Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ்8 : வடிவமைப்பு, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!?

வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 புகைப்படத்துடன் அதன் குறிப்புகள் மற்றும் கருவியின் வெளியீட்டு தேதி ஆகிய அனைத்து விடயங்களும் கசிந்துள்ளது.

By Muthuraj

எப்படி வாடிக்கையாளர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்களோ அதே போல தான் சாம்சங் நிறுவனமும் அதன் பிராண்ட் பெயரை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் தனது கருவிகளை வெளியிட காத்திருக்கிறது.

அப்படியாக சாம்சங் நிறுவனத்திடம் இருந்து இந்த 2017-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஒன்றான - சாம்சங் கேலக்ஸி எஸ்8 அக்கருவியின் முதல் தெளிவான தோற்றத்தை வெளிக்காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 புகைப்படத்துடன் அதன் குறிப்புகள் மற்றும் கருவியின் வெளியீட்டு தேதி ஆகிய அனைத்து விடயங்களும் கசிந்துள்ளது. அதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

கருப்பு வண்ணம்

கருப்பு வண்ணம்

இவான் பிளாஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கசிவானது நிறைவான எஸ்8 கருவி குறிப்புகளை வழங்கியுள்ளது உடன் இவான் பிளாஸ் வழங்கும் தகவல்கள் எப்போதாவது தான் தவறாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள புகைப்படத்தில் முன் மற்றும் பின் முழு பக்க காட்சி முழுதும் கருப்பு வண்ணம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியாக உள்ளது.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

உடன் அனைத்து பக்கங்களிலும் தெரியும் எந்த பெசெல் பகுதிகளும் இன்றி ஒரு பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த அம்சமானது அனைத்து முந்தைய கசிவையும் ஒற்றுள்ளது. கருவியின் முன்பக்கம் ஹோம் பட்டன் காணவில்லை மற்றும் கைரேகை ஸ்கேனர் கேமராவிற்கு அருகாமையில் உள்ளது.

கேமரா

கேமரா

கருவியின் முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளேவிற்கு முக்கியத்துவம் வழங்கும் வண்ணம் சாம்சங் லோகோ கருவியின் பின்பக்கம் பொறிக்கப்பட்டுள்ளது. கேமரா துறையை பொருத்தமட்டில் 12-மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது.

ஸ்பீக்கர் கிரில்

ஸ்பீக்கர் கிரில்

வெளியான புகைப்படம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மீண்டும் இக்கருவியில் இடம்பெறுவதை வெளிப்படுத்துகிறது. மேலும், கேலக்ஸி எஸ்8 ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் கீழே முனையில் ஒரு ஸ்பீக்கர் கிரில் கொண்டுள்ளது.

பிக்ஸ்பை

பிக்ஸ்பை

பட்டங்கள் வடிவமைப்பில் தெளிவு இல்லை, ஆனால் ஒரு தனி வன்பொருள் பொத்தான் வலது விளிம்பில் காணப்படுகிறது அது அக்கருவியின் பிக்ஸ்பை (Bixby) அசிஸ்டன்ட் ஆக இருக்கலாம் என்று வதந்திகள் கிளம்பியுள்ளன.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கருவியின் பிற அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஒரு 5.7-அங்குல மற்றும் 6.2 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம் என்று வலியுறுத்துகின்றது. உடன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 835 செயலி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஜோடியாக கொண்டு இயங்கும்.

பேட்டரி

பேட்டரி

இந்த சாதனம் அதன் முன்னோடிகளை விட 11 மடங்கு வேகம், 23 சதவிகிதம் கிராபிக்ஸ் வேகம் மற்றும் 20 சதவீத அதிக பேட்டரி ஆகிய திறன்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இக்கருவியின் பேட்டரி திறன் 3500எம்ஏஎச் மற்றும் 3500 எம்ஏஎச் ஆகியவைகளுக்கு இடையே இருக்கும்.

டெக்ஸ்

டெக்ஸ்

8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டிருக்கும் இக்கருவி உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு மினி ஆண்ட்ராய்டு கணினியாக மாற்ற வல்ல டெக்ஸ் (DeX) என்ற சேவையுடன் வெளிவரவுள்ளது. லீக்ஸ் தகவலின்கீழ் வெளியீட்டு தேதியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி நியூயார்க் நகரில் நடக்கும் ஒரு நிகழ்வில் மார்ச் 29-ஆம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.!

புகைப்படங்கள் : இவான் பிளாஸ்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 Photo, Specifications, Release Date Leaked. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X