Home
Gadgets

வாழ்க்கையில் அன்றாடம் உதவும் ஆச்சரியமான பொருட்கள்

உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒருசில வித்தியாசமான டெக்னாலஜி சாதனங்கள் மற்றும் கேட்ஜெட்டுக்கள

By Siva

தற்போதைய டெக்னாலஜி உலகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சரியத்தை நமக்கு கொடுத்து வருகிறது. நீங்கள் உண்மையில் ஒரு டெக்னாலஜி பிரியராக இருந்தால் இதைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளும் ஆவலில் இருப்பீர்கள். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும், தவறுகள், சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு டெக்னாலஜி மிக எளிதான தீர்வை நமக்கு அளித்து வருகின்றன.

வாழ்க்கையில் அன்றாடம் உதவும் ஆச்சரியமான பொருட்கள்

இந்த ஆச்சரியமான வசதிகள் குறித்து தெரியாதவர்கள் தான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இது தெரிந்தவர்கள் மிக எளிதாக தங்களுடைய பிரச்சனைகளை சந்தித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 : வடிவமைப்பு, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!?

இந்நிலையில் நம்மை மட்டுமின்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒருசில வித்தியாசமான டெக்னாலஜி சாதனங்கள் மற்றும் கேட்ஜெட்டுக்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஸ்மார்ட் டேக் மினி டிராக்கர் (Smart Tag Mini Tracker)

ஸ்மார்ட் டேக் மினி டிராக்கர் (Smart Tag Mini Tracker)

நீங்கள் ஒரு விலை உயர்ந்த பொருட்களை தொலைத்து விட்டீர்களா? அல்லது ஞாபகம் மறதியால் எங்கேயாவது வைத்து விட்டீர்களா? உடனே அதை கண்டுபிடிக்க காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான சாதனம் தான் இந்த

ஸ்மார்ட் டேக் மினி டிராக்கர். இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து கொண்டு இந்த டிராக்கரை வாங்கி புளூடூத்தில் அல்லது கூகுள் மேப் மூலம் தொலைந்த பொருட்களை டிராக் செய்து கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 20 சாதனைகளை இதில் இணைத்து கொள்வதோடு ஒரே நேரத்தில் 6 சாதனங்களை டிராக் செய்யலாம்.

சியாமி ஸ்க்ரீன் டச் குளோவ்ஸ்கள்:

சியாமி ஸ்க்ரீன் டச் குளோவ்ஸ்கள்:

சியாமி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த டச் ஸ்ம்ரீன் குளோவ்ஸ்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் நாம் அதிக நேரம் பயன்படுத்தும்போது போனில் உள்ள டிஸ்ப்ளே மற்றும் நமது விரல்கள் இந்த குளோவ்ஸ்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஹை குவாலிட்டியில் இந்த டச் குளோவ்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

குறட்டை விடுவதை தடுக்கும் சாதனம் (Electronic Snore Stopper Biosensor)

குறட்டை விடுவதை தடுக்கும் சாதனம் (Electronic Snore Stopper Biosensor)

தூங்கும்போது குறட்டை விடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. குறட்டையால் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் விவாகரத்து செய்யும் அளவிற்கு இந்த விஷயம் சீரியஸாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த குறட்டையை தடுக்க எத்தனையோ மருத்துவ வழிகள் இருந்தாலும் இதனை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சாதனம் தான் இந்த எலக்ட்ரானிக் ஸ்னோரெ ஸ்டாப்பர் பயோசென்சார் என்று கூறப்படும் சாதனம்

இந்த சாதனம் வாட்ச்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறட்டை ஏற்படும்போது இந்த சாதனம் மூளைக்கு நரம்புகளின் மூலம் குறட்டையை தடுக்க வழிவகை செய்ய செய்கிறது.

உடனடியாக மூளை குறட்டை ஏற்படும் விதத்தை அறிந்து அதனை தடுக்கின்றது. உண்மையாகவே இது ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது.

சோனோஃப் (Sonoff)

சோனோஃப் (Sonoff)

வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் உங்கள் கைக்குள் அடங்க வேண்டுமா? உங்களுக்கு உதவும் ஒரு சாதனம் தன் இந்த சோனோஃப். இது ஒரு வயர்லெஸ் வைஃபை சாதனம்.

இந்த சாதனம் டேட்டாக்களை குளவுட் பிளாட்பார்ம் மூலம் செயல்பட்டு உங்கள் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை செயல்பட வைக்கின்றது. மேலும் இதை உங்களுடைய ஸ்மார்ட்போனில் இவிலிங்க் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்

இந்த சாதனம் இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்துவதோடு அதை குறிப்பிட்ட நேரத்தில் இயங்க செய்யவும், ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும், வைக்கலாம்.

ஸ்மார்ட் எல்.இ.டி லைட் ஹோல்டர்:

ஸ்மார்ட் எல்.இ.டி லைட் ஹோல்டர்:

இன்ஃப்ராரெட் சென்சார் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் எல்.இ.டி லைட் ஹோல்டர் நம் வீட்டின் மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்கும் ஒரு சாதனம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இந்த எல்.இ.டி லைட் ஹோல்டர் வீட்டிற்குள் நாம் நுழைந்ததும் லைட்டுக்களை ஆன் செய்ய உதவும். அதேபோல் வீட்டை விட்டு நாம் வெளியேறியதும் ஆஃப் செய்துவிடும். நாம் லைட்டை ஆப் செய்தோமா? இல்லையா? என்று குழம்பி தவிக்க வேண்டாம். மேலும் இந்த சாதனத்தின் சென்சார் ஐந்து முதல் பத்து மீட்டர் வரை செயல்படும் என்பதால் நம்முடைய வீட்டில் மிக உபயோகமாக இருக்கும்.

மேலும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் மேற்கண்ட சாதனங்களை ஷிப்பிங் சார்ஜ் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Wierd devices you can buy from AliExpress.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X