வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.
வியூ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய அட்டகாசமான 100-இன்ச் சூப்பர் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவவி ஆனது மிகப்பெரிய தொழில்நுட்ப வசதியுடன் மற்றும் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணட்ராய்டு 8.0 ஒஎஸ் மற்றும் விண்டோஸ் 10
வியூ நிறுவனத்தின் இந்த 100-இன்ச் சூப்பர் டிவி ஆனது ஆணட்ராய்டு 8.0 ஒஎஸ் மற்றும் விண்டோஸ் 10 உள்ளிட்டஇயங்குதளங்களுடன் இயங்குகிறது. பின்பு இந்த சாதனம் உள்ளமைக்கப்பட்ட டிவி ட்யூனரைப் பயன்படுத்து என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஸ்கைப் வீடியோ
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஸ்கைப் வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டுடன் வருகிறது மற்றும் பிசி பயன்பாட்டிற்கான QWERTY விசைப்பலகை
மற்றும் ஏர் மவுஸுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
போன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ப்ரிஜ் தெறிக்கவிட்ட அமேசான் தீபாவளி தள்ளுபடி.!

டால்பி மற்றும் டிடிஎஸ்
வியூ 100-இன்ச் சூப்பர் டிவியில் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் உள்ளடக்கிய வூஃபர்-கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இவை
இரண்டும் மொத்தமாக 2,000 வாட் ஆடியோவை வெளியிடுகின்றன என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோவையும் ஆதரிக்கிறது இந்த 100-இன்ச் சூப்பர் டிவி மாடல்.
பாப்-அப் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும்
குறிப்பாக இந்த வியூ நிறுவனத்தின் இந்த 100-இன்ச் சூப்பர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் அதேசமயம் ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5
இந்த வியூ 100-இன்ச் சூப்பர் டிவி மாடலின் மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராஸசர் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு மற்ற ஸ்மார்ட் டிவிகளை விட பல்வேறு புதிய ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது வியூ 100-இன்ச் சூப்பர் டிவி.

விலை 8லட்சம்
மூன்று யூ.எஸ்.பி போர்ட், ரிமோட் கண்ட்ரோல்.புளூடூத் 5.0. எச்டிஎம்ஐ, ஏவி, YPbPr மற்றும் RF உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த வியூ 100-இன்ச் சூப்பர் டிவி. மேலும் இந்த சாதனம் ஆரம்ப விலை 8லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் வியூ 100-இன்ச் சூப்பர் டிவி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications