iQOO கொம்பன் இறங்கிட்டான்.. 50 மணிநேர பேட்டரி Buds.. 13000mAh பேட்டரி Tablet.. 8000mAh பேட்டரி Phone அறிமுகம்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் ஒரே நேரத்தில் - ஒன்பிளஸ் 15டி-க்கு எதிரான புதிய ஸ்மார்ட்போன், 13000mAh பேட்டரி கொண்ட புதிய டேப்லெட் மற்றும் ஆளுக்கு 2 ஆர்டர் போடும் பக்கா பட்ஜெட்டில் புதிய இயர்பட்ஸ் என - 3 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து சீன சந்தையை சிதறவிட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் - ஐக்யூ 15டி மாடல் ஆகும். புதிய டேப்லெட் - ஐக்யூ பேட் 6 ப்ரோ மாடல் ஆகும். புதிய இயர்பட்ஸ் - ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ மாடல் ஆகும். இவைகளில் ஐக்யூ 15டி கண்டிப்பாக, 100% இந்திய சந்தைக்கு வரும். ஏனென்றால் ஐக்யூ 13டி மாடல் இந்தியாவில் முடிந்த வேகத்தில் அறிமுகமானது.

ஐக்யூ பேட் 6 ப்ரோ டேப்லெட்டின் அறிமுகம் சந்தேகம் தான். ஏனென்றால் இந்திய சந்தையில் ஐக்யூ டேப்லெட்கள் அறிமுகமானது இல்லை. கடைசியாக உள்ள ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ இந்தியாவிற்கு வரவும் சில வாய்ப்புகள் உள்ளன. நினைவூட்டும் வண்ணம் கடைசியாக இந்தியாவில் , 2024 இல் ஐக்யூ டிடபுள்யூஎஸ் 1இ அறிமுகமாகி இருந்தது. இது பட்ஜெட் விலை கஸ்டமர்களை அதிகம் ஈர்த்ததால், புதிய மாடலும் இந்திய சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.
ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ இயர்பட்ஸ் விலை என்ன? ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ இயர்பட்ஸ் மாடல் ஆனது சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஷார்ப் யெல்லோ என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் மட்டுமே வெளியாகி உள்ளது.
ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்:
- மான்ஸ்டர் சவுண்ட் கேமிங் ஆடியோ
- டீப்எக்ஸ் 3.0 ஸ்டீரியோ சவுண்ட்
- ஸ்பேஷியல் ஆடியோ
- AAC, SBC மற்றும் LC3 கோடெக்ஸ் ஆதரவு
- 10 மீட்டர் ப்ளூடூத் ரேன்ஜ் உடனான ப்ளூடூத் 5.4 இணைப்பு
- ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆதரிக்கவில்லை என்றாலும், இன்-இயர் ஸ்டைல் இயர்போன்ஸ் ஏஐ நாய்ஸ் ரிடக்ஷனை வழங்குகின்றன
- ஒவ்வொரு இயர்பட்டிலும் தலா ஒன்று என 10மிமீ டைனமிக் டிரைவர்கள்
- ஒரே சார்ஜில் 11.5 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- சார்ஜிங் கேஸுடன் ஒரே சார்ஜில் 50 மணிநேரம் வரை பேட்டரி
ஐக்யூ பேட் 6 ப்ரோ டேப்லெட் விலை:
பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.64,000
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - சுமார் ரூ.71,000
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - சுமார் ரூ.83,000
ஹை-எண்ட் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.95,000
ஐக்யூ பேட் 6 ப்ரோ டேப்லெட் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6
- 13.2-இன்ச் 4கே எல்சிடி டச் ஸ்க்ரீன்
- குவால்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 13 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட பனோரமிக் அக்யூஸ்டிக் சிஸ்டம்
- 3டி கூலிங் சிஸ்டம்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 13,000mAh பேட்டரி
- வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- ஃபேஸ் அன்லாக் வசதி
- அளவீட்டில் 297.03x199.82x6.18மிமீ
- எடையில் சுமார் 663 கிராம்
ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் விலை:
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி - இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி - சுமார் ரூ.64,000
16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி - சுமார் ரூ.68,000
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி - சுமார் ரூ.74,000
16ஜிபி ரேம் மற்றும் 1டிபி - இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.85,000
ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.82-இன்ச் 2கே ரெசல்யூஷன் LTPO AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 9500 மான்ஸ்டர் எடிஷன் சிப்செட்
- CIPA 4.5-லெவல் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4x லாஸ்லெஸ் ஜூம் வசதியுடன் கூடிய 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications