சாம்சங் கேலக்ஸி S8ல் உள்ள பிக்ஸ்பி வசதியை மற்ற ஸ்மார்ட்போனில் பெறுவது எப்படி?

சாம்சங் கேலக்ஸி S8ல் உள்ள பிக்ஸ்பி வசதியை மற்ற ஸ்மார்ட்போனில் பெறுவது எப்படி?

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போனை அரிமுகம் செய்தது.

சாம்சங் கேலக்ஸி S8ல் உள்ள பிக்ஸ்பி வசதியை மற்ற ஸ்மார்ட்போனில் பெறுவது

உயர்தர டெக்னாலஜிகள் அடங்கிய இந்த ஸ்மார்ட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் சிறி போலவே பெர்சனல் அசிஸ்டெண்ட் போல செயல்படும் பிக்ஸ்பி என்ற வசதியும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S8 ல் அமைந்துள்ள இந்த வசதி காரணமாக இனிமேல் உங்கள் உத்தரவுகளை உங்கள் விரலால் டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விரும்பும் சேவையை உங்கள் குரலால் இட்ட உத்தரவை இந்த பிக்ஸ்பி நிறைவேற்றி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டெண்ட்டுக்கு சமமாக வேலை செய்யும்

சாம்சங் கேலக்ஸி S8ல் உள்ள பிக்ஸ்பி வசதியை மற்ற ஸ்மார்ட்போனில் பெறுவது

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி S8 ல் அமைந்துள்ள இந்த வசதி மற்ற சாம்சங் ஸ்மார்ட்போனிலும் வேண்டும் என்பவர்களுக்காக ஒரு வழிகாட்டி இதோ. ஆனால் இந்த வசதியை பெற உங்கள் சாம்சங் மொபைலில் ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெப் 1: சாம்சங் கேலக்ஸி S8 ல் அமைந்துள்ள லாஞ்சர் உங்கள் சாம்சங் மொபைலில் பெறுவதற்கு முதலில் பிக்ஸ்பி (Bixby) ஐ டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: அதன் பின்னர் பிக்ஸ்பி-ன் apk ஃபைலை டவுண்லோடு செய்ய வேண்டும்

ஸ்டெப் 3: apk ஃபைலை டவுண்லோடு செய்தவுடன் இரண்டு apk ஃபைல்களையும் காப்பி செய்து கொள்ள வேண்டும். apk ஃபைல்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் செட்டிங்ஸ் சென்று 'Unknown sources' என்பதை Turn on செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 4: இதை செய்து முடித்தவுடன் S8 லான்சரின் செட்டிங் செய்ய ஹோம் பட்டனை சிறிது நேரம் அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும்

ஸ்டெப் 5: இப்போது திரையில் தோன்றும் டேப்-ஐ ஆக்டிவேட் செய்துவிட்டால் உங்கள் வேலை முடிந்தது.

இந்த இன்ஸ்டால் பணியை முடித்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் திரையில் தோன்றும் பிக்ஸ்பி பட்டனை இடதுபுறமாக ஸ்வைப் செய்து எனேபிள் செய்து கொண்டால் இந்த வசதியை நீங்கள் பெற்று பயன் அடையலாம்

விரைவில் புதிய ஆபரை அறிமுகப்படுத்தவுள்ளது ஜியோ, இதோ ஆதாரம்.!

Best Mobiles in India

English summary
Samsung recently launched its much-expected flagship smartphone dubbed as Galaxy S8 and S8+ smartphone at an event in New York earlier last month.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X