Home
Mobile

பிப்.16 வரை.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. புது OnePlus 13, பழைய OnePlus 12 உட்பட 5 மாடல்கள் மீது அடேங்கப்பா ஆபர்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது சைலன்ட் ஆக ஒரு சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் (OnePlus Red Rush Days Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த விற்பனை பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விற்பனை ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் வழியாக நடக்கிறது. இந்த விற்பனையின் போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R), சற்றே பழைய ஒன்பிளஸ் 12 (OnePlus 12), பட்ஜெட் விலை மாடல் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) உட்பட பல ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கிறது.

புது OnePlus 13, பழைய OnePlus 12 உட்பட 5 மாடல்கள் மீது அடேங்கப்பா ஆபர்

ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர், ஒன்பிளஸ் 12 மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் 13 மீது ரூ.5,000 ரூபாய் உடனடி வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இதேபோல ஒன்பிளஸ் 13ஆர் மீது ரூ.3,000 தள்ளுபடியை பெற முடியும். ஒன்பிளஸ் 12 மீது ரூ.4,000 ரூபாய் உடனடி வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இதோடு சேர்த்து ரூ.3,000 பிளாட் தள்ளுபடியையும் பெற முடியும். இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பொருந்தும்

ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 வரை பிளாட் தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.4,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

இதேபோல், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 பிளாட் தள்ளுபடி சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் மீது ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது.

ஒன்பிளஸ் டேப்லெட்கள் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மீது ரூ.2,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் ஒன்பிளஸ் பெட் கோ (OnePlus Pad Go) மீது ரூ.3,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ஆனது ஒன்பிளஸ் ரெட் ரஷ் டே விற்பனையின் போது ரூ.1,000 தள்ளுபடி சலுகையின் கீழ் விற்கப்படும்

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Red Rush Days Sale 2025 Big Discounts on OnePlus 13 13R 12 Nord 4 Series Till Feb 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X