Home
Gadgets

அண்ணன் வந்தா Power அடி.. 7-இன்ச் டிஸ்பிளே + 8000mAh பேட்டரி காம்பினேஷனில் புது POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ (POCO) நிறுவனம் ஆனது, இந்திய சந்தையில், 8000எம்ஏஎச் பேட்டரி உடனான ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுக செய்ய தயாராகி வருகிறது. அது போக்கோ எம்8 பவர் (POCO M8 Power) மாடல் ஆகும் இது மிகவும் சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 17 (Redmi Note 17) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம்.

அதாவது ரெட்மி நோட் 17 5ஜி மாடலில் உள்ள பெரும்பாலா அம்சஙகள் போக்கோ எம்8 பவர் மாடலில் இடம்பெறலாம். ஆனால் அது ரெட்மி நோட் 17 என்கிற மாடல் பெயருக்கு பதிலாக இந்தியா மற்றும் மற்ற உலகளாவிய சந்தைகளில் போக்கோ பிராண்டட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படலாம்.

7-இன்ச் டிஸ்பிளே + 8000mAh பேட்டரி காம்பினேஷனில் புது POCO 5ஜி போன்!

போக்கோ எம்8 பவர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 (Qualcomm Snapdragon 4 Gen 4) சிப்செட்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- 1,800 நிட்ஸ் (nits) பீக் ப்ரைட்னஸ்
- 2396 x 1080 ரெசல்யூஷன்
- பெரிய 7-இன்ச் OLED டிஸ்பிளே

டிஸ்பிளேவின் அளவை தவிர, இதன் 8000mAh பேட்டரி மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற. இந்திய மாடலிலும் இந்த பேட்டரி திறன் மாற்றமின்றி இருக்கும் என்று சமீபத்திய லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சீனாவிற்கு வெளியே ஷாவ்மீ பேட்டரி திறனை குறைக்கக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது, ஆனால் சமீபத்திய ஃபார்ம்வேர் (firmware) தகவல்கள், சீன மாடலில் உள்ள அதே பெரிய பேட்டரியை இந்திய வாடிக்கையாளர்களும் பெறக்கூடும் என்பதை காட்டுகின்றன.

எதிர்பார்க்கப்படும் பிற சிறப்பம்சங்களில் 8ஜிபி வரை ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங், IP65 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன், என்எப்சி (NFC) மற்றும் ஏஐ அடிப்படையிலான ஆன்ட்டி-ஃபிராட் அம்சங்கள் ஆகியவைகளும் அடங்கும்.

OPINION: தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​பெரிய OLED டிஸ்பிளே மற்றும் 8000mAh பேட்டரி ஆகியவற்றின் கலவையானது, பட்ஜெட் 5ஜி பிரிவில் உள்ள போட்டியாளர்களை விட போக்கோ எம்8 பவர் மாடலுக்கு ஒரு தெளிவான சாதகமான இடத்தை அளிக்கக்கூடும்; ஏனெனில், இப்பிரிவில் பேட்டரி அளவுகள் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், ஸ்க்ரீனில் அளவு பொதுவாக 6.8-இன்ச் என்கிற அளவிவிற்கு உள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: சீனாவில், இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.20,000 க்கும், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.23,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- Android 16 அடிப்படையிலான HyperOS 3
- டூயல் சிம் ஆதரவு
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7-இன்ச் Full-HD+ OLED டிஸ்பிளே
- ஈரமான விரல்களிலும் சிறப்பாக செயல்படும் Wet Touch 2.0 தொழில்நுட்பம்

- தூசி மற்றும் நீர் புகாத பாதுகாப்பிற்கான IP65 ரேட்டிங்
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட்
- Adreno GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம்
- 256GB வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ்

- டிஸ்பிளேவிற்கு உள்ளேயே அமைந்த ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் (face unlock) வசதி
- எப்/1.8 அப்பர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.0 அப்பர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 1080p/30 fps தரத்தில் வீடியோ பதிவு
- 8,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி
- 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, Bluetooth 5.1, USB Type-C போர்ட், GPS, GLONASS மற்றும் Galileo
- அளவீட்டில் 169.7x79.14x8.26 மிமீ
- எடையில் 225 கிராம்

Best Mobiles in India

English summary
POCO M8 Power India Launch Soon With Same 8000mAh Battery in Redmi Note 17 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X