ஆண்ட்ராய்டு போனில் ரீசைக்கிள் பின் வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்கள்

ஏதாவது முக்கிய ஃபைல்களை டெலிட் செய்துவிட்டால் உடனே ரீசைக்கிள் பின் சென்று நாம் அந்த ஃபைல்களை மீண்டும் பெற்று கொள்ளலாம்.

By Lekhaka
|

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்பது என்ன என்று தெரிந்திருக்கும். கம்ப்யூட்டரில் தேவையில்லாதவற்றை அதில் தள்ளிவிட்டு சுத்தப்படுத்தி கொள்ளலாம். கிட்டத்தட்ட அது கம்ப்யூட்டரின் குப்பை தொட்டியாகவும் பயன்படுகிறது.

ஆண்ட்ராய்டு போனில் ரீசைக்கிள் பின் வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்க

மேலும் ஒருவேளை நாம் தெரியாமல் ஏதாவது முக்கிய ஃபைல்களை டெலிட் செய்துவிட்டால் உடனே ரீசைக்கிள் பின் சென்று நாம் அந்த ஃபைல்களை மீண்டும் பெற்று கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப்பில் உங்கள் பெஸ்ட் பிரெண்ட் யார்..? கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்.!

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ரீசைக்கிள் பின், கம்ப்யுட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட்டுகளீல் மட்டும்தான் உள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு போனில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் பலர் மனதில் நினைத்திருப்பர். அவர்களுக்காக இந்த ரீசைக்கிள் பின் வசதியை ஆண்ட்ராய்டு போனில் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு போனில் ரீசைக்கிள் பின் வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்க

ரீசைக்கிள் பின் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் டம்ப்ஸ்டர் (Dumpster) என்ற பெயரில் இதே செயலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஆப் தான் இந்த டம்ப்ஸ்டர். இந்த அப்ளிகேசனை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1: முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டம்ப்ஸ்டர் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்

ஸ்டெப் 2: முதல்முதலாக இந்த ஆப்-ஐ நீங்கள் இன்ஸ்டால் செய்யும்போது சில சட்டதிட்டங்களை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற உறுதி மொழியை கேட்கும். அதற்கு ஓகே என்று நீங்கள் க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3: இப்போது நீங்கள் ஏதாவது ஒரு ஃபைலை டெலிட் செய்து பாருங்கள். அந்த ஃபைல் உடனே டம்ப்ஸ்டர் ஆப்-ல் போய் உட்கார்ந்து கொள்ளும்.

ஸ்டெப் 4: இப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டெலிட் செய்த ரீ இன்ஸ்டால் செய்து கொண்டு மீண்டும் உபயோகிக்கலாம். இதனால் நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ டெலிட் செய்த பைல்களை நீங்கள் மீண்டும் உபயோக்கிக்க இந்த ஆப் உதவுகிறது.

டம்ப்ஸ்டர் மட்டுமின்றி மேலும் ஒரு ஆப்-ம் ரீசைக்கிள் பின் போல செயல்படுகிறது. அது என்ன என்று பார்ப்போமா?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு போனில் ரீசைக்கிள் பின் வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்க

ES ஃபைல் எக்ஸ்புளோரர்:

டம்ப்ஸ்டர் போலவே ரீசைக்கிள் பின் போல செயல்படும் இன்னொரு செயலி தான் ES ஃபைல் எக்ஸ்புளோரர். இந்த ஆப்-ம் நீங்கள் டெலிட் செய்யும் ஃபைல்களை வெளியே போகவிடாமல் தடுத்து பாதுகாத்து வைத்து கொள்ளும். இதை எப்படி டவுண்ட்லோடு செய்து உபயோகப்படுத்துவது என்பதை பார்ப்போம்.

ஸ்டெப் 1: ES ஃபைல் எக்ஸ்புளோரர்ஐ டவுன்லோடு செய்தவுடன் அதில் உள்ள இடதுபுற சைடு பாரில் உள்ள மெனுவை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: அதில் உள்ள ரீசைக்கிள் பின் என்ற ஆப்சனை தேர்வு செய்து அதை enable செய்யவும்.

ஸ்டெப் 3: டெலிட் செய்த ஃபைல்களை மீண்டும் ரிகவர் செய்ய சைடு பாரில் உள்ள ரீசைக்கிள் பின் ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் டெலிட் செய்த பைல்கள் இருக்கும். அதில் இருந்து உங்களுக்கு தேவையான ஃபைல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here is a trick to get the recycle bin feature on Android smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X