Home
Gadgets

நீ சீனாக்காரன் இல்ல மூளைக்காரன்.. 40 மணிநேர பேட்டரி, 100 லெவல் ஸ்பீட்.. Xiaomi மினி ஃபேன் அறிமுகம்.. விலை?

குருநாதா.. எல்லா அறிமுகங்களும் அங்கே மட்டும் தானா.. உங்கள் கடைக்கண் பார்வை எங்கள் மீதும் கொஞ்சம் விழக்கூடாதா என்று ஷாவ்மீ நிறுவனத்தை பார்த்து கேட்கும்படியாக, இந்நிறுவனம் "மேலும்" ஒரு சூப்பர் தயாரிப்பு சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ மிஜியா ஹேண்ட்லெட் ஃபேன் (Xiaomi Mijia Handheld Fan) ஆகும்.

மிகவும் சமீபத்தில் தான் ஆஹா.. இதெல்லாம் இந்தியாவில் அறிமுகம் செய்ய மாட்டிங்களா என்று பொறாமைப்படும் அளவிற்கு ஒரு க்யூட் ஆன 10000mAh பவர் பேங்க் மாடலை, ஷாவ்மீ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்திருந்தது. அதை தொடர்ந்து மிஜியா ஹேண்ட்லெட் ஃபேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

40 மணிநேர பேட்டரி, 100 லெவல் ஸ்பீட்.. Xiaomi மினி ஃபேன் அறிமுகம்!

ஷாவ்மீ மிஜியா ஹேண்ட்லெட் ஃபேன் விலை: சீனாவில் இது 199 யுவான் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2810 ஆகும். இந்த ஃபேன் தற்போது ஜேடி.காம் (JD.com) வழியாக முன்பதிவு செய்ய கிடைக்கிறது, மேலும் ஜூன் 10 முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஷாவ்மீ மிஜியா ஹேண்ட்லெட் ஃபேன் அம்சங்கள்: அளவீட்டில் 63 x 64 x 167 மிமீ மற்றும் 260 கிராம் எடையும் கொண்ட ஷாவ்மீ மிஜியா ஹேண்ட்லெட் ஃபேன் ஆனது ஒரு சாதாரண ஸ்மார்ட்போனின் அளவு மற்றும் எடைக்கு நிகரானதாக உள்ளது.

எளிதாக எடுத்து செல்வதற்காக, ஷாவ்மீ நிறுவனமானது ஒரு பிரிக்கக்கூடிய ஷோல்டர் ஸ்ட்ராப்பையும் (detachable shoulder strap) வழங்குகிறது. இதன் மூலம் - பயனர்களால் இதை உடலின் குறுக்கே அணியவும், ஒரு பை உடன் இணைக்கவும் அல்லது கையில் எடுத்து செல்லவும் முடியும்.

மேலும், இதில் வழக்கமான புஷ்-பட்டனுக்கு பதிலாக ஒரு ஸ்லைடிங் பவர் ஸ்விட்ச் உள்ளது. ஷோல்டர் பேக் அல்லது கைப்பையில் வைக்கும்போது, ​​மின்விசிறி தற்செயலாக இயங்கி பேட்டரியை தீர்ப்பதை தடுப்பதற்காக இந்த வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஷாவ்மீ மிஜியா ஹேண்ட்லெட் ஃபேனின் உள்ளே, ஒரு மிக்ஸ்டு-ப்ளோ இம்பெல்லருடன் இணைக்கப்பட்ட ஒரு டிசி மோட்டாரை பயன்படுத்துகிறது.

ஷாவ்மீயின் கூற்றுப்படி, இந்த அமைப்பு 250m³/h காற்றோட்ட வெளியீட்டையும், 8.5m/s என்ற அதிகபட்ச காற்றின் வேகத்தையும் உருவாக்குகிறது. இந்த டிவைஸ் 5 மீட்டர் தூரம் வரை காற்றைத் தள்ளும் திறன் கொண்டது, இது முகாம், மலையேற்றம் அல்லது வரிசையில் நிற்பது போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஷாவ்மீ கூறுகிறது

அதிகபட்ச வேகத்தில், இந்த ஃபேனின் இரைச்சல் அளவு ≤69dB(A) என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மலிவு விலை கையடக்க மின்விசிறிகளில் காணப்படும் வழக்கமான த்ரீ-ஸ்பீட் டாகில்-க்கு பதிலாக, மிஜியாவின் இந்த மினி ஃபேனில் 100-லெவல் ஸ்டெப்லெஸ் ஸ்பீட் அடஜஸ்ட்மென்ட் (100-level stepless speed adjustment) அம்சம் உள்ளது. இது பயனர்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப காற்றோட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்ய அனுமதிக்கிறது.

இந்த செட்டிங்ஸ்களை நிர்வகிக்க உதவும் வகையில், கைப்பிடியில் பில்ட்-இன் எல்இடி டிஜிட்டல் டிஸ்பிளே ஒன்றும் உள்ளது, இது தற்போதைய ஸ்பீட் லெவல் மற்றும் மீதமுள்ள பேட்டரி சதவீதத்தை காட்டுகிறது. இந்த ஃபேன் 5,000mAh லித்தியம்-அயன் பேட்டரியில் இயங்குகிறது. மிகக் குறைந்த வேக அமைப்பில், இது 40 மணிநேரம் வரை செயல்படும் என்று ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது

பேட்டரியின் மதிப்பிடப்பட்ட ஆற்றல் திறன் 18.5Wh ஆகும் என்பதால், இது விமான நிறுவனங்களின் வழக்கமான கையடக்க பயண வரம்புகளுக்குள் அடங்குவதால், இதை விமானங்களில் எடுத்துச் செல்லலாம். யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யப்படும் இது ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது; 10 நிமிட சார்ஜில் நான்கு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என ஷாவ்மீ கூறுகிறது. மேலும், பயணம் செய்யும்போது வழக்கமான பவர் பேங்க்களை பயன்படுத்தியும் இதை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Handheld Fan With 40 Hours Battery 100 Speed Levels Launched in China Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X