54 மணிநேர பேட்டரி, IP55 ரேட்டிங் உடன் புதிய Oppo இயர்பட்ஸ் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை வயர்லெஸ் இயர்பட்ஸை சீனாவில் வெளியிட்டுள்ளது. அது ஒப்போ என்கோ ஏர் 5 (Oppo Enco Air 5) இயர்பட்ஸ் மாடல் ஆகும். சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போவின் பெரும்பாலான இயர்பட்ஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், ஒப்போ என்கோ ஏர் 5 பட்ஸ் மாடலும் இங்கே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த விலை பிரிவுக்கு ஏற்றவாறு, இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பேட்டரி லைஃப் ஆகியவற்றில் முதன்மையாக கவனம் செலுத்தி, நடைமுறைக்கு ஏற்ற அம்சங்களை வழங்குகின்றன.

ஒப்போ என்கோ ஏர் 5 இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்: இது ஒயிட், பிளாக் மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 இயர்பட்ஸ்களில் 5,000Hz ப்ரெக்வன்சி ரேன்ஜை உள்ளடக்கிய 52dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) உள்ளது.
போன் கால்களின் போது பயனரின் குரலை தனிமைப்படுத்த, இந்த இயர்பட்ஸ்கள் மூன்று மைக்ரோஃபோன் அமைப்பையும் பயன்படுத்துகின்றன. மேலும் மணிக்கு 25 கி.மீ. வரையிலான காற்றின் வேகத்திலும் கூட, ஒப்போ என்கோ ஏர் 5 மாடலன் குரலின் தெளிவை பராமரிக்க முடியும் என்று ஒப்போ நிறுவனம் கூறுகிறது.
என்கோ ஏர் 5 இயர்பட்ஸ்களில், வலுவான பேஸ் மற்றும் தெளிவான ஹைஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட 12மிமீ டைனமிக் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தனிப்பயனாக்கப்பட்ட சவுண்ட் ட்யூனிங்கிற்கான 10-பேண்ட் கஸ்டம் EQ-வை கொண்டுள்ளன, AAC மற்றும் SBC கோடெக்குகளை ஆதரிக்கின்றன, மேலும் பிரத்யேக கேமிங் சவுண்ட் எபெக்ட்களுடன் ஸ்பேஷியல் ஆடியோவையும் உள்ளடக்கி உள்ளன.
இதன் ஒவ்வொரு இயர்பட்டும் 4.3 கிராம் எடையை கொண்டுள்ளது. மேலும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. அதாவது, உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை அல்லது லேசான மழையை இவைகளால் தாங்க முடியும். சார்ஜிங் கேஸ் ஒப்பீட்டளவில் சிறியதாக உள்ளதும், இதன் எடை 43.5 கிராம் ஆகும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 பட்ஸ் ஆனது ப்ளூடூத் 6.1-ஐ ஆதரிக்கிறது. அன்றாட பயன்பாட்டிற்காக, இது டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஒரு போன் மற்றும் டேப்லெட்டிற்கு இடையில் தடையின்றி ஆடியோவை மாற்றிக்கொள்ள முடியும். கேமிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்காக 47ms லோ லேடன்சி மோட்-ஐயும் கொண்டுள்ளது.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, ஒப்போ என்கோ ஏர் 5 பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 மணிநேரம் வரையிலும், சார்ஜிங் கேஸுடன் 54 மணிநேரம் வரையிலும் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. ANC இயக்கப்பட்டால், பேட்டரி லைஃப் இயர்பட்களுக்கு 6.5 மணிநேரமாகவும், மொத்தமாக 27 மணிநேரமாகவும் குறைகிறது.
இது ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது; 10 நிமிட டாப்-அப் மூலம் நான்கு மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை பெறலாம் என்று ஒப்போ கூறுகிறது. இந்த இயர்பட்ஸ்களில், காதுக்குள் இருப்பதை கண்டறியும் வசதி ஆன இன்-இயர் டிடெக்ஷன், ரிமோட் கேமரா கண்ட்ரோல், தனிப்பயனாக்கக்கூடிய டச் கண்ட்ரோல்கள் மற்றும் 24 மொழிகளுக்கான ஏஐ-பவர்டு மொழிபெயர்ப்பு போன்ற சில ஸ்மார்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இதுபோன்ற லேட்டஸ்ட் இயர்பட்ஸ் தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் LHDC ஆடியோ ஆதரவு மற்றும் 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கூடிய மோட்டோ பட்ஸ் 2-ஐ இந்தியாவில் மே 25 அன்று அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இதற்கிடையில் நேற்று ஐக்யூ நிறுவனம் அதன் ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது.


Click it and Unblock the Notifications