சுந்தர் பிச்சையின் 8 மிகப்பெரிய அறிவிப்புகள்; இனி எல்லாமே மாறும்.!

மாநாட்டின் முதல் நாளிலேயே, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகின. மேலும் இரண்டு நாட்களுக்கு நிகழும் இந்த மாநாட்டின் முதல் நாளில் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான 8 அறிவிப்புகளை பற்றிய தொகுப

|

கலிஃபோர்னியாவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில், சுந்தர் பிச்சையின் தலைமையிலான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ ஓ டெவெலப்பர் மாநாடு நடந்தது. மாநாட்டின் முதல் நாளிலேயே, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகின. மேலும் இரண்டு நாட்களுக்கு நிகழும் இந்த மாநாட்டின் முதல் நாளில் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான 8 அறிவிப்புகளை பற்றிய தொகுப்பே இது.

ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!

கலிஃபோர்னியாவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில், சுந்தர் பிச்சையின் தலைமையிலான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ ஓ டெவெலப்பர் மாநாடு நடந்தது. மாநாட்டின் முதல் நாளிலேயே, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகின.

இந்த அறிவிப்புகள் ஏன் முக்கியமானவைகள்.?

இந்த அறிவிப்புகள் ஏன் முக்கியமானவைகள்.?

மேலும் இரண்டு நாட்களுக்கு நிகழும் இந்த கூகுள் ஐ/ஓ 2018 மாநாட்டின் முதல் நாளில் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய 8 அறிவிப்புகளையும், அந்த அறிவிப்புகள் ஏன் முக்கியமானவைகள் என்பதையும் பற்றிய தொகுப்பே இது. சுந்தர் பிச்சை வந்தார், நின்றார் என்ற கதைகளையெல்லாம் பற்றி பேசி சுற்றி வளைக்காமல், நேரடியாக விஷயத்திற்குள் வருவோம்.!

08. கூகுள் ஒட்டுமொத்தமாக செயற்கை நுண்ணறிவிற்குள் குதிக்கிறது.!

08. கூகுள் ஒட்டுமொத்தமாக செயற்கை நுண்ணறிவிற்குள் குதிக்கிறது.!

மாநாட்டின் பிரதான அறிவிப்புகளை நிகழ்த்தும் முன்னரே, கூகுள், இனி அனைத்தையுமே ஏஐ (AI) எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கைக்கு நுண்ணறிவு) வழியாகவே நிகழ்த்தும் என்பதை அறிவித்தது. அதாவது இனி, கம்ப்யூட்ட்டர் விஷன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, இயற்கை மொழி செயலாக்கம், மற்றும் நரம்பியல் நெட்வொர்க்குகள் ஆகியவற்றில் பெருகிய முறையிலான பணிகள் நடக்கும் என்று அர்த்தம்.

07. இனி ஒவ்வொரு முறையும்,

07. இனி ஒவ்வொரு முறையும், "ஹே கூகுள்" அல்லது "ஓகே கூகுள்" என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.!

அதாவது கூகுள் நிறுவனம், அதன் கூகுள் அசிஸ்டென்ட்தில் "continued conversation" அப்டேட்டை அறிவித்துள்ளது. இது கூகுள் அசிஸ்டென்ட் பேசுவதை மிகவும் இயல்பானதாக மாற்றும். எளிமையாக கூறவேண்டுமெனில், இனி ஒவ்வொரு முறையும், "ஹே கூகுள்" அல்லது "ஓகே கூகுள்" என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. உரையாடலின் ஆரம்பத்தில் கூறினால் மட்டுமே போதும்.

06. பிளாக் அண்ட் வைட் போட்டோவை கலர் ஆக்கலாம்.!

06. பிளாக் அண்ட் வைட் போட்டோவை கலர் ஆக்கலாம்.!

ஏற்கனவே, கூகுள் போடோஸில், பயனர்களுக்கு எளிமையான அணுகலை வழங்கும் நோக்கத்திலான பில்ட்-இன் எடிட்டிங் டூல்ஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் உள்ளன. இந்நிலைப்பாட்டில், கூடுதல் ஏஐ அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளதால், இனி கூகுள் போட்டோஸில் எடிட்டிங், பிளாக் அண்ட் வைட் படத்தை வண்ணமயமாக்கல், பிரைட்னஸ் கரெக்ஷன் மற்றும் ரொட்டேட் போன்ற எடிட்டிங் டூல்ஸ்கள் அணுக கிடைக்கும்.

05. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் யூட்யூபில் ஸ்மார்ட் டிஸ்பிளே.!

05. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் யூட்யூபில் ஸ்மார்ட் டிஸ்பிளே.!

கூகுளின் முதல் ஸ்மார்ட் டிஸ்ப்ளே ஆனது ஜூலையில் வெளியாகும். நிச்சயமாக அது கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் யூட்யூபில் இயங்கும். இது வேற லெவல் காட்சி அனுபவத்தை, பயனர்களுக்கு வழங்கும் என்றும், வாய்ஸ் இன்டர்பேஸ் கொண்டு தீர்க்கப்பட முடியாத செயல்களுக்கான பிரச்சனைகளுக்கான சில விஷுவல் டிஸ்பிளே ஆக்ஷன்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

04. கூகுள் மேப்ஸில் கூகுள் அசிஸ்டென்ட்.!

04. கூகுள் மேப்ஸில் கூகுள் அசிஸ்டென்ட்.!

ஆம், நீங்கள் படித்தது சரி தான். இந்த கோடை காலம் முடிவதற்குள் கூகுள் மேப்ஸில், கூகுள் அசிஸ்டென்ட் அம்சம் இடம் பெற்றிருக்கும். இது பயனர்களுக்கு சிறந்த பரிந்துரைகளை வழங்கும், மேப்ஸ்களை இன்னும் தனிப்பயனாக்கப்பட்டதாக காட்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், இனி கூகுள் மேப்ஸ் வெறும் திசையை காட்டும் வேலையை மட்டும் பார்க்காது; உங்களோடு சேர்ந்து பயணிக்கும்.

03. அடுத்த தலைமுறை இயந்திர கற்றல் வன்பொருள்.!

03. அடுத்த தலைமுறை இயந்திர கற்றல் வன்பொருள்.!

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் படி, அறிமுகமாகும் இந்த டிபியூ மெஷின் லேர்னிங் ஆனது, கடந்த ஆண்டை விட 8 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த அப்டேட் ஆனது, விடயங்களை கூர்ந்து கவனிப்பதற்கு, அது சார்ந்த செயல்பாடுகளை விரைவாகச் செய்வதற்கும் வழி வகுக்கும்.

02. கூகுள் நியூஸில் உள்ள ஏஐ டிசைனில் மாற்றம்.!

02. கூகுள் நியூஸில் உள்ள ஏஐ டிசைனில் மாற்றம்.!

கூகுள் நியூஸ் பெறும் ஏஐ மறுவடிவமைப்பானது, வாசகர்களுக்கு தேவையான செய்திகளை வைத்துக்கொள்ளவும், முழு செய்தி கட்டுரையையும் புரிந்து கொள்ளவும், நம்பகமான வெளியீட்டாளர்களை ஆதரிக்கவும் உதவும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
01. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்ஸில் ஏஐ ஸ்மார்ட்ஸ்.!

01. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்ஸில் ஏஐ ஸ்மார்ட்ஸ்.!

கூகுள் அதன் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான புதிய மென்பொருள் மேம்பாடுகளை (எம்எல்கிட்) வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாடு ஆனது, டெவலப்பர்களுக்கான தடைகளை குறைக்க உதவும், அதோடு நில்லாமல் ஆயிரக்கணக்கான இயந்திர கற்றல்களை நிகழ்த்தும் வேலைப்பளுவையும் குறைக்கும்.

Best Mobiles in India

English summary
8 big announcements from Google I/O 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X