Home
Gadgets

சும்மா கிழி.. இவ்ளோ கம்மி விலைக்கு 30W அவுட்புட், 12 மணிநேர பேட்டரி, IP67 ரேட்டிங், ப்ளூடூத் 5.4-ஆ!

ப்ளூடூத் ஸ்பீக்கரில் தங்களுக்கு பிடித்த பாடல்களை போட்டுகொண்டு, ஆங்காங்கே (சில நேரங்களில் வெளிப்புறங்களில், சில நேரங்களில் வீட்டுக்கு உள்ளேயும்) அட்டகாசம் செய்து கொண்டு இருக்கும் இசை பிரியர்களே.. ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மொக்கை ஆகிவிட்டது என்றால்.. ஒரு தரமான, புதிய ஸ்பீக்கரை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால்.. டிசம்பர் 9 வரை காத்திருக்கவும்!

ஏனென்றால் அன்றுதான் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரை (Xiaomi Sound Outdoor Speaker) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது டிசம்பர் 9 ஆம் தேதி நடக்கும் ஷாவ்மீ இந்தியாவின் வெளியீட்டு நிகழ்வில் (Xiaomi India December 9 Launch Event) அறிமுகமாகும் 5 புதிய தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சும்மா கிழி.. இவ்ளோ கம்மி விலைக்கு 30W அவுட்புட், 12 மணிநேர பேட்டரி-ஆ!

இந்நிகழ்வில் மொத்தம் 3 மாடல்களை உள்ளடக்கிய ரெட்மி நோட் 14 சீரீஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரெட்மி பட்ஸ் 6 (Redmi Buds 6) இயர்பட்ஸ்களுடன் சேர்த்து ஷாவ்மீ சவுண்ட் அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கரும் அறிமுகம் செய்யப்படவுள்ளது ஷாவ்மீ சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது மொத்தம் மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது: பிளாக், ரெட் மற்றும் ப்ளூ.

இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டியை (Bluetooth 5.4 Connectivity) வழங்கும் மற்றும் ஸ்டீரியோ சவுண்டிற்காக (Streo Sound) மற்ற ஸ்பீக்கர்களுடன் பேரிங் (Paring) ஆகும் ஆதரவையும் கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 100 ஸ்பீக்கர்களுடன் சிங்க் (Sync) ஆகும்!

ரப்பர் லேன்யார்டு (Rubber lanyard) மற்றும் சிலிக்கான் ஆன்டி-ஸ்லிப் பேட் (Silicon Anti-slip pad) ஆகியவைகளுடன் வரும் ஷாவ்மீ சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது ஐபி67-ரேட்டிங் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP67 water and dust resistance) கட்டமைப்பை கொண்டுள்ளது . பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 சதவீத வால்யூமில் (50% Volume) 12 மணிநேரம் வரையிலான பிளேபேக் நேரத்தை (12Hrs Playback time) வழங்கும்

இந்த ஸ்பீக்கரில் மைக்ரோஃபோன்கள் (Microphones) உள்ளன மற்றும் ப்ளூடூத்துக்கான பிரத்யேக பட்டனும் (Bluetooth Button) உள்ளது. எல்லாவற்றை விட முக்கியமான - ஸ்மார்ட் ஸ்டீரியோ காம்போவாக (Smart stereo Combo) பயன்படுத்த இரண்டு ஷாவ்மீ சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர்களை ஆட்டோமேட்டிக் ஆக இணைக்கும் ஆதரவும் இதில் உள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 60Hz முதல் 20KHz வரையிலான ப்ரெக்வன்சி ரேஞ்சை, 80dB சிக்னல்-டு-நாய்ஸ் விகிதத்தையும் (signal-to-noise ratio) கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் 2600mAh லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அளவீடுகளை பொறுத்தவரை இது 196.6x68x66 மிமீ மற்றும் எடையில் 597 கிராம் இருக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஷாவ்மீ சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஏற்கனவே இந்தியாவிற்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இது ரூ.6000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விவரங்கள் டிசம்பர் 9 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிவிக்கப்படும்.

இதோடு அறிமுகமாகும் ரெட்மி நோட் 14 சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) உடன் சேர்த்து வெண்ணிலா வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 (Redmi Note 14) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகலாம். ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், கடந்த 2024 செப்டம்பரில் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து எந்த குழப்பமும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Sound Outdoor Bluetooth Speaker with 30W 12Hrs Battery IP67 India Launch on December 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X