டெபிட் கார்டு பின் ஆன்லைனில் மாற்றுவது எப்படி??

By Meganathan
|

சமீபத்தில் நடைப்பெற்ற டெபிட் கார்டு தகவல் திருட்டு சுமார் 32 லட்சம் டெபிட் கார்டு பயனர்களைப் பாதித்தது. இத்தகவல் திருட்டு எச்டிஎஃப்சி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்ரும் எஸ் பேங்க் உள்ளிட்ட பயனர்களை அதிகளவு பாதித்தது.

இது போன்ற தகவல் திருட்டு மூலம் நீங்களும் பாதிக்கப்படாமல் இருக்கப் பயனர்கள் அடிக்கடி தங்களது டெபிட் கார்டு பின் அதாவது பாஸ்வேர்டினை மாற்றுவது அவசியம் ஆகும். இதைச் செய்ய அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இன்றில்லை.

இண்டர்நெட் மூலம் உட்கார்ந்த இடத்திலேயே டெபிட் கார்டு பின் கோடினை மாற்றுவது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

* முதலில் ஐசிஐசிஐ பேங்க் நெட்பேங்கிங் அக்கவுண்ட் லாக் இன் செய்ய வேண்டும்.

* லாக் இன் செய்ததும் My Card Pin ஆப்ஷனினை தேர்வு செய்து

டெபிட் கார்டு பின் மாற்றக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* பயன்பாட்டில் இருக்கும் டெபிட் கார்டினை தேர்வு செய்து கார்டின் CVV நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

* பின் உங்களுக்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்து அடுத்தப் பக்கத்தில் புதிய பின் கோடினை தேர்வு செய்து submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எச்டிஎஃப்சி பேங்க்

எச்டிஎஃப்சி பேங்க்

* நெட்பேங்கிங் அக்கவுண்ட் லாக் இன் செய்து Cards ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இடது புறத்தில் கீழ் பக்கமாக ஸ்கிரால் செய்து ‘Request' பட்டனினை கிளிக் செய்ய வேண்டும்.

* இனி Instant PIN Generation ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து இப்பக்கத்தில் கேட்கப்படும் ஆப்ஷன்களைப் பூர்த்திச் செய்து புதிய பின் நம்பரை பதிவு செய்து உங்களது மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்ய வேண்டும்.

ஆக்சிஸ் பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

* ஆக்சிஸ் பேங்க் நெட்பேங்கிங் லாக் இன் செய்து இடது புறத்தின் மேல் பக்கம் இருக்கும் My Debit Cards ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

* இங்கு நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டினை தேர்வு செய்து More Services, ஆப்ஷனில் Set Debit Card Pin கிளிக் செய்து Go என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* இனி உங்களது பின் நம்பரை மாற்ற புதிய பின் கார்டு பயன்பாடு நிறைவடையும் தேதி மற்றும் உங்களது மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட NETSecure கோடு ஆகியவற்றை என்டர் செய்தால் வேலை முடிந்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எஸ் பேங்க்

எஸ் பேங்க்

* உங்களின் எஸ் பேங்க் அக்கவுண்ட் பதிவு செய்து mySPACE ஆப்ஷனினை கிளிக் செய்து அதில் இருக்கும் நான்காவது பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* இனி மூன்றாவது ஆப்ஷனாக Debit Card PIN Re-generation/ Change காணப்படும். இதனைக் கிளிக் செய்து புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

* இங்கு உங்களின் கார்டு பயன்பாடு நிறைவு பெரும் தேதி மற்றும் புதிய பின் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இரு முறை புதிய பின் பதிவு செய்ததும் புதிய திரை காணப்படும்.

* இந்தத் திரையினை உறுதி செய்ததும் OTP பக்கம் திறக்கும், இங்கு உங்களது மொபைல் போனிற்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Change Bank Debit Card PIN Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X