Redmi ருத்ர தாண்டவம்.. இந்த விலைக்கு.. 6200mAh பேட்டரி, 120Hz OLED டிஸ்பிளே, 50MP டெலி கேமரா, 90W சார்ஜிங்-ஆ!
ஒவ்வொரு ஆண்டும் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களாக - ரெட்மி நோட் சீரீஸ் மாடல்கள் உள்ளன. அப்படியாக 2024 ஆம் ஆண்டு மாடல்களான ரெட்மி நோட் 14 சீரீஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்கள் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 14 சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும் அல்லது ரெட்மி நோட் 14 (Redmi Note 14) உடன் சேர்த்து மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகலாம். ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், கடந்த 2024 செப்டம்பரில் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து எந்த குழப்பமும் இல்லை.

ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ரெட்மி நோட் 14 சீரீஸின் அனைத்து மாடல்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகியவைகள் முறையே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 மற்றும் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்களால் இயக்கப்படும்.
ஒருவேளை இந்தியாவில் ரெட்மி நோட் 14 மாடலும் அறிமுகமானால், அது மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட்டை பேக் செய்யும். கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா பகிர்ந்து கொள்ளப்படும்.
முக்கிய வேறுபாடாக நோட் 14 ப்ரோ பிளஸ் மாடலில் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். மறுகையில் உள்ள ப்ரோ மாடலில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இடம்பெறும். பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரியை கொண்டிருக்கும். ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
ரெட்மி நோட் 14 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990 முதல் தொடங்கலாம். அடுத்ததாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ரூ.16,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது ரூ.22,990 க்கு வெளியாகலாம்.
நேற்று (நவம்பர் 20) தான் ஷாவ்மீ நிறுவனம் அதன் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.8,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.9,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








