இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பாதுகாக்க அறிமுகமாகியுள்ள புதிய வசதி

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பாதுகாக்கும் இரு காரணி அங்கீகாரம்

By Siva
|

சமுக வலைத்தளங்களில் உள்ள நமது கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கவும், 'இரு காரணி அங்கீகாரம்' (Two Factor Authentication) என்ற பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். முன்னணி சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் இந்த பாதுகாப்பு நடைமுறை அமலில் உள்ளது.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பாதுகாக்க அறிமுகமாகியுள்ள புதிய வசதி

அதாவது நம்முடைய கணக்கை வேறொருவர் பயன்படுத்துவதாக சமூக வலைத்தளத்திற்கு சந்தேகம் வந்தால் உடனே நம்முடைய ரிஜிஸ்டர் மொபைல் போனுக்கு ஒரு ஆறு டிஜிட் கோட் எண்ணை அனுப்பும். அந்த கோட் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே அக்கவுண்டிற்குள் நுழைய முடியும். இந்த இரு காரணி அங்கீகாரம்' தற்போது இன்னொரு முன்னணி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

கடந்த 2016ஆம் ஆண்டு இரு காரணி அங்கீகாரம்' குறித்த பணிகளில் இறங்கிய இன்ஸ்டாகிராம் தற்போது பணிகளை செவ்வனே முடித்து பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்த புதிய பாதுகாப்பு நடைமுறையை நமது இன்ஸ்டாகிராம் கணக்கில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்

மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சம்:

மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சம்:

வங்கிகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தும் இந்த இரு காரணி அங்கீகாரம்' உண்மையில் மிகச்சிறந்த பாதுகாப்பாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது கணக்கில் லாக்-இன் செய்வதற்கு நமது ரிஜிஸ்டர் மொபைல் எண்ணுக்கு வரும் கோட் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற எளிய அதே நேரத்தில் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இந்த நடைமுறை இருப்பதால் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

செட்டிங்கில் என்ன செய்ய வேண்டும்?

செட்டிங்கில் என்ன செய்ய வேண்டும்?

இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தை நமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடைமுறைப்படுத்த முதலில் உங்களது இன்ஸ்டாகிராம் புரபொல் பக்கம் செல்ல வேண்டும். இன்ஸ்டாகிராமில் வெளியில் இருந்து பாதுகாக்கும் அம்சம் எதுவும் இல்லை என்பதால் இந்த கணக்கின் செட்டிங்கிலேயே இருக்கும் இந்த நடைமுறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகக்து.

இரு காரணி அங்கீகாரம்' வசதியை எனேபிள் செய்ய வேண்டும்

இரு காரணி அங்கீகாரம்' வசதியை எனேபிள் செய்ய வேண்டும்

இன்ஸ்டாகிராம் செட்டிங் பக்கம் சென்று அதில் உள்ள Two Factor Authentication என்ற ஆப்சனுக்கு சென்று அதில் உள்ள டர்ன் ஆன் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

கோட் எண்ணை உறுதி செய்ய வேண்டும்

கோட் எண்ணை உறுதி செய்ய வேண்டும்

டர்ன் ஆன் செய்தவுடன் நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஆறு இலக்க கோட் எண் வரும். அந்த கோட் எண்ணை உங்கள் முன் தோன்றும் திரையில் பதிவு செய்தால் போதும். அவ்வளவுதான் இப்போது உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்புடன் இருக்கின்றது என்பது உறுதியாகிவிடும்

Best Mobiles in India

English summary
You can enable the two-factor authentication in your Instagram account to make sure your account is secure. Get to know the steps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X