உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி.?

Written By:

உங்கள் புதிய கணினியில் நீங்கள் கொஞ்சம்கூட பயன்படுத்தாத பல ப்ரீலோடட் ஆப்ஸ்கள் ஏன் உள்ளது என்பதை பற்றி நீங்கள் ஆச்சரியப்பட்டது உண்டா.? அதற்கு காரணம் வேறொன்றுமில்லை பிராண்டட் பிசி உற்பத்தியாளர்களுக்கு பணம் பார்க்கும் சில வழிகளில் ப்ரீலோடட் ஆப்ஸ்களை ஒன்றாகும்.

உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி.?

அவ்வகை பயன்பாடுகளை வாங்கும் பயனாளிகள் அதிக அளவில் பயன்படுத்துவார்களா இல்லையா என்ற எந்தவிதமான எண்ணமும் இன்றி புதிய பிசி-க்களில் பதிவேற்ற படுவது தான் - ப்ரீலோடட் ஆப்ஸ். அப்படியாக உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தமிழ் கிஸ்பாட் டூடோரியல் தொகுப்புகளில் ஒன்றே இது.!

பயன்படுத்தப்படாத மென்பொருள்களை / ஆப்ஸ்களை ப்ளோட்வேர் என்பர், சரி இந்த ப்ளோட்வேர்களை கண்டறிவது எப்படி.?

1. நீங்கள் நீக்க வேண்டிய பயன்பாடுகள் எது என்று உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் எளிதாக கண்ட்ரோல் பேனல்> ப்ரோகிராம்ஸ் & பீச்சர்ஸ் சென்று உங்களால் தேவையில்லை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரோகிராம்களை கிளிக் செய்து அன்இன்ஸ்டால் செய்யலாம்.

2. மாறாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட பயன்பாடு பயனுள்ளதா.? இதை நீக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய தெளிவில்லாமல் இருந்தால் நீங்கள் உங்கள் கணினியில் 'ஷூட் ஐ ரிமூவ் இட்' என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கலாம். அதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

3. நீங்கள் பயன்பாட்டை நிறுவிய பின்னர், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் ஒரு பட்டியல் உங்களுக்கு காண்பிக்கப்படும். உடன் குறிப்பிட்ட ஆப்பை எத்தனை பயனர்கள் இதுவரை நீக்கியுள்ளனர் என்ற தெளிவான பட்டியில் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

4. அதில் உங்களுக்கு தேவையில்லாத அல்லது உங்களால் மட்டுமின்றி பெரும்பாலானோர்களால் நீக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்பை நீக்க வெறுமனே அதை அன்இன்ஸ்டால் செய்தால் போதும்.

தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்Read more about:
English summary
How to Remove Preloaded Apps From Your PC. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot