இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்

|

எங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஹேக்கர்களிடம் இருந்து நமது சமூக இணையதள கணக்குகளைப் பாதுகாக்க, தனியுரிமை அமைப்புகள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடிகிறது.

இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்

நம்மையே தற்காத்து கொள்வதைத் தவிர, இந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தகுந்த முறையில் எப்படி அமைப்பது என்பதை குறித்து நமக்கு நெருங்கியவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, இணையதள சமூகத்தில் பொறுப்பான அங்கமான நமது கடமையாகும்.

15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இதுதான்பா.!
உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்பதை விளக்கும் சில படிகளை, இந்த கட்டுரையில் அளித்துள்ளோம். இன்ஸ்டாகிராமை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் வகையில், கிராஃபிக்ஸ் உள்ளடக்கங்களைக் கொண்ட குறிப்பிட்ட இடுகைகளுக்கு, கூடுதல் கணக்கு பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்க திரைகள் ஆகியவற்றை இந்நிறுவனம் சேர்த்துள்ளது.

இரண்டு காரணி அங்கீகாரம்

இரண்டு காரணி அங்கீகாரம்

மிகவும் பாதுகாப்பான முறைகளில் அங்கீகாரம் வழங்குவதில் இதுவும் ஒன்றாகும். இதன்படி அடையாளம் தெரியாத புதிய சாதனங்களில் இருந்து இன்ஸ்டாகிராமிற்குள் நுழைய முயற்சிக்கும் போது, உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை தவிர, கூடுதலாக ஒரு பாதுகாப்பு குறியீட்டையும் கேட்கும். அதை பெற்ற பிறகே, உள்நுழைய முடியும்.

படி 1: உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையில் தட்டவும்

படி 2: இப்போது இரண்டு காரணி அங்கீகாரத்தைக் காணும் வரை, கீழ் நோக்கி உருட்டவும்

படி 3: பாதுகாப்பு குறியீடு தேவை என்ற மாற்றை ஆன் செய்ய தட்டவும்

உங்கள் ஃபோன் நம்பரை இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதை முதலில் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கு தேவையான குறியீடை பெறலாம். அந்த குறியீட்டை உள்ளிட்டு, அடுத்தது என்பதை தட்டவும். அதை ஆப் செய்ய வேண்டுமானால்,

படி 1:

படி 1:

உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையைத் தட்டவும்

படி 2: இப்போது இரண்டு காரணி அங்கீகாரம் என்பதை காணும் வரை கீழ் நோக்கி உருட்டவும்.

படி 3: பாதுகாப்பு குறியீடு தேவை என்ற மாற்றை ஆப் செய்ய தட்டவும்

காப்பு குறியீடு

காப்பு குறியீடு

இந்த இரண்டு காரணி அங்கீகாரம் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தால், அடையாளம் தெரியாத சாதனங்களில் எப்போதெல்லாம் உள்நுழைய முயன்றாலும், ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, ஒரு காப்பு குறியீடு அல்லது ஒரு எஸ்எம்எஸ் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கும்.

இணைப்பு பிரச்சனைகளால் உங்களுக்கு எஸ்எம்எஸ் கிடைக்கவில்லை என்றாலும், காப்பு குறியீட்டை பயன்படுத்தி உள்நுழைய முடியும். மேற்கூறிய இந்த காப்பு குறியீட்டை பெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

படி 1: உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையில் தட்டவும்

படி 2: இப்போது இரண்டு காரணி அங்கீகாரம் என்பதை காணும் வரை, கீழ் நோக்கி உருட்டவும்

படி 3: காப்பு குறியீட்டை பெறுதல் என்பதை தட்டவும்.

இன்ஸ்டாகிராமில் ஜிஐஎப் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தும் வழிமுறைஇன்ஸ்டாகிராமில் ஜிஐஎப் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தும் வழிமுறை

Best Mobiles in India

English summary
Privacy settings are important for our social media accounts to keep ourselves safe from hackers who are everywhere just waiting to poach things up. When it comes to Instagram, the privacy settings will help to keep ourselves safe from the anonymous cyber thief.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X