ஆகும்.அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும்.இது தனது பயனாளர்களுக்கு பிற சமூக வலைத்தளங்களை விடவும் அதிகப்படியான வசதிகளினை வழங்கியது.பயன்படுத்திட எளிதாகவும் இருந்த காரணத்தினால் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது.கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் போது இதனை 900 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்பாடுகள்:

பயன்பாடுகள்:

கணினி மற்றும் இணையம் மூலம் நவீனமாக்கப்பட்ட இன்றைய உலகினில்,உலகின் எங்கோ ஓர் முலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகள் துவங்கி,தொலைவில் உள்ளோரிடத்ததே இணையம் தவிர்த்த எவ்வித செலவீனங்களுமின்றி தொடர்புகொள்ளவும் அவர்கள் தொலைவில் உள்ளதனையே மறந்திடச் செய்திடும் அளவினுக்கு அருகாமையில் உள்ளதனைப்போல உரையாட நிகழ்த்திடுவதற்கும் சமூக வலைத்தளங்கள் குறிப்பாக வாட்ஸ்ஆப் பயன்படுகிறது.மேலும் தனித்த ஓர் நண்பருடனோ அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் குழாமுடனோ உரையாட,புகைப்படங்கள்,பாடல்கள் மற்றும் நிகழ்படங்கள் உள்ளிட்டவற்றினைப் பகிந்துகொள்ள வாட்ஸ்ஆப் பயன்படுகிறது.

முகநூல் நிறுவனத்தால் வாங்கப்படுதல்:

முகநூல் நிறுவனத்தால் வாங்கப்படுதல்:

குறைந்த கால இடைவெளியில் தனது பயனாளர்களுக்கு பிடித்தமான சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கி அதிகப்படியான பயனாளர்களைப் பெற்றதால் இதனை முகநூல் நிறுவனம் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.முகநூல் நிறுவனத்தால் வாட்ஸ்ஆப் ஆனது வாங்கப்பட்ட பிறகு அதிரடியாக பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய ஸ்டேட்டஸ் முறை:

புதிய ஸ்டேட்டஸ் முறை:

வாட்ஸ்ஆப் வீடியோ கால் சேவை போன்றே சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக புதியதோர் அம்சத்தினை அறிமுகப்படுத்தியது.அது என்னவெனில்,பயனாளர்கள் வெறுமனே டெக்ஸ்ட்டினை மட்டும் தமது ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொண்டிருப்பதற்கு பதில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை தமது ஸ்டேட்டஸ் ஆக வைத்துக்கொள்ளலாம் என்பதுவே ஆகும்.ஆனால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு அதன் பயனாளர்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியினை உண்டாக்கியது.புதிய முறைக்கு பதிலாக பழைய ஸ்டேட்டஸ் முறையே தொடர்ந்திருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் முறை:

மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் முறை:

இந்நிலையில்,வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.17.95 ல் வாட்ஸ்ஆப் பழைய ஸ்டேட்டஸ் முறையானது சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்த மேற்கூறிய வாட்ஸ்ஆப் பீட்டா 2.17.95 என்னும் வெர்ஷனை இன்ஸ்டால் செய்துகொண்டு செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பயனாளர் பற்றிய தகவல்கள் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொள்ளக்கூடிய 'அபௌட்' பகுதியில் பழைய ஸ்டேட்டஸ் முறையின் மூலம் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ளலாம்.மேலும் இது புதிய ஸ்டேட்டஸ் முறை போல 24 மணி நேரங்களுக்குப் பின் மறையாது.

விரைவில்,வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அனைவரும் பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் முறையினை பயன்படுத்திடக்கூடிய வகையில் இது விரிவுபடுத்தப்படும் எனத்தெரிகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள கருவிகளாக மாற்றுவது எப்படி?

Best Mobiles in India

English summary
WhatsApp Text Status Feature Makes a Return With 'About' Description.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X