வாட்ஸ் அப்-இல் உள்ள ஜங்க் இமேஜ்களை ஒரே பட்டனில் அழிக்க வேண்டுமா? அப்ப வாங்க....

வாட்ஸ் அப் ஜங்க் இமேஜ்களை அழிக்க கஷ்டப்பட வேண்டாம். இதோ எளிய வழிகள்

By Siva
|

உலகில் தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப் ஒன்று இருந்தால் போதும், நம்முடைய அன்புக்குரியவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

வாட்ஸ் அப்-இல் உள்ள ஜங்க் இமேஜ்களை ஒரே பட்டனில் அழிக்க வேண்டுமா? அப்ப

ஆனால் அதே நேரத்தில் இந்த வாட்ஸ் அப்பில் தோன்றும் இமேஜ்கள் நம்முடைய போனின் பெரும்பாலான ஸ்டோரேஜை சாப்பிட்டுவிடுவதால் ஸ்மார்ட்போனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

வாட்ஸ் அப்-இல் நாள்தோறும் நமக்கு வரும் இமேஜ்கள், நான் அனுப்பும் இமேஜ்கள், வீடியோக்கள், GIF இமேஜ்கள், டாக்குமெண்ட்ரிகள் ஆகியவை போன் கேலரியிலும் இடம்பிடித்து நம்முடைய போனின் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து கொள்கிறது. தினசரி நான் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்துவதால் ஏராளமான இமேஜ்கள் குவிந்துவிடுகின்றன. இவற்றை ஒன்றொன்றாக டெலிட் செய்வது என்பது மணிக்கணக்கில் செய்யப்படும் வேலையாக மாறிவிடுகிறது.

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த கூகுள் இந்தியா

ஆனால் அதே நேரத்தில் இந்த ஜங்க் இமேஜ்களை ஒரே க்ளிக்கில் மிக எளிமையாக டெலிட் செய்வதற்கென்றே கூகுள் ப்ளேஸ்டோரில் ஒருசில ஆப்கள் கிடைக்கின்றன. அவை என்ன ஆப்ஸ்கள், அவற்றை எப்படி பயன்படுத்தி வாட்ஸ் அப்-இல் உள்ள இமேஜ்களை டெலிட் செய்வது என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று Siftr Magic Cleaner' என்ற ஆப்ஸை டவுண்லோடு செய்து அதன் பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் பின்னர் இந்த ஆப்ஸ்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் ஓப்பன் செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்த ஆப்ஸ்-இல் உங்கள் போனில் உள்ள இமேஜ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இதன் மூலம்தான் போனில் தேவையில்லாமல் இருக்கும் ஜங்க் இமேஜ்களை டெலிட் செய்ய முடியும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

இமேஜ்களை ஓப்பன் செய்ய நீங்கள் அனுமதித்த பின்னர் இந்த ஆப் ஒரு புதிய விண்டோவை அளிக்கும். அதில் உங்கள் போனில் உள்ள இமேஜ்கள், அதன் விபரங்கள் மற்றும் எத்தனை இமேஜ்கள் இருக்கின்றன போன்ற விபரங்களை உங்களுக்கு தரும். ஒரே ஒரு பட்டனை நீங்கள் அழுத்திவிட்டால் போதும் உங்களுக்கு தேவையான இமேஜ்களை மட்டும் பிரித்தெடுத்துவிட்டு மீதியை டெலிட் செய்துவிடலாம். அந்த சிங்கிள் பட்டன் என்ன என்பதில் குழப்பமா? கவலை வேண்டாம், நாங்கள் எதற்கு இருக்கின்றோம்,

இமேஜ்களுக்கு கீழ் ஒரு நபர் போன்ற புகைப்படம் தோன்றும். அந்த நபரின் படத்தை நீங்கள் ஒரே ஒரு முறை க்ளிக் செய்தால் போதும்

ஜியோ ப்ரைம் : ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 10ஜிபி 'வரையிலான' இலவச டேட்டா.!ஜியோ ப்ரைம் : ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 10ஜிபி 'வரையிலான' இலவச டேட்டா.!

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

இந்த ஸ்டெப்பில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இமேஜ்கள் அனைத்தையும் இந்த ஆப், முறையாக பிரித்தெடுக்கும். டூப்ளிகேட் மற்றும் ஜங்க் புகைப்படங்களையும் அதன் எண்ணிக்கையையும் மிகச்சரியாக பிரித்தெடுத்து உங்கள் முன் விபரங்களை தரும்.

ஆனால் இந்த பிரித்தெடுத்தல் வேலைக்கு ஒருசில நிமிடங்களை இந்த ஆப் எடுத்து கொள்ளும். ஆனால் கவலை வேண்டாம், அது தன்னுடைய வேலையை செய்யும் வரை நீங்கள் போனில் வேறு ஏதேனும் பணிகளை தாராளமாக தொடரலாம். பிரித்தெடுக்கும் பணியை முடித்த பின்னர் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வரும். அதன் பின்னர் நீங்கள் மீண்டும் அந்த ஆப்பிற்கு செல்லலாம்.

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

இந்த ஸ்டெப்பில் உங்கள் முன் தோன்றும் விண்டோவில் தேவையில்லாத, டூப்ளிகேட் மற்றும் ஜங்க் இமேஜ்கள் உங்கள் முன் தோன்றுவதோடு அதன் அருகில் டெலிட் பட்டனும் இருக்கும். அந்த டெலிட் பட்டனை நீங்கள் தட்டிவிட்டால் போதும், உடனே உங்கள் மொபைலில் உள்ள ஜங்க் பட்டன்கள் அழிந்து உங்கள் ஸ்டோரேஜை காப்பாற்றும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Whatsapp is a super cool application used by almost everyone globally. But it also turns out to be a headache when it consumes so much of phone's memory.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X