நீங்கள் ஒரு செல்பி பிரியரா? உங்களுக்காக 8 வித்தியாசமான செல்பி போஸ்கள்

By Siva
|

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் ஸ்மார்ட்போனில் எப்போது முன்கேமிரா அறிமுகமானதோ அப்போதே செல்பியும் கூடவே அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக பெண்கள் வித்தியாசமான போஸ்களில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வாடிக்கையாகிவிட்டது.

நீங்கள் ஒரு செல்பி பிரியரா? உங்களுக்காக 8 வித்தியாசமான செல்பி போஸ்கள்

டெபிட் கார்டு பின் ஆன்லைனில் மாற்றுவது எப்படி??

ஆனால் அதே நேரத்தில் செல்பி எடுப்பதற்கு முன்னர் போஸ் கொடுப்பது எப்படி? சரியான ஆங்கிள் மற்றும் சில டெக்னிக் டிப்ஸ்களை தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போஸ் எண் 1: பாதத்தையும் செல்பி எடுக்கலாம்

போஸ் எண் 1: பாதத்தையும் செல்பி எடுக்கலாம்

செல்பி என்றாலே பெரும்பாலானோர் முகத்தை மட்டுமே புகைப்படம் எடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். முகம் மட்டுமின்றி உங்கள் ஹை ஹீல்ஸ் கொண்ட பாதத்தையும் அழகழகாக செல்பி எடுக்கலாம். உங்கள் பாத அழகை நீங்கள் புகைப்படத்தில் காண வேண்டாமா?

போஸ் எண் 2: குளோஸ் அப் தான் செல்பிக்கு சரியான வழி

போஸ் எண் 2: குளோஸ் அப் தான் செல்பிக்கு சரியான வழி

பொதுவாக செல்பி புகைப்படத்திற்கு இடைஞ்சலாக இருப்பது நமது பின்புறத்தில் உள்ள பேக்ரவுண்ட் கூட்டம்தான். இதை தவிர்க்க பெரும்பாலும் செல்பியை குளோஸ் அப்பில் எடுத்து கொள்ளுங்கள். மேலும் செல்பி எடுக்கும்போது கண்கள் கேமிராவை நோக்கி பார்க்காமல் இருந்தாலும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் போஸ் இருக்கும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போஸ் எண் 3: புரபொசனல் செல்பி எடுக்க வேண்டுமா?

போஸ் எண் 3: புரபொசனல் செல்பி எடுக்க வேண்டுமா?

சாதாரணமாக நாம் எடுக்கும் செல்பிக்கும் புரபொசனல் கேமிராமேன் எடுக்கும் செல்பிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். உங்கள் முகம் செல்பியில் இடது புறமோ அல்லது வலது புறமோ இருக்கும் வகையில் செல்பி எடுத்தால் அந்த ஷாட் பார்ப்பதற்கு ஒரு கவிதை போல் தோன்றும். கேமிராவை நேருக்கு நேர் பார்க்காமல் பக்கவாட்டில் எடுத்தால் நீங்களும் ஒரு செல்பி ஹீரோதான்

போஸ் எண் 4: வாட்டர் ஷாட் செல்பி என்றால் என்ன தெரியுமா?

போஸ் எண் 4: வாட்டர் ஷாட் செல்பி என்றால் என்ன தெரியுமா?

இது உங்கள் போனுக்கு கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனால் பெஸ்ட் ரிசல்ட் வரும். உங்கள் முழு உடம்பையும் தண்ணீர் உள்ள அல்லது சோப்புத்தண்ணீர் உள்ள பாத் டேப்பில் வைத்து கொண்டு முகத்தை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரியும்படி வைத்து எடுக்கும் புகைப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் கலக்கலாக இருக்கும். ஆனால் இதை நீங்கள் கொஞ்சம் கவனமாக எடுக்க வேண்டும். தவறி தண்ணீரில் போன் விழுந்துவிட்டால் சிக்கல்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போஸ் எண் 5: இரண்டு கையிலும் செல்பி எடுப்பது எப்படி?

போஸ் எண் 5: இரண்டு கையிலும் செல்பி எடுப்பது எப்படி?

இரண்டு கைகளையும் பயன்படுத்தியும் செல்பி எடுக்கலாம். ஒரு கையில் ஸ்மார்ட்போனை கையில் பிடித்தபடி, இன்னொரு கையில் கேமிரா பட்டனை அழுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இதில் உங்கள் இரு கைகளின் ஆங்கிள் கேமிராவின் ஆங்கிளில் இருந்து சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டியது முக்கியம்.

போஸ் எண் 6: செல்பிக்கே செல்பி கொடுப்பது எப்படின்னு பார்ப்போமா?

போஸ் எண் 6: செல்பிக்கே செல்பி கொடுப்பது எப்படின்னு பார்ப்போமா?

செல்பிக்கு செல்பி என்பது இப்போதைக்கு டிரண்ட் இல்லை. ஆனால் டிரெண்ட் என்பதை நாம் தான் ஆரம்பித்து வைக்க வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீங்கள் உங்கள் மொபைலில் செல்பி எடுக்கும்போது உங்கள் நண்பரின் மூலம் உங்களை ஒரு புகைப்படம் எடுக்க சொல்லுங்கள். நீங்கள் செல்பி எடுப்பதை நீங்களே அதில் பார்க்கலாம். இந்த செல்பிக்கு செல்பி மிக விரைவில் டிரண்டுக்கு வந்துவிடும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போஸ் எண் 7: மேலே இருந்து செல்பி எடுத்து பாருங்களேன்

போஸ் எண் 7: மேலே இருந்து செல்பி எடுத்து பாருங்களேன்

நேருக்கு நேராக, வலது, இடது புறமாக எடுக்கும் செல்பியை விட மேலே கேமிராவை வைத்து கொண்டு நீங்கள் அண்ணாந்து பார்த்தபடி செல்பி எடுத்து பாருங்கள். உங்கள் செல்பி புகைப்படம் மிக வித்தியாசமாக தெரியும்

போஸ் எண் 8: செல்பி எடுக்க மேஜிக் டைம் என்ன தெரியுமா?

போஸ் எண் 8: செல்பி எடுக்க மேஜிக் டைம் என்ன தெரியுமா?

செல்பி எடுக்கும்போது நமது சுற்றுப்புறம் மிக அற்புதமாக இருந்தால் எப்படி இருக்கும்? சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்திற்கு பின்பும் செல்பி எடுத்து பாருங்கள். அதுதான் செல்பி எடுக்க மேஜிக் டைம் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
If you'd like to learn to take better pictures of yourself while looking totally fabulous, take a note of these poses.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X