Home
News

விரைவில் புதிய ஆபரை அறிமுகப்படுத்தவுள்ளது ஜியோ, இதோ ஆதாரம்.!

மீண்டும் இலவச நன்மைகள் கிடைக்குமா.? அல்லது மேலும் மலிவான கட்டண திட்டங்கள் வழங்கப்படுமா.? அல்லது கட்டண திட்டங்களின் செல்லுப்படி காலங்கள் நீடிக்கப்படுமா.?

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 6 மாதங்களாக வழங்கிய அதிரடியான இலவச சலுகைகளையும் மற்றும் தொடர்ந்து மலிவான விலையில் வழங்கப்போகும் சலுகைகளையும் இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் இருந்து அவ்வளவு எளிதாக அழித்து விட இயலாது.

அப்படியான ஜியோ சலுகைகள், முதலில் மேலும் மூன்று மாதங்களுக்கு மிக மலிவான கட்டண திட்டத்தின் கீழ் நீடிக்கப்படும் என்று மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோவின் இலவச சலுகைகளை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்றோடு ஜியோ இலவச சலுகைகள் முடிவுக்கு வந்தது.

விரைவில் புதியதொரு சலுகை

விரைவில் புதியதொரு சலுகை

முடிவுக்கு வந்த அதே கையேடு விரைவில் புதியதொரு சலுகையோடு மீண்டும் தனது வாடிக்கையாளர்களை அணுகுமென்ற செய்தியையும் சேர்த்தே ஜியோ நமக்கு வழங்கியுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

ஜியோவின் வலைத்தளத்தின் படி, பட்டியலிடப்பட்டிருக்கும் சலுகைகள் விவரங்களோடு, விரைவில் மேற்பட்ட சலுகைகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற விளம்பரத்தையும் பார்க்க முடிகிறது.

அற்புதமான சலுகைகள்

அற்புதமான சலுகைகள்

அதாவது இணையதளத்தில் "நாங்கள் எங்கள் கட்டண திட்டங்களை மேம்படுத்தி கொண்டிருக்கிறோம் விரைவில் மேலும் அற்புதமான சலுகைகள் அறிமுகம் செய்யப்படும்" என்று கூறுகிறது.

ஏற்பாடுகள்

ஏற்பாடுகள்

நினைவுகூறும் வண்ணம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) ரூ.303/- ரீசார்ஜின் கீழ் ஜியோ அறிவித்திருந்த மேலும் 3 மாத கால இலவச நன்மைகளை திரும்ப பெறுமாறு ஆப்ரேட்டருக்கு ஆலோசனை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே ரூ.303/- அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்த பயன்ரகளுக்கு இலவச சலுகைகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நிகழ்த்திய பின்னர் இன்று ஜியோ அதன் இலவசங்களை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக்கொண்டுள்ளது.

நீடிக்கப்படுமா.?

நீடிக்கப்படுமா.?

தற்போது மேலும் ஆபர்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளதின் மூலம், மீண்டும் இலவச நன்மைகள் கிடைக்குமா அல்லது மேலும் மலிவான கட்டண திட்டங்கள் வழங்கப்படுமா அல்லது கட்டண திட்டங்களின் செல்லுப்படி காலங்கள் நீடிக்கப்படுமா.? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

தடை செய்யப்பட்ட அதே ஆபர்

தடை செய்யப்பட்ட அதே ஆபர்

ஒருவேளை ஜியோ அதன் ரீசார்ஜ்களின் செல்லுபடி காலத்தை நீடித்தால், எடுத்துக்காட்டுக்கு 2 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை 3 மாதங்கள் என்று நீட்டித்தால், தடை செய்யப்பட்ட அதே சம்மர் சர்பரைஸ் ஆபரை கட்டண திட்டத்தின் நாம் பெறலாம். என்ன சலுகைகள் என்னென்ன அற்புதமான திட்டங்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஜியோ சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் இணையதளத்தோடு இணைந்திருங்கள்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.!

Best Mobiles in India

English summary
Jio to introduce new offers soon. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X