Home
How to

ஆப்பிள் உபகரணத்தில் லைவ் போட்டோ வசதியை பயன்படுத்துவது எப்படி?

ஆப்பிள் உபகரணத்தில் லைவ் போட்டோ வசதியை பயன்படுத்துவது எப்படி?

By Siva

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு மாடலிலும் கேமிராக்கள் புதுப்புது வசதிகளுடன் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதோடு ஆப்பிள் கேமிராக்களை விரும்பி உபயோக்கின்றனர். கேமிராக்களில் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வரும் வசதிகளை பலர் வரவேற்றும் ஒருசிலர் வரவேற்பு இல்லாமலும் உள்ளனர்.

ஆப்பிள் உபகரணத்தில் லைவ் போட்டோ வசதியை பயன்படுத்துவது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பொறுத்தவரையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒரு வசதி லைவ் போட்டோ வசதி. இந்த லைவ் போட்டோ வசதி வாடிக்கையாளர்களை 1.5 வினாடி வீடியோவை எடுக்க அனுமதிக்கும், பின்னர் ஒரு போட்டோ எடுத்தவுடன் மீண்டும் ஒரு 1.5 வினாடி வீடியோவை அனுமதிக்கும்

இந்த வசதி ஒருசிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது. தொடர்ச்சியாக வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து பழகிய பலருக்கு இந்த வசதி வெறுப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.??

இந்த கேமிராவினால் எடுக்கப்படம் புகைப்படங்கள் ப்ரீஸ் ஆகி பார்ப்பதற்கு புதுவித அனுபவங்களை ஏற்படுத்தவும் செய்யும். இருப்பினும் இந்த வசதியை டிஸ் ஏபிள் செய்ய வேண்டுமெனில் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்

லைவ் போட்டோ வசதியை எப்படி நீக்குவது?

லைவ் போட்டோ வசதியை எப்படி நீக்குவது?

லைவ் போட்டோ வசதியை மிக எளிதாக நீக்கிவிடலாம். இதோ அதற்குரிய மூன்று ஸ்டெப்களை பார்ப்போம்

புகைப்படம் எடுப்பதற்கு முன்பே லைவ் போட்டோ வசதியை நீக்குவது எப்படி?

புகைப்படம் எடுப்பதற்கு முன்பே லைவ் போட்டோ வசதியை நீக்குவது எப்படி?

லைவ் ஃபோட்டோ வசதியை நீக்க வேண்டும் என்றால் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு லைவ் போட்டோ ஐகானை க்ளிக் செய்தால் போதும். இந்த வசதி புகைப்படம் எடுப்பதற்கு முன்பு நீங்கிவிடும்

புகைப்படம் எடுத்த பின்னர் லைவ் போட்டோ வசதியை நீக்குவது எப்படி?

புகைப்படம் எடுத்த பின்னர் லைவ் போட்டோ வசதியை நீக்குவது எப்படி?

ஒருவேளை புகைப்படம் எடுத்த பின்னர் லைவ் போட்டோ வசதியை நீக்க மறந்துவிட்டலோ கவலை வேண்டாம். அதற்கும் ஒரு வசதி உண்டு. நீங்கள் எடுத்த ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில் எடிட் என்ற ஆப்சனை க்ளிக் செய்து அதன் பின்னர் லைவ் போட்டோ ஐகானை நீக்கிவிட்டால் போதும்.

லைவ் போட்டோ வசதியை மாற்றுவது எப்படி?

லைவ் போட்டோ வசதியை மாற்றுவது எப்படி?

மேற்கண்ட இரண்டு செட்டிங்ஸ்களும் தற்போதைய பயன்பாட்டுக்கு உதவும், மேலும் ஒருமுறை உங்களுடைய கேமிராவை ஆஃப் செய்துவிட்டால் கடைசியாக எது இருந்ததோ அது இயல்பு நிலையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் லைவ் போட்டோ வசதியை எனேபிள் செய்யவோ அல்லது டிஸேபிள் செய்யவோ வேண்டும்

லைவ் போட்டோ வசதியை இயல்பு நிலையில் நீக்குவது எப்படி?

லைவ் போட்டோ வசதியை இயல்பு நிலையில் நீக்குவது எப்படி?

உங்கள் ஆப்பிள் உபகரணம் iOS 10.2 அல்லது அதற்கு மேல் இருந்தால் லைவ் போட்டோ வசதியை நிரந்தரமாக இயல்பு நிலை செட்டிங் செய்துவிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். settings>Photos&Camera>Preserve Settings அதன் பின்னர் லைவ் போட்டோவை ஆஃப் செய்துவிட வேண்டும்.

இதன் பின்னர் நீங்கள் லைவ் ஃபோட்டோ வசதி இன்று உங்கள் ஆப்பிள் உபகரணத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
With these simple tips and tricks users can now enjoy clicking photographs on their Apple devices without intrusion from the Live Photo feature.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X