மலிவு விலையில் அறிமுகமான சியோமி 8கே பிளேபேக் டிவி மாடல்கள்.!

|

சியோமி நிறுவனத்தின் அனைத்து டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது, இதை வைத்து அதிக வருமானத்தை இந்தியாவில் பெருகிறது சியோமி நிறுவனம். இந்நிலையில் சியோமி நிறுவனம் மலிவு விலையில் மி Full Screen 43-இன்ச், 55-இன்ச் 65-இன்ச் 4கே டிவி மாடல்களை சீனாவில் மலிவு அறிமுகம் செய்துள்ளது.

8கே வீடியோ பிளே பேக்

8கே வீடியோ பிளே பேக்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் 8கே வீடியோ பிளே பேக் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு துல்லியமான வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும். மேலும் இந்த சாதனங்களைப் பற்றிய முழுவிபரங்களைப் பார்ப்போம்.

எச்டிஆர் 10 ஆதரவு

எச்டிஆர் 10 ஆதரவு

சியோமியின் மி Full Screen 43-இன்ச், 55-இன்ச் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக 3840 X 2160பிக்சல் திர்மானம் மற்றும் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. பின்பு எச்டிஆர் 10 ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான கேமராக்களுடன் ரியல்மி X2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!மிரட்டலான கேமராக்களுடன் ரியல்மி X2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

32ஜிபி உள்ளடக்க மெமரி

32ஜிபி உள்ளடக்க மெமரி

சியோமியின் மி Full Screen 43-இன்ச், 55-இன்ச் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கமெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 9-ஜென் பட செயலாக்க இயந்திரத்துடன் இயக்கப்பட்ட 8கே வீடியோ பிளேபேக்கை ஆதரிக்கின்றன.

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி புதிய ஸ்மார்ட் டிவிகள் 1.9ஜிகாஹெர்ட் அம்லோஜிக் கார்டெக்ஸ் குவாட்-கோர்ஏ55 டிஎன்972 12என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எப்போதும் போல பேட்ச்வால் ஆதரவு கொண்ட
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளாகவெளிவந்துள்ளது இந்த புதிய சியோமி டிவிகள்.

ரூ.8,990-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் அட்டகாசமான விவோ U10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆடியோ மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஆடியோ மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனங்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ மற்றும் டால்பி ஆடியோ இடம்பெற்றுள்ளன. பின்பு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட், வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

மி Full Screen 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 1499 yuan: இந்திய மதிப்பில் ரூ.14,930-ஆக உள்ளது.
மி Full Screen 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 2399 yuan: இந்திய மதிப்பில் ரூ.23,800-ஆக உள்ளது.
மி Full Screen 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 3399 yuan: இந்திய மதிப்பில் ரூ.34,000-ஆக உள்ளது.

அதன்படி சியோமி நிறுவனம் இப்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் மலிவு விலையில்வெளிவருமா என பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Full Screen TV Pro series with 8K video playback announced and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X