பாப்-அப் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

அன்மையில் ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஹானர் நிறுவனம் இன்று தனது ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் அறிமுகம்

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என்ற அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் தரமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனங்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 1080 பிக்சல் திர்மானம்

1080 பிக்சல் திர்மானம்

ஹானர் விஷன் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் பாப் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த பாப்-அப் கேமரா 1080 பிக்சல் திர்மானம் மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு தகுந்தபடி படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் டிவியில் செல்பீ கேமரா என்பது தேவையில்லாத ஒன்றுதான் என பல்வேறு மக்கள் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழுவிபரங்கள்.!அட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழுவிபரங்கள்.!

3840x2160 பிக்சல் திர்மானம்

3840x2160 பிக்சல் திர்மானம்

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள்.
மேலும் ஹானர் விஷன் 6 ஸ்பீக்கர்கள்(10வாட்) ஆதரவும், ஹானர் விஷன் ப்ரோ 4 ஸ்பீக்கர்கள் (10வாட்)ஆதரவும் கொண்டு வெளிவருகிறது.

எச்டிஆர் பிளேபேக்

எச்டிஆர் பிளேபேக்

இந்த சாதனங்களில் டிஸ்பிளேக்கள் மங்கலான காட்சிகளை குறைக்கும் திறன் கொண்ட,எச்டிஆர் பிளேபேக் மற்றும் மோஷனை கூர்மைப்படுத்தும் ஒரு எம்இஎம்சி-ஐ (மோஷன் எஸ்டிமேட் மற்றும் மோஷன் காம்பன்சேஷன்) ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.!சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.!

 பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு

பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு

புதிய ஸ்மார்ட் டிவிகளில் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு புதிய ஸ்மார்ட் டிவிகளில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU வசதி இடம்பெற்றுள்ளன. மேலும் ஹானர் விஷன் சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளது,பின்பு ஹானர் விஷன் ப்ரோ சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது.

ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம்

ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம்

ஹானர் புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம்,மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரிமோட் கண்ட்ரோல்

ரிமோட் கண்ட்ரோல்

ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்இ ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரிமோட் கண்ட்ரோல் அணை ப்ளூடூத் வழியாகடிவியுடன் இணைகிறது மற்றும் அதில் வட்ட வடிவிலான டச்பேட் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. இது யூ.எஸ்.பி டைப்-சி வழியாக சார்ஜ் செய்யப்படுகிறது.

 இந்திய விலை?

இந்திய விலை?

ஹானர் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் இந்திய விலை ஆனது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.38,200-என்றும், பின்பு ஹானர் விஷன் ப்ரோ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.48,300-எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Best Mobiles in India

English summary
Honor Vision, World’s First Smart TV With AI Pop-Up Camera Launched In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X