120Hrs பேட்டரி லைஃப், டைட்டானியம் பெஸல்.. OnePlus-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்.. அசரடிக்கும் விலை!
ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மற்றும் ஒன்பிளஸ் ரசிகர்களின் முழு கவனமும் ஒன்பிளஸ் 13 மினி மீது இருக்கும் நேரத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆன ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) மாடலின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.
கடந்த பல வாரங்களாக பல வகையான லீக்ஸ்களில் சிக்கிய இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் உலகளாவிய வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் வடிவமைப்பு மற்றும் பேட்டரி லைஃப் உட்பட பல முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் வாட்ச் 3 ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் பிப்ரவரி 18 அன்று, இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும். ஒன்பிளஸ் வாட்ச் 3 ஆனது பிளாக் மற்றும் க்ரீன் ஆகிய 2 ஸ்ட்ராப் கலர்களில் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வெளியிடப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
டிசைனை பொறுத்தவரை ஒன்பிளஸ் வாட்ச் 3 ஆனது சபையர் கிரிஸ்டல் மற்றும் டைட்டானியம் பெஸல் உடன் வரும். இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ள ஸ்மார்ட் மோட்-ன் கீழ் இது 5 நாட்கள் (120 மணிநேரம்) என்கிற பேட்டரி லைஃபை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலில் உள்ளதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆனது ஸ்மார்ட் மோட்-ன் கீழ் 100 மணிநேர பயன்பாட்டு நேரத்தை வழங்குவதாக என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆனது இந்தியாவில் ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் விலை ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கலாம். இது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்!
ஒன்பிளஸ் 13 மினி எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) மாடலுக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அதற்கு "மினி" பெயரும் கூட ஒரு முக்கிய காரணமாகும். இது சற்றே சிறிய ஸ்மார்ட்போனாக, அதாவது 6.3-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் "டி" சீரீஸ் மாடலாக இருக்கும் என்றும், 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) மாடலுக்கு பின்னர் எந்த டி சீரீஸ் மாடலும் வரவில்லை என்பதை, அதை அப்படியே மினி சீரீஸ் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் தான் ஒன்பிளஸ் 13 மினி ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில டிப்ஸ்டர்கள் ஒன்பிளஸ் 13 மினி ஆனது மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றனர்; அதாவது அடுத்த மாதமே அறிமுகமாகும் என்கின்றனர். சிலர் இது 2025 ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகமாகும் என்கின்றனர். எப்படி பார்த்தாலும் இது இன்னும் அடுத்த 1 - 2 மாதங்களுக்குள் அறிமுகமாகி விடும். இந்தியாவில் இது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) நிறுவனமானது சைலன்ட் ஆக ஒரு சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் (OnePlus Red Rush Days Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த விற்பனை பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் பல ஒன்பிளஸ் போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








