Home
News

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த கூகுள் இந்தியா

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த கூகுள் இந்தியா

By Siva

கூகுள் இந்தியாவும் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கைகோர்த்து பாரத பிரதமரின் 'புதிய இந்தியா' திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் இந்தியாவில் வருங்காலத்தில் பாதுகாப்பான மின்னணு பரிமாற்றம் உள்பட பலவேறு வசதிகள் கிடைக்கப்பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த

இந்தியாவில் உள்ள மின்னணு மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் டிரைனிங் கொடுக்க கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன,

நீங்களே செய்யலாம் கூகுள் கார்ட்போர்ட் (இதோ எளிய வழிமுறைகள்).!

MEITY என்று கூறப்படும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கூகுள் இந்தியாவும் முதல்கட்டமாக (DSCI) என்ற அமைப்புடன் இணைந்து டிஜிட்டல் பேமெண்ட் செக்யூடிரிட்டி அலையஸ் (Digital Payments Security Alliance) என்பதை நிறுவ உள்ளது. இந்த அமைப்பு செய்யவுள்ள பணிகள் பின்வருமாறு:

1. இந்த அமைப்பின் முதல் பணி அரசு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றின்பங்குதாரர்களை ஒருங்கிணைப்பது.

2. டிஜிட்டல் மற்றும் நிதிச்சேர்க்கை என இரண்டுக்கும் ஒரே நேரத்தில் பாதுகாப்பு குறித்து முக்கிய விஷயங்களை செயல்படுத்துதல்

3. டிஜிட்டல் மற்றும் மொபைல் பண பரிவர்த்தனை செய்யும்போது பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு குழு அமைத்தல், அதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளித்தல் ஆகியவைகள் செயல்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த

டிஜிட்டல் கைவினைஞர்களை உருவாக்குதல்

1. கூகுள் நிறுவனமும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து முதல்கட்டமாக டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் கைவினைஞர்களை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி ஆண்டு ஒன்றுக்கு 1,00,000 கைவினைஞர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கைவினைஞர்கள் தங்களுடைய பயிற்சியை முடித்துவிட்டு நாடு முழுவதும் இண்டர்நெட்டில் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்கள்

2. இந்த டிரைனிங் NIELIT என்ற அமைப்பின் மூலம் அதாவது National Institute of Electronics & Information Technology என்பதன் மூலம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். கூகுள் இந்தியா இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்யும்

அதேபோல் இந்தியா முழுவதும் சுமார் 10,000 NIELIT டிரைனிங் செண்டர்களை நிறுவமும் கூகுள் இந்தியா முதல்கட்டமாக திட்டமிட்டுள்ளது.

3. மேலும் கூகுள் இந்தியா, நாடு முழுவதும் மொபைல் டிரைனிங் லேப்-ஐயும் நிறுவ முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் 'புதிய இந்தியா'வை உருவக்க மத்திய அரசுடன் கைகோர்த்த

மின்னணு திறன் அபிவிருத்தி செய்ய:

1. இந்தியாவில் தற்போதே மொபைல் இண்டர்நெட் மற்றும் மொபைல் ஆப் மூலம் ஏராளமான பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூகுள் இந்தியா மத்திய அரசுடன் கைகோர்த்துள்ளதால் மின்னணு பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே மத்திய அரசு மற்றும் கூகுள் இந்தியாவின் ஒரே நோக்கம் ஆகும்

அதேபோல் கூகுள் இந்தியா நிறுவனம் ஆண்ட்ராய்டு திறன் அபிவிருத்தி திட்டத்தையும் தொடங்கவுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இரண்டு மில்லியன் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு டிரைனிங் உலக தரத்தில் இருக்கும் என்பதால் இந்த டிரைனிக் முடித்தவர்கள் உலகின் எந்த பகுதிக்கும் சென்று பணிபுரியலாம்

2. இதே போல் இந்த டிரைனிங்கை கூகுள் நிறுவனம் NIELIT அமைப்புக்கும் கொடுத்து 100,000 மாணவர்கள் மற்றும் டெவலப்பர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் கூகுள் இந்தியாவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து அரசு அலுவலகங்களின் ஆன்லைன் பரிவர்த்தனை உள்பட அனைத்து விதமான மொபைல் பரிவர்த்தனைகளையும் டிஜிட்டலுக்கு மாற்றி ஒட்டுமொத்த இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google India has joined hands with Ministry of Electronics and Information Technology to announce a set of initiatives aimed at empowering citizens of India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X