Home
How to

ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி

By Staff

பல ஆயிரங்களை கொட்டி வாங்கிய புதிய ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைத்து கொள்வது மிகவும் அவசியமானதாகும், இவ்வாறு வைத்து கொள்ளும் போது ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்பதை விட கொஞ்ச நாட்களில் போனினை விற்கும் போது அதிக விலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி

கீழே வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி என்பதை பாருங்கள்..

ஸ்கிரீன் ப்ரோடெக்டர்

ஸ்கிரீன் ப்ரோடெக்டர்

போன் எப்பவும் புதிதாக காட்சயளிக்க அதன் ஸ்கிரீன் தான் மிகவும் முக்கியமானது, அதனால் பாதுகாப்பான் ஸ்கிரீன் கார்டு பயன்படுத்த வேண்டும்.

கேஸ்

கேஸ்

போன் அடிக்கடி கீழே விழும் போது எல்லாம், போனிற்கு ஏதும் ஆகாமல் இருக்க உறுதியான கேஸ் மிகவும் அவசியம்.

ஈரம்

ஈரம்

கைகள் ஈரமாக இருக்கும் போது போனினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கையாளுதல்

கையாளுதல்

போனை கையாளும் போது சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும், போன் பயன்படுத்தும் போது அவை பல முறை கைகளில் இருந்து தவறி கீழே விழும் வாய்ப்புகள் இருக்கின்றன, அவ்வாறு விழும் போது போனிற்கு பாதிப்பு வெளிப்படையக ஏற்படாது என்றாலும், தொடர்ச்சியாக கீழே விழும் போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இடம்

இடம்

எங்கு சென்றாலும் போனினை உங்களுடன் வைப்பது பல பரிச்சனைகளை தடுக்கும், அவசியமின்றி கீழே வைப்பது பாதிப்புகளுக்கு வழி வகுக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

போன்களை பாக்கெட்டில் வைப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது, முடிந்த வரை தகுந்த பெல்ட் க்ளிப் மற்றும் பவுச்களை பயன்படுத்தலாம்.

சுத்தம்

சுத்தம்

அவ்வப்போது போனில் இருக்கும் தூசிகளை சுத்தம் செய்வது நல்லது. சுத்தம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பிரச்சனை

பிரச்சனை

போனில் எவ்வித பிரச்சனை ஏற்ப்பட்டாலும், அதனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும் போது பாதி பிரச்சனைகள் சரியாகி விடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
How to Protect Your Smartphone from Damage. Here you will find some easy and simple steps to Protect Your Smartphone from Damage.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X