15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இதுதான்பா.!

  ஒப்போ நிறுவனம், கடந்த ஆண்டுகளில் நமக்கு சில "நட்சத்திர" ஸ்மார்ட்போன்களை கொடுத்துள்ளது. அம்சங்கள் மற்றும் செயல்திறன்களில் சமரசம் செய்ய விரும்பாத இளம் மொபைல் பயனர்களின் தேவைகளை கவனத்தில் வைப்பதன் மூலம் ஒப்போ நிறுவனத்தின் கைபேசிகள் வடிவமைக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

  அதே நோக்கத்தை மனதில் கொண்டு தான் ஒப்போ நிறுவனமானது அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வன்பொருள் மற்றும் மென்பொருட்களின் சமநிலையைத் தக்கவைக்க முயல்கிறது, முக்கியமாக புகைப்படத்துறையில்.!

  ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ83 ஆனது நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவில் மற்றொரு மைல்கல் ஆகும். ரூ. 13,999/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள ஒப்போ ஏ83 ஆனது முதன்மையான கிளாசிக் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்கள் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியா முழுவதும் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் இக்கருவி ரூ.15,000/-க்குள் வாங்க கிடைக்கும் ஒரு தலைசிறந்த கருவியாகும். அது ஏன் என்பதை நிரூபிக்கும் 5 அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  05. கேமரத்துறைக்குள் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்

  ரூ.15,000/-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் அதன் ஒளியியல் துறையில் அசாதாரணமான எதையும் வழங்கவில்லை. அடிப்படை கேமரா அம்சங்களை அல்லது இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ஒப்போ ஏ83-ன் முன்பக்க மற்றும் பின்புற கேமராக்கள் ஆகியவற்றில் சென்சார்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு சக்தியால் பின்தொடரப்படுகின்றன. முதன்மை கேமராவானது, எல்இடி பிளாஷ் மற்றும் எப்/ 2.2 துளையுடனான ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.2 துளை மற்றும் 1/ 2.8 சென்சார் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

  தோல் நிறங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு

  இதன் கேமரா வன்பொருள்கள் மிருதுவான படங்களை வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும் அதேவேளை, செயற்கை நுண்ணறிவுகளின் சக்தியுடன் இயந்திர கற்றல் திறன்களையும் செயல்படுத்துகிறது. அதாவது தோல் நிறங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை சுயாதீனமாக கற்று அங்கீகரிக்கிறது மற்றும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு பொருத்தமான அழகுபடுத்தும் மேம்பாடுகளை செய்கிறது.

  இயற்கை தோல் நிறத்தை வெளிப்படுத்தும்

  இதன் சிக்கலான படிமுறை, குழந்தைகளிலிருந்து ஆண்மக்கள், பெரியவர்களிடமிருந்து குழந்தைகளை வேறுபடுத்தி, புகைப்படங்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான நுட்ப விரிவாக்கங்களை உருவாக்குகிறது. எளிமையான வகையில் கூறவேண்டுமானால், ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் உள்ள ஏஐ (AI) பியூட்டி தொழில்நுட்பமானது, முகம் வடிவங்கள் உட்பட விரிவான முக அம்சங்களை கற்றறிந்து இயற்கை தோல் நிறத்தை வெளிப்படுத்தும்.

  பொக்கே விளைவைப் பொருத்துகிறது

  இதன் முன்-கேமராவின் போர்ட்ரேட் முறையானது புகைப்பட பின்னணிக்கு ஒரு பொக்கே விளைவைப் பொருத்துகிறது; அது பின்புலத்தை ஒளிரச் செய்கிறது மற்றும் நீங்கள் சுயமாக ஷாட் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்த பொக்கே விடயத்தில் கவனம் செலுத்துகிறது உடன் பலவகையான பில்டர்ஸ்களையும் வழங்குகிறது.

  04. அதிவேக மல்டிமீடியா அனுபவத்திற்கான 5.7-அங்குல (18: 9 விகிதம்) டிஸ்பிளே

  கிட்டத்தட்ட 16: 9 என்கிற காட்சி விகிதமானது பழைய அம்சமாகிவிட்டது என்றே கூறலாம். இன்றைய பாணியின்படி உயரமான 18: 9 என்கிற அளவிலான விகிதம் கொண்ட சாதனங்கள் தான் டிரெண்ட். அப்படியானதொரு பாணியினை ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் புதிய 5.7-அங்குல டிஸ்பிளே தன்னுள் தக்கவைத்துள்ளது.

  கூட்டத்தில் இருந்து இக்கருவியை வெளியே நிற்கிறது

  இது ஒரு அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகிறது. இதன் உயரமான திரையில் நீடித்த விளையாட்டும், எட்ஜ்-டூ-எட்ஜ் விளிம்பில் அற்புதமான வீடியோ பின்னணியும் மற்றும் பிளவு திரை அம்சமானது சிறந்த பல்பணி அனுபவத்தையும் உறுதி செய்கிறது. மற்றும் இதன் எட்ஜ்-டூ-எட்ஜ் பெஸல்லெஸ் வடிவமைப்பானது கூட்டத்தில் இருந்து இக்கருவியை வெளியே நிற்க செய்கிறது.

  03. பட்ஜெட் விலைப்புள்ளியில் பேஸ் அன்லாக் அம்சம்

  ஒப்போ ஏ83 ஆனது அதன் பட்ஜெட்டை மீறிய பேஸ் அன்லாக் அம்சத்தினை கொண்டுள்ளது. இந்த பேஸ் அன்லாக் அம்சமானது அற்புதமாக வேலை செய்கிறது மற்றும் சாதனம் திறக்க வெறும் 0.4 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. வெறுமனே உங்களின் முகத்தை ஒப்போ ஏ83 உடன் இணைக்க இதை நீங்கள் நிகழ்த்தலாம். இதன் சிறந்த பகுதியாக, இருண்ட ஒளி சூழ்நிலையில் கூட இந்த அம்சம் இயந்திர கற்றல் சாதகமாக மற்றும் பல முகம் புள்ளிகளுக்கு ஏற்ப வேலை செய்யும்.

  02. நம்பகமான வன்பொருள் மற்றும் மென்பொருள் செயல்திறன்

  ஒப்போ ஏ83 ஆனது 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிபியூ கொண்டு வேலை செய்யும் ஒரே மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது எந்தவிதமான செயல்திறன் குறைவு அல்லது கடுமையான பணிகளை செய்யும்போது திணறல் ஆகியவைகள் இல்லாமல் இருக்கும் நிலைப்பாட்டை உறுதிசெய்கிறது. இந்த சிபியூ ஆனது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அது மிகவும் நன்றாக செயல்படுவதோடு எந்தவிதமான மெமரி மேலாண்மை சிக்கல்களும் இல்லாமல் பல பயன்பாடுகளை இயக்க உதவுகிறது.

  சேமிப்பு சார்ந்த சிக்கலை சந்திக்கவே மாட்டீர்கள்

  மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை உள் நினைவகத்தை விரிவாக்கும் விருப்பத்தையும் வழங்குகிறது. சுருக்கமாக, நீங்கள் ஒப்போ ஏ83-ல் சேமிப்பு சார்ந்த சிக்கலை சந்திக்கவே மாட்டீர்கள். மென்பொருளை பொறுத்தவரை, நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.2 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.1 கொண்டு இயங்குகிறது.

  மூன்று விரல்களை கொண்டே ஸ்கிரீன் ஷாட்

  மேலும் இக்கருவி உங்கள் விருப்பமான வீடியோக்களை ஒருபுறத்தில் பார்த்துக்கொண்டே, மற்றொன்றில் சமூக வலைப்பின்னலைப் பார்ப்பதற்க்கான ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் அம்சத்தினையும் அனுமதிக்கிறது. மேலும் நீங்கள் திரையின் வண்ணத்தில் மாற்றங்களை செய்யலாம்; மூன்று விரல்களை கொண்டே ஸ்கிரீன் ஷாட்டை கைப்பற்றலாம், ஒப்போ க்ளவுட் கொண்டு உங்கள் கோப்புகளை சேமிக்கலாம் மற்றும் ஓபோ ஷேர் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத்தை விட 100 மடங்கு வேகத்தில் தரவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.

  01. நீடித்த பேட்டரி மற்றும் எளிதான கிடைக்கும் தன்மை

  ஒப்போ ஏ83 ஆனது ஒரு நீண்ட நாள் பணிகளுக்கான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் 3180எம்ஏஎச் பேட்டரி அலகு அதை உறுதி செய்யவதோடு. ஒற்றை சார்ஜில் ஒரு நாள் வரை நீடிக்கிறது. முக்கியமான நேரங்களில் பேட்டரி ஆயுளை மேலும் பாதுகாக்க நீங்கள் இதன் பவர் சேவ் முறைமையை இயக்கலாம். ஷாம்பெயின் தங்கம் மற்றும் பிளாக் வண்ண விருப்பத்தில் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எளிமையான முறையில் வாங்க கிடைக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  5 features that make OPPO A83 the smartest smartphone in sub Rs. 15k price segment. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more