Google Pay, PhonePe இருந்தா போதும்.. ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம் வழியாக ரூ.10000 எடுக்கலாம்.. எப்படி?
நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ஆனது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் (Cash Without ATM) புதிய அமைப்பை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் உள்ள ஏடிஎம்களுக்கு ஒரு பெரிய மேம்படுத்தலை வழங்கி உள்ளன. இந்த புதிய அமைப்பி கீழ் பயனர்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் நேரடியாக, ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க முடியும்.
ஐசிசிடபிள்யூ (ICCW), அதாவது இன்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (Interoperable Cardless Cash Withdrawal) அல்லது யுபிஐ கேஷ் வித்ட்ராவல் (UPI Cash Withdrawal) என்று அழைக்கப்படும் இந்த வசதி ஆனது வழக்கமான ஏடிஎம் கார்டு கொண்டு பணம் எடுப்பதை விட வேகமாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அமைப்பின் கீழ் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்யவோ அல்லது ஏடிஎம்-இல் கார்டு பின்னை உள்ளிடவோ தேவையில்லை.

இது எப்படி வேலை செய்கிறது? நீங்கள் செல்லும் ஏடிஎம்-இன் ஸ்க்ரீனில் "யுபிஐ கேஷ் வித்ட்ராவல்" அல்லது "ஐசிசிடபிள்யூ" என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிடவும். ஏடிஎம் ஆனது ஒரு க்யூஆர் குறியீட்டை காண்பிக்கும்.
அதை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ ஆப் மூலம் ஸ்கேன் செய்யவும். பின்னர் உங்கள் யுபிஐ ஐடி உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கைத் தேர்ந்தெடுத்து, உங்கள் யுபிஐ பின் நம்பரை உள்ளிட்டு பரிவர்த்தனையை அங்கீகரிக்கவும். உங்கள் ஸ்மார்ட்போனில் பணப்பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்டதும், ஏடிஎம் பணத்தை வழங்கும்.
வரம்புகள் மற்றும் தகுதி: ஏடிஎம்-களில் யுபிஐ வழியாக ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.10,000 ஆகும். தினசரி அடிப்படையிலான பணம் எடுக்கும் வரம்பு ஆனது உங்கள் யுபிஐ பரிவர்த்தனை வரம்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சேவை ஐசிசிடபிள்யூ -இயக்கப்பட்ட ஏடிஎம்-களில் மட்டுமே கிடைக்கும். அதாவது எல்லா ஏடிஎம்களுமே யுபிஐ கேஷ் வித் டிராவலை ஆதரிக்காது. மேலும் இந்த வசதியை ஆதரிக்கும் யுபிஐ ஆப்கள்: கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் ஆகும்.
இது ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது? இந்த செயல்முறை முழுமையாக ஏடிஎம் கார்டு இல்லாமல் இருப்பதால், இதன்கீழ் குளோனிங் மற்றும் பிஸிக்கல் கார்டுகளின் இழப்பு அல்லது திருட்டு ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களை முழுமையாக நீக்குகிறது. இந்த ஒருங்கிணைந்த வடிவமைப்பானது - யுபிஐ அணுகல் உள்ள எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளர்ரும் குறிப்பிட்ட வசதி இயக்கப்பட்ட ஏடிஎம்களின் வழியாக கார்டு இல்லாமல்பணம் எடுக்க முடியும்.
சில முன்னெச்சரிக்கைகள்: கார்டு இல்லாமல் பணம் எடுப்பது சில அபாயங்களை குறைக்கும் அதே வேளையில், பயனர்கள் தங்கள் மொபைல் போன் மற்றும் யுபிஐ பின் நம்பரை இன்னும் கடுமையாக பாதுகாக்க வேண்டும். நம்பகமான யுபிஐ ஆப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கு முன்பு சரியான ஏடிஎம் க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை - கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைத்து (Linking your credit card to UPI) பணம் செலுத்துபவர்கள், ரூபே கிரெடிட் கார்டை (RuPay credit card) பயன்படுத்தி ரூ.2,000 வரை யுபிஐ பேமண்ட் செலுத்தினால், அதற்கு எந்த கட்டணமும் பொருந்தாது என்றும், ரூ.2000 க்கு மேல் சென்றால் எம்டிஆர் கட்டணம் பொருந்தும் என்றும் என்பிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








