சுந்தர் பிச்சை அறிவித்த இன்னொரு குட் நியூஸ்; ஜிமெயில் பயனர்கள் செம்ம குஷி.!

ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல்களை படிக்க, ரிப்ளை அனுப்ப அல்லது மெயில் ஒன்றை எழுதுவதற்கு, நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

|

ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல்களை படிக்க, ரிப்ளை அனுப்ப அல்லது மெயில் ஒன்றை எழுதுவதற்கு, நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுந்தர் பிச்சை தலைமையின் கீழ், நேற்று நிகழ்ந்த கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ மாநாட்டில் பல அற்புதமான அறிவிப்புகள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தத்தக்க ஒரு அறிவிப்பு தான் - ஜிமெயில் ஆப்லைன் அம்சம்.!

அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா.?

அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா.?

அதை அறிவித்ததோடு மட்டுமின்றி, மாநாட்டில் பீட்டா சோதனையாளர்களுக்கான ஆண்ட்ராய்டு பி இயங்குதளமும் அணுக கிடைத்தது. அதில் ஜிமெயிலுக்கான ஆப்லைன் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா? அப்போது உடனே க்ரோம் ப்ரவுஸருக்குள் நுழையுங்கள். ஏனெனில், இந்த ஆப்லைன் மெயில் அம்சமானது க்ரோம் (Chrome) பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.

வழிமுறை #01

வழிமுறை #01

க்ரோமிற்குள் நுழைந்த பின்னர், இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு புதிய ஜிமெயில் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். ஏனெனில், ஆப்லைன் அம்சமானது, பெரும்பாலான கூகுள் அக்கவுண்ட்களுக்கு உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட டீபால்ட் அம்சமாக உருமாறவில்லை. ஆக, உங்களின் "பழைய" ஜிமெயில் அக்கவுண்டில், இதை முயற்சி செய்து பார்ப்பது வீண் தான், ஆக புதிய ஜிமெயில் ஒன்றை உருவாக்கவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

புதிய ஜிமெயிலை விட்டீர்களா.? இப்போது செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்து, காட்சிப்படும் செட்டிங்ஸ் மெனுவிற்குள் நுழையவும். பின்னர், அதனுள் காணப்படும் ஆஃப்லைன் விருப்பத்தை கிளிக் செய்து,எனேபிள் ஆப்லைன் மெயில் என்கிற விருப்பத்தை டாப் செய்யவும். இப்போது நீங்கள் மூன்று முடிவுகளை எடுக்க வேண்டும் :

1. உங்கள் லேப்டாப்பில் எத்தனை நாட்களுக்கு மெசேஜ்கள் சேகரிக்கபிபட வேண்டும்.?

1. உங்கள் லேப்டாப்பில் எத்தனை நாட்களுக்கு மெசேஜ்கள் சேகரிக்கபிபட வேண்டும்.?

இந்த கேள்விக்கு, நீங்கள் 7, 30 மற்றும் 90 என்கிற நாட்களுக்கு இடையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஒருவேளை அதிக அளவிலான மெயில்களை சேமிக்க விரும்பினால், 90 நாட்கள் என்பதை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். இதை நிகழ்த்த, ஆப்லைன் வழியாக பழைய மெயில்களை உங்களால் அணுக முடியும்.

2. இணைப்புகளை (அட்டாச்மெண்ட்ஸ்) டவுன்லோட் செய்யலாமா.?

2. இணைப்புகளை (அட்டாச்மெண்ட்ஸ்) டவுன்லோட் செய்யலாமா.?

ஸ்ட்ரோரேஜ் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றால், இந்த கேள்விக்கு நிச்சயமாக ஆமாம் என்பதை தேர்ந்தெடுக்கவும். ஆப்லைனில் அணுக கிடைக்கும் மெயில்களில், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டாச்மெண்ட்ஸ்களை அணுக வசதி இல்லாமல் போவது, ஆப்லைன் ஜிமெயில் என்கிற அம்சத்தையே பாழ் ஆக்கும் என்று தானே அர்த்தம்.

3. உங்கள் கூகுள் அக்கவுண்டில் இருந்து வெளியேறும்போது உங்கள் டேட்டாவிற்கு என்ன நடக்கும்.?

3. உங்கள் கூகுள் அக்கவுண்டில் இருந்து வெளியேறும்போது உங்கள் டேட்டாவிற்கு என்ன நடக்கும்.?

இந்த இடத்தில, "கீப் ஆஃப்லைன் டேட்டா" விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். ஏனெனில், லாக் அவுட் செய்தவத்தின் விளைவாக, அடுத்த முறை உள்நுழையும் போது, மிக நீண்ட ரீசின்க் நடைமுறையை சந்திக்க வேண்டியதாய் இருக்கும். இந்த விருப்பங்களை எல்லாம் அமைத்த பின்னர், மாற்றங்களை சேமிக்கும் நோக்கத்தில் "சேவ் சேஞ்சஸ்" விருப்பத்தை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்.!

Best Mobiles in India

English summary
How to enable Gmail's new offline mode. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X