ரூ.8,990-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் அட்டகாசமான விவோ U10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் இந்தியாவில் தனது விவோ U10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் 5000எம்ஏஎச் பேட்டரி, மூன்று ரியர் கேமரா ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

செப்டம்பர் 29
மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்புஅமேசான் வலைதளத்தில் குறிப்பிட்ட சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும். குறிப்பாக ஜியோநிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போனுக்கு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இப்போது விவோ U10 ஸ்மார்ட்போனின்சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
விவோ U10 ஸ்மார்ட்போனில் 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு
விவோ U10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பிடெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ ரு10 ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் 18வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது, பின்புடூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ U10 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,990/-
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U10ஸ்மார்ட்போன் விலை ரூ.9,990/-
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U10 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,990/-


Click it and Unblock the Notifications