வாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி?

வாட்ஸ் அப்-இல் வரும் ஒருசில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை

By Siva
|

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாட்ஸ் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் வாட்ஸ் அப் உதவி வந்தாலும், இதில் வரும் ஒருசில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை

வாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி?

ஆம் ஹேக்கர்கள் அனுப்பும் ஒருசில மெசேஜ்களின் லிங்க்கில் வைரஸ் இருந்தால் அது நம்முடைய போனுக்கு ஆபத்தை விளைவிக்கும். இலவச ரீசார்ஜ், சலுகைகள் என ஆசை காட்டும் வார்த்தை ஜாலங்களுடன் வரும் மெசேஜ்களில் ஒரு அபாயகரமான லிங்க் இருக்கும்.

உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி.?s

அந்த லிங்க்கை மட்டும் நீங்கள் க்ளிக் செய்துவிட்டால், அவ்வளவுதான். கதை முடிந்தது. இந்த ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப வேண்டுமா? தொடரந்து நாங்கள் கூறும் எளிய வழிமுறைகளை கடைபிடியுங்கள்

இலவசம் மற்றும் அன்லிமிடெட் என்று மெசேஜ் வருகிறதா? உடனே விழிப்படையுங்கள்

இலவசம் மற்றும் அன்லிமிடெட் என்று மெசேஜ் வருகிறதா? உடனே விழிப்படையுங்கள்

எந்த ஒரு நிறுவனமும் ஆதாயம் இல்லாமல் இயங்காது. இலவசமாக மக்களுக்கு சேவை செய்வதற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடங்கப்படவில்லை. எனவே இலவசம் மற்றும் அன்லிமிடெட் ரீசார்ஜ் போன்ற மெசேஜ் வந்தால் உடனே அதை நீங்கள் படிக்காமலே டெலிட் செய்துவிடலாம். இந்த மெசேஜ்கள் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், ஏர்டெல் போன்றவைகளின் பெயரில் வரும். நிச்சயம் இதுபோன்ற மெசேஜ்களை நம்பாதீர்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கவனியுங்கள்

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கவனியுங்கள்

அப்படியே ஒருவேளை இலவசம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் அந்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை கவனித்து பாருங்கள். உண்மையான விளம்பரம் என்றால் அந்த நிறுவனத்தின் லோகோவுடன் சரியான ஸ்பெல்லிங்குடன் இருக்கும். ஆனால் அதே போலி விளம்பரங்கள் என்றால் ஒரு எழுத்து அல்லது இரண்டு எழுத்துக்கள் சற்று மாறியிருக்கும். அதை நன்கு கவனித்தாலே அந்த மெசேஜ் போலி என்பது உங்களுக்கு தெரிந்து விடும்

லிங்க்கை உற்று கவனியுங்கள்

லிங்க்கை உற்று கவனியுங்கள்

ஒரு நிறுவனத்தின் உண்மையான சலுகை அறிவிப்பு வெளிவந்தால் அதில் பெரும்பாலும் லிங்க் இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த லிங்க் சரியானதாக இருக்கும். உதாரணமாக பி.எஸ்.என்.எல் ஒரு அறிவிப்பை அறிவித்தால் அதன் லிங்க் http://www.bsnl.in/ என்று இருக்கும். ஆனால் அதே போலி பி.எஸ்.என்.எல் லிங்க் என்றால் http://bsnl.co/sim என்று இருக்கும். இதிலிருந்து அந்த லிங்க் மற்றும் மெசேஜ் போலி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அதிகாரபூர்வ இணையதளத்தில் உறுதி செய்யுங்கள்

அதிகாரபூர்வ இணையதளத்தில் உறுதி செய்யுங்கள்

ஒருவேளை உங்களுக்கு ஒரு மெசேஜ் போலியா அல்லது உண்மையான சலுகையா? என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டால் எந்த நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதோ, அந்த நிறுவனத்தின் அதிகார்பூர்வ இணையதளத்தில் சென்று அப்படி ஒரு சலுகை அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பாருங்கள். அப்படி இருந்தால் அது உண்மையான மெசேஜ், அல்லது அது போலியான மெசேஜ் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

இந்த மாதிரி மெசேஜ்களை கண்களை மூடிக்கொண்டு அவாய்ட் செய்யுங்கள்

இந்த மாதிரி மெசேஜ்களை கண்களை மூடிக்கொண்டு அவாய்ட் செய்யுங்கள்

ஒரு நிறுவனம் ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு, இதை நீங்கள் பத்து பேருக்கு ஃபார்வேர்ட் செய்தால் உங்களுக்கு சலுகை கிடைக்கும் போன்ற மெசேஜ்கள் உங்களுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு அந்த மெசேஜை டெலிட் செய்து கொள்ளுங்கள். அப்படி ஒரு சலுகையை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை அளித்ததில்லை, இனிமேலும் அளிக்கப் போவதில்லை

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Heres how to spot quickly WhatsApp scam messages.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X